This entry is in the series 20040129_Issue

நம்பி.


————–

தஞ்சையிலிருந்து கல்லணைக்கு
ஓட்டைச் சோழனில் செல்ல வேண்டும்
கொட்டும் மழையின் சத்ததில்
ஆடி அசைந்துப் போக வேண்டும்
தெறித்தத் துளிகள் உள்ளே வந்து
மேனியைக் கொஞ்சம் நனைக்க வேண்டும்
கார்த்திகைச் சாரல் ஜன்னல் வழியே
முகத்திலறைந்து சிலிர்க்க வேண்டும்
நடந்தாய் வாழி காவேரியென
ஜேசுதாஸ் சன்னமாய்க் கரைய வேண்டும்
கரை புரண்டு காவிரி வழியெங்கும்
எதிர்ப்புறம் ஓடி மகிழ வேண்டும்
கண்ணில் படும் இடமெல்லாம்
பயிர்கள் தலையசைத்து ஆட வேண்டும்
கல்லனையில் கரிகாலன் கல்லைக் கண்டு
தொப்பலாய் நனைந்து வணங்க வேண்டும்
தொப்பலாய் நனைந்து வணங்க வேண்டும்.


nambi_ca@yahoo.com

Series Navigation