காற்று

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

மாலதி


கல்யாணம் பண்ணிக் கொண்ட
காற்றுண்டா ?
வட்டங்களில் உழைக்கும்
வாடையுண்டா ?
தெருக்களுக்குச் சொந்தமாகத்
தென்றலுண்டா ?
தேசங்களுக்கென்றுமட்டும்
கூடாரக் கித்தான்கள்
நீலத்தில் நிரவ உண்டா ?

காற்று தேடித் தேடி ஓடும்
ஊதி ஊதி உண்மை சொல்லும்
வீச்சங்களை மோதி விசிறி
நாற்றமின்றி தப்பும்
பூவிதழ் தாதுவையும்
முள்புதர் முனைகளையும் ஒருகையால்
கையாளும்.
ஓசையோடு சொல்லும்
எல்லாப் பதிவையும்.
காற்றெழுதும் வரலாற்றை
மாற்றவா முடியும் ?

தனது ‘தணல் கொடிப் பூக்கள் ‘ தொகுப்பிலிருந்து
மாலதி
[சதாரா]

====
Malathi

malti74@yahoo.com

Series Navigation