குஜராத்தின் ‘பூகம்பம் தாங்கும் வீடு ‘

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue


சென்ற வருடம் குஜராத்தில் தாக்கிய படுமோசமான பூகம்பத்தால் தூண்டப்பட்டு, ஒரு இந்திய பொறியியலாளர் குழு புதிய வீட்டை வடிவமைத்திருக்கிறது. இந்த வீடு எந்த பூகம்பத்தையும் தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த வீடுகள் மாநிலமெங்கும், மாநில அரசாங்கத்தாலும், தன்னார்வக்குழுவினராலும், இந்திய அரசாங்கத்தாலும் கட்டப்பட்டு வருகின்றன.

அன்ஜார், பச்சாவ், ராபார் போன்ற மாவட்டங்களில் இந்திய வர்த்தகக் கழகமும், கேர் இன்டர்நேஷனல் தன்னார்வக்குழுவும் இணைந்து சுமார் 6000 வீடுகளைக் கட்ட திட்டமிட்டிருக்கின்றன.

மற்ற பூகம்ப அழிவுப்பிரதேசங்களில் இருக்கும் கட்டட வடிவமைப்புகளை மாதிரியாகக்கொண்டு அமைக்கப்பட்ட இந்த கட்டடம், பூகம்ப அழிவை அளக்கும் அதிர்வு பரிசோதனைத்தளங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

கேர் இண்டர்நேஷனலில் தலைவர் சதீஷ் ஸின்ஹா அவர்கள் இந்த வீடு பொதுமக்களிடமிருந்து பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடுகள், சமையலறை உட்பட மூன்று அறைகள் கொண்டு, கிராமங்களில் வசிக்கும் மக்களின் ஆலோசனைகளையும் எடுத்துக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதே வடிவமைப்பில், கிராம மக்கள் கூடங்கள், பள்ளிகள், சுகாதார அமைப்புகளையும் கட்ட திட்டமிட்டுள்ளது இந்த நிறுவனம்.

Series Navigation

செய்தி

செய்தி