காதலின் உச்சி

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

கவிதா நோர்வே


மார்பின் உட்புறமும்

ஓர் உயிர் வாழ்தல்

சாத்தியமோ?

கூடுவிட்டு கூடுபாய்தல்

பற்றி நம்பிக்கை

பிறக்கிறது இப்போது

என்னுயிரை

மொத்தமாய் உரிஞ்சி

இதயக்கூட்டில்

புலம்பெயர்ந்த உயிரொன்றின்

ஆக்கிரமிப்பில்

அகதியாகி

நிற்கிறது

எனது உணர்வு

வயிற்றுக்குள்

குறுகுறுவென்றொரு

வண்ணாத்தியும்

என் காதுகளில்

மயில் தோகையின்

கூச்சரிப்பும்

விரல்நுனிகளில்

நடுக்கமும்…

இமைகளில்

பல படிமங்களாய்க்

காத்திருப்பும்…

எல்லாரும்

என்னையே கவனிப்பதாய்

கொஞ்சம் குற்ற உணர்வும்..

போதாதென்று

உலகமே என்

தொண்டைக்குழியில்

அடைப்பது போல…

விக்கித்து நிற்கிறேன்

இந்த இடத்திற்குப்

பெயர்தான்

காதலின் உச்சி

என்கின்றனர் சிலர்…

அகதியாகிவிட்ட

எனதுயிர்க்கு

மனிதாபிமான முறையிலேனும்

தஞசம் குடேன்

மறுத்தளித்தால்

காதல் உச்சியிலிருந்து

கருணை கொலையென்று சொல்லி

நானே குதித்துவிடுகிறேன்…

ஏந்திக்கொள்!

நான் சிதறிவிடுமுன்!


kavithai1@hotmail.com

Series Navigation