க(னவு)விதை
வசீகர் நாகராஜன்

கனவு போலத்தான் நீயும் …
உணர்வுகளில் மின்னலாய் பளிச்சிட்டு
உணர்கையில் மாயமானாய் மறைந்து
மரத்தின் கிளையிலாடும் ஊஞ்சலாய்
மனதின் நினைவுகளை உந்தித்தள்ளி
நினைத்தவுடன் மலர்ந்திடாமல் தள்ளி நின்று
நினைவின் பசுமையில் தன் வண்ணம் விரித்து
விரிந்திடும் வானமாய் கடலின் ாழமாய்
விளக்கிக் கூறிட இயலா விந்தையாய்
தாமரை இலைத் தண்நீராய் விலகி
தன் உள்ளம் தான் விரித்து முகிழ்ந்திடும்
நீர்க்குமிழியாய் இக் கவிதை
வசீகர் நாகராஜன்
vasikar@சுahoo.com
About வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)
வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)
View all 15 articles →