காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

எச்.பீர்முகம்மது


பெளத்தத்தின் வளர்ச்சியோடு தாந்திாீக மரபின் ஊடுருவல் பெளத்த கோட்பாட்டின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தியது. தாந்திாீக பெளத்தத்திற்கு வஜீராயனம் அல்லது மந்திராயனம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. புத்தாின் மரணத்திற்கு பிறகு பெளத்தத்தில் மகாயானம் ஹீனயானம் என்ற இரு பெரும் பிாிவுகள் ஏற்பட்டன. மகாயானம் பெளத்த கோட்பாட்டில் மிகப்பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. கி.பி. இரண்டாம் றூற்றாண்டில் இந்தியாவில் கிரேக்க மற்றும் பார்த்தலோமிய அரசுகளின் படையெடுப்பு இருந்தது. இந்த காலத்தில் தான் மகாயானம் இந்தியாவில் பரவியது.

ஹீனயானம் புத்தரை மனிதனாக பார்த்தது. மனித வாழ்க்கையின் / மனித நடைமுறையின் பிறழ்வுகளில் ஏற்படும் காயங்களுக்கு மருந்தளிக்கும் நபராக புத்தரை பார்த்தது. அந்த காயம் என்பது மனித வாழ்க்கையின் தன்னிலையிருந்து ஏற்படலாம். அல்லது புற நிலையிலிருந்து ஏற்படலாம். தன்னிலைக்குள் ஊடுருவலாகவோ/ பற[நிலையின் தினிப்பாகவோ இருக்கலாம். ஆனால் மகாயானமோ புத்தரை மனித நிலையிலிருந்து மாமனித நிலைக்கு உயர்த்தியது. மாமனித நிலை மேற்கின் நீட்சேயிசத்தோடு ஒத்தது. புத்தர் பரலோகத்தில் உறைந்திருக்கிறார் என்றும் அனைத்தையும் கட்டப்படுத்தும் சக்தியைப் பெற்றிருக்கிறார் என்பதும் அதன் கோட்பாடு. போதி சத்துவம் என்ற தெய்வீக தன்மையை அது முன்னிறுத்தியது. மகாயானத்தின் இந்த போதிசத்துவ தெய்வீக தன்மையின் தொடர்ச்சியில் பல போதிசத்துவர்கள் உருவாயினர். இந்த மகாயான பிாிவு திபெத்/ சீனா/ பர்மா/ ஜப்பான் ஆகிய நாடுகளில் மிகுந்த தாக்கம் செலுத்தியது.

திபெத்தியர்கள் மகாயானத்திற்கும் தாந்திாீக பெளத்தத்திற்கும் இடையே வித்தியாசம் காணவில்லை. காரணம்/ மகாயானத்தின் பல கோட்பாடுகள் தாந்திாீக பெளத்த கோட்பாட்டோடு ஒத்ததாக இருந்தது. தாந்திாீக பெளத்தம் அல்லது வஜ்ராயனத்தின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலானது. ஒலிகளை உச்சாித்து அதன் மூலம் பரவச நிலைக்கு உயர்தல் என்பது யோகிகளின் இன்னொரு வழி முறை. சூபிகளும் இம் முறையை பின்பற்றுகின்றனர். மகாயானத்தின் தோற்றத்திற்கு பிறகு சூத்திரங்கள் படைக்கப்பட்டன. சூத்திரங்கள் நீண்டு கொண்டிருந்ததால் அவற்றை குறுகிய காலத்தில் ஓத முடியவில்லை. எனவே ஒவ்வொரு சூத்திரத்திற்கும் சிலவாிகளை உடையதும்/ எல்லா மந்திர சக்திகளையும் கொண்டதுமான தாரணைகள் உருவாயின. தாரணை அங்கிகாிக்கப்பட்ட பாடல் வடிவமல்ல. அடுத்தபடியாக தாரணையிலிருந்து மந்திரங்கள் உருவாக்கப்பட்டன. சில காலத்திற்கு பின்பு மந்தி[ரங்கள் எண்ணிக்கையில் அதிகாித்தன. ஓரெழுத்தாலான விஜஸ் வந்தது. இறுதியாக விஜஸை எளிதாக்குவதற்காக எழுத்துக்களெல்லாம் விஜஸ் விதைகளாயின. விஜஸ் என்பது விந்தணுவிற்கு சமமானது. முதலில் ஓம் என்ற சொல்லையும் இறுதியில் ஸ்வாஹா என்ற சொல்லையும் இணைத்து எத்தனை மந்திரங்கள் வேண்டுமானாலும் படைக்க முடியும். இது தான் இந்தியாவில் வஜ்ராயனம் அல்லது பெளத்த மந்திரயானம் வளர்ந்த வழி. இந்த வளர்ச்சியை மந்திர சூத்திரங்கள் கி;.மு.400 முதல் கி.மு.100 வரை/ மந்திர தாரணைகள் கி.மு.100 முதல் கி.பி.400 வரை பீஜ மந்திரங்கள் கி.பி.400 முதல் கி.பி.700 வரை என பிாிக்கலாம். இந்த மந்திராயனம் அல்லது வஜ்ராயனம் என்ற தாந்திாீக பெளத்தம் உருவான இடம் ஆந்திர பிரதேசம் என்று அறியப்படுகிறது. அந்திரபிரதேசத்திற்கும் வஜ்ராயனத்திற்கும் இடையேயான தொடாட்பை பற்றி ஏராளமாக சான்றுகள் இருக்கின்றன. இந்த வழிபாட்டின் மையம் _பர்வதம். சித்தர்கள் எப்பொழுதும் _ பர்வதத்தோடு தொடர்பு கொண்டதால் சித்தர் என்னும் சொல்லுக்கு _ பர்வதம் மாற்று சொல்லாக உருவானது. _பர்வதம் நாகர்ஜுனாின் இருப்பிடம். இவரை சமஸ்கிருத வைத்திய நூல்கள் சித்த நாகர்ஜுனர் என்றே குறிப்பிடுகின்றன.

வஜ்ராயனத்தின் இறுதி உண்மை என்பது பிரஜ்னா மற்றும் உபாயத்தோடு இணைந்தது. பிரஜ்னா என்பது ஞூானம். உபாயம் என்பது அதனை அடையும் வழி. உபாயம் வஜ்ரயோகம் என்று அழைக்கப்படுகிறது. இது நான்கு வகைப்பட்டது. 1) உபசாதனம்/ 2) சாதனம்/ 3)மகாசாதனம்/ 4) சேவா. வஜ்ராயனத்தில் சாதனம் என்பது தெய்வீக நிலயை அடைவதற்கான வடிவம். இதனை தியானம் மூலம் அடையலாம். சேவா என்பது படி நிலைகள். இது மேலும் இரு வகையானது. 1) சமான்யசேவா 2) உத்தமசேவா. சாமான்ய சேவா மூன்று வஜ்ர சடங்குகளை உள்ளடக்கியது. 1) சூன்யத்தை உணர்த்தல் 2) இதன் பீஜ வடிவம் 3) தெய்வீக தன்மையை உடலின் அங்கங்களிலிருந்து உணர்தல் உத்தம சேவா என்பது ஆறுவிதமான வஜ்ர சடங்குகளை உள்ளடக்கியது. 1) புலன் கட்டுப்பாடு 2) தியானம் 3) மூச்சுக்கட்டுப்பாடு 4) மந்திரங்கள் மீதான ஒருங்குவியம் 5) நினைவு கொள்ளல் 6) சமாதி நிலையை அடைதல். தாந்திாீக பெளத்தர்கள் குரு ஞூான முறைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். குருவை தலைமையாக கொள்ளாமல் நிர்வாண நிலையை அடைய முடியாது என்றார்கள்.

இவர்கள் தாந்திாீகர்களை போன்று ஐம்பூதங்களை உடலோடு தொடர்பு படுத்தினார்கள். மேலும் சக்தி வழிபாட்டை புகுத்தினர். சக்தி என்பது பெண் தெய்வம். இது மாதிாி ஏராளமான பெண் தெய்வங்கள் இவர்களின் வழிபாட்டின் தொடர்ச்சி. இத்தகைய கடவுளுக்கு எதார்த்தமான இருத்தல் கிடையாது. அவர்கள் பீஜ மந்திரங்களை உச்சாிக்கும் வழி பாட்டாளாின் மனத்திலிருந்தும் பிறக்கிறார்கள். இவைகள் மனித வாழ்வின் பல விதமான செயல்களுக்கு பொறுப்பாகின்றன. நோய் குணமாகும் போது அது சிங்கநாதவாகவும்/ பாம்பு கடிக்கும்போது ஜாங்குலியாகவும்/ காதல் விவகாரத்தில் குருகுலாவாகவும் செயல்படுகிறது. மனதின் தொடர்ச்சியான ஏக்கத்தில் பல்வேறு விதமான வடிவங்கள் உருவாகி/ அவை பல்வேறு வெளித்தோற்றங்கள் ஆகின்றன. வஜ்ராயன பெண் தெய்வங்களின் ஆயுதங்களும்/ சின்னங்களும்/ போதி நிலையை அடைவதற்கான வழிகளை குறித்தன. உதாரணமாக அறியாமை நிலையை போக்கி அறிவார்ந்த நிலையை அடைவதை வாள் குறித்தது. மனத்தின் பாவத்திலிருந்து தூய்மை அடைவதை அங்குசம் குறித்தது. தீங்கான பொருளை நீக்குவதை கத்தாி குறித்தது. தாந்திாீக பெளத்தத்தின் இத்தகைய முறையானது சூபி ஞூானிகள் அணிந்திருந்த பாது காப்பு கவசங்களோடு ஒத்து போகிறது

வஜ்ராயனம் சித்த மரபினாிடயே மிகுந்த தாக்கம் செலுத்தியது. அது இந்தியாவை விட்டு இலங்கையிலும் பரவியது. நிகாயசங்கிரகம் தரும் தகவலின்படி மத்வல சேனன் ஆட்சியில் (கி.பி.846 – 66) வஜ்ர பர்வத பிாிவை சார்ந்த துறவி ஒருவர் இலங்கை சென்று விராங்குர விகாரையில் தங்கியிருந்ததாக அறியப்படுகிறது.அவரது பாதிப்புக்குள்ளான அரசன் வஜ்ராயன மரபை பின்தொடர்ந்தான். அதனை தொடர்ந்து வஜ்ராயனம் இலங்கை முழுவதும் பரவியது. இலங்கையில் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வஜ்ராயனம் மிகுந்த செல்வாக்கை பெற்றுவிட்டது. பத்தாம் நூற்றாண்டில் அங்கு ஆட்சி செலுத்திய மன்னன் எண்பத்தி நான்கு சித்தர்களில் ஒருவரான ரத்தினகர சாந்தியை வரவழைத்தான். ஏழு ஆண்டுகள் வரை அவர் அங்கு வாழ்ந்தார். பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இலங்கைக்கு அதிசர் என்னும் வஜ்ராயன துறவி வருகை தந்தார். அதிசாின் திபெத்திய சீடர் ாிதநாகர். இவ்விருவரும் நீல உடை அணிந்திருந்தனர். வஜராயனத்தின் காலத்தில் நீல உடை செல்வாக்கு செலுத்தியிருந்தது. கடவுள் சிலைக்கு கூட நீல ஆடை அணிவிக்கப்பட்டது. நீல ஆடை வழிபாட்டின் தொடக்கம் பற்றிய தொன்ம கதை ஒன்று நிகாய சங்கிரகத்தில் காணப்படுகிறது. இலங்கையை குமாரதாசன் (கி.பி. 514 – 524) ஆண்டிருந்த காலத்தில் தென் மதுரையை _ ஹர்ஷன் ஆண்டு வந்தான். சம்மிதியாவாத பிாிவை சேர்ந்த துறவி ஒருவர் நீல ஆடை உடுத்தி ஒரு பெண்ணுடன் பாலியல் செயற்கையில் ஈடுபட்டார். மறுநாள் மடத்தில் திரும்பிய போது அவருடைய சீடர்கள் நீல உடை உடுத்ததற்கான காரணத்தை கேட்ட போது அவர் தான் மேற்கொண்ட பாலியல் நடவடிக்கை பற்றி விாிவாக எடுத்துரைத்தார். அன்று முதல் நீல ஆடை உடுக்கும் பழக்கம் பரவியது. குஹய சமாஜத்/பிரஜ்னோபாய்/ வினிச்சய சித்தி/ ஞூானசித்தி என்னும் வஜ்ராயன நூல்கள் வஜ்ராயன பிாிவினாின் பஞ்ச மகரங்களை எடுத்துரைக்கின்றனர்.

வட இந்தியாவில் வஜ்ராயனத்தின் செல்வாக்கு பெருகிய காலங்களில் என்பத்தி நான்கு சித்தர்கள் வாழ்ந்தனர். இவர்களின் பரம்பரை கீழ் கண்டவாறு அமைந்தது. சரகர் – நாகர்ஜுநர் – சபரவர் – லூயிபர்/ தர்ஜபா – வஜ்ரகண்டபர் – கூர்மபர் – ஜலந்தரப்பர் – கன்னபர்/ காாியபர் – குகையபர் – விஜயபர் – தெலோபர் – நரோபர் இவர்களிலிருந்து பல் வேறுபட்டவர்கள் கிளைகளாக பிாிந்தனர். இவர்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வஜராயனத்தை பரப்பினர். பின்னர் அந்நிய படையெடுப்புகள் மற்றும் பிாிவினைகள் காரணமாக வஜ்ராயனம் செல்வாக்கு குறைய ஆரம்பித்தது. இதன் துறவிகள் வட இந்தியாவை விட்டு நேபாளம்/ திபத்து/ பர்மா போன்ற நாடுகளுக்கு தப்பி ஓடினர். பதிமூன்றாம் நூற்றாண்டில் வஜ்ராயனம் ;அதன் தேய்மானத்தின் இறுதி கட்;டத்தை அடைந்தது. பதினான்காம் நூற்றாண்டில் வஜ்ராயனத்தை கடைபிடித்தவர்கள் பலர் இஸ்லாமியர்களாக மாறினர். அவர்கள் உடல் ாீதியாக இஸ்லாமியர்களாக இருந்தாலும் மனோ ாீதியாக வஜ்ராயனர்களாகவே இருந்தனர். உடலின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாக பாி நிர்வாணத்தை அடைய முடியும் என்ற வஜ்ராயனத்தின் நிலைபாடு சித்த மரபில் இன்றும் தொடர்ந்து வருகிறது. உடலை மையமாக வைத்த சிந்தனைகள் வளர்ந்து வரும் சமகாலத்தில் தாந்திாீக பெளத்த மரபு அதற்கு முன்னோடியாக இருந்து வருகிறது.

peer13@asean-mail.com

Series Navigation

எச். பீர் முகம்மது

எச். பீர் முகம்மது