புகாரி – நாக இளங்கோவன் – சந்ர ஆகாயி – விஸ்வாமித்ரா – நரேசு -K.ரவி ஸ்ரீநிவாஸ்
அன்பினிய கவிஞர்களே,
‘உலகத் தமிழ்க் கவிதைக் கையேடு ‘ ஒன்று தயாராவதாகவும். அது பற்றிய சில குறிப்புகளும் இன்று எனக்குக் கிடைத்தன.
1. கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளுள் சிறந்த ஐந்தினைத் தேர்வு செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். (ஐந்து பக்கங்கள்)
The Director (பா. மருதநாயகம்)
Pondichery Institute of Linguastics and Culture
112, Kamatchiamman Temple Street
Pondichery 605-001, India
2. கவிஞரின் இரு புகைப்படங்கள்
3. பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் மற்றும் குடும்ப விபரம், கல்வித்தகுதி, வெளியிட்ட கவிதை நூல்கள் மற்றும் சிறப்புத் தகுதிகள் போன்ற வாழ்க்கைக் குறிப்புகள்
4. 30.12.2003 க்கு முன் அனுப்பிவைக்கப்படவேண்டும்
5. pilc என்று மின்னஞ்சல் முகவரி துவங்குகிறது. சரியான முகவரி தெரியவில்லை. (அறிந்தவர்கள் விபரமாக இங்கே எழுதலாமே)
இதுபற்றி மேலும் தகவல்கள் அறிய விழைகிறேன்
அன்புடன் புகாரி
சமற்கிருதம் வாங்கலியோ சமற்கிருதம் என்ற என் கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளைப் படித்தேன்.
திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் விளக்கம் சமற்கிருதத்தின் சிறப்பை விளக்குவதாக அமைந்திருந்தது.
சமற்கிருதம் ‘பொக்கிசம் நிரம்பிய மொழி ‘ என்பதை நான் மறுக்கவில்லை. இலக்கியங்கள் நிறைந்து, இலக்கணங்கள் கொண்ட மொழி என்பதை யாரும் மறுக்க முடியாது. தத்துவச் செழிப்பு கொண்ட மொழி என்பதையும் நான் மறுக்கவில்லை.
சமற்கிருதத்தில் சாகுந்தலம், இராமாயணம், பாரதம் போன்ற இலக்கியங்கள் இருந்தது; அதனால் அது கணினி மொழிக்கு ஏற்றது என்று எண்ணப் பாங்கு தவறானது. சேக்சுபியரின் இலக்கியங்களைக் கொண்டதால்தான் ஆங்கில மொழி கணினிக்கு ஏற்ற மொழி என்று சொல்வது போன்றது அது.
கணினி மொழி பற்றிய நோக்கில் சென்ற கட்டுரையை சாதி, வகுப்பு போன்றவற்றோடு முடிந்து, அதை அப்படியே 9/11 உடன் இணைத்து எங்கேயோ போய்விட்டார் திரு.அரவிந்தன் நீலகண்டன்.
இரிக் பிரிக்சின் கட்டுரையைப் படித்தேன். சமற்கிருத வாக்கியங்கள் எழுதி அதற்கு, ஆங்கிலத் தெளிவுரையை இட்டுள்ளார். சமற்கிருதச் சொற்களின் சொற்பொருள் ஆழத்தை விளக்குவதாக இருக்கிறது. இந்த சொற்பொருள் ஆழமானது, ஏனைய மொழிகளுக்கு இல்லை என்று சொல்லி விடமுடியாது. கம்பனின் ஒவ்வொரு கவிதை வரிக்கும் ஒராண்டு விழா எடுப்பார்கள் கம்பனைப் படித்தவர்கள்.
செயற்கை மொழி என்ற அடைப்படையில் வேறெந்த மானுட மொழிகளை விடவும் சிறந்தது என்பது பிரிக்சின் நிலைப்பாடு என்று சொல்லவருகிறார் திரு.அரவிந்தன் நீலகண்டன். ஆனால் மானுட மொழிகளைப் பெரிதும் ஆய்ந்த பிறகே எடுக்க வேண்டிய நிலைப்பாடு அல்லவா ?
ஊட்டறிவுத் (Artificial Intelligence) துறைக்கு ஏற்றது என்று மட்டும் கொண்டு இதைக் கணினி மொழி என்று சொல்ல முடியுமா ? மற்ற துறைகளுக்கு என்ன செய்வார்கள் ?
கணினி என்பது நம் மேசை மேல் இருக்கும் பெரிய பெரிய பெட்டிகள் மட்டும் அல்ல. செல்பேசிக்கு ஏற்றது சமற்கிருதம் என்று சொல்ல முடியுமா ? சலவைப் பொறியில் கணிச்சில்லு வைத்து இணையம் வழி செயல் படுத்தலாமாமே! அந்தச் சலவைக் கணினிக்கு, ஏற்ற மொழி சமற்கிருதம் என்று சொல்ல முடியுமா ? (அய்யோ..அய்யோ…அது அழுக்குத் துவைக்கும் பொறியாச்சே…அதில் சமற்கிருதம் என்ற தேவ மொழி போகலாமா ?..வண்ணார் தீட்டென்றால், வண்ணார் பொறியும் தீட்டுத்தானே.. என்று அடிக்க வருபவர்களை என்ன செய்வார்களோ நான் அறியேன் 🙂 ) இவை மட்டுமல்ல, வீட்டில் சமையல் செய்யும் அடுப்பில் இருந்து காலில் போடும் செருப்பு வரை சில்லை வைத்து ஏதாவது ஒரு வேலை செய்ய வைத்து அதையும் இணையம் வழி நடத்தி விடுவதைக் காணத்தான் போகிறோம். செருப்பில் எல்லாம் சில்லு வைப்பார்கள் என்று கேலி செய்வதாய் தப்பா நினைக்காதீங்க! (நினைச்சாலும் நினைப்பீங்க 🙂 ) ஒரு நோயாளி இத்தனை வேகத்துக்கு மேல் நடக்கக் கூடாது என்று கட்டுப்படுத்துதற்கு அவர் அணியும் செருப்பைத்தவிர வேறெங்கு ஒரு கணிச் சில்லைச் செருக முடியும் ? ? (மீண்டும்…. காலில் போடும் செருப்பில் எல்லாம் சமற்கிருத மொழிக் கணினியா என்று அடிக்க வந்தால் என்ன செய்வார்களோ நான் அறியேன்:-) )
என் நோக்கு, கணினிக்கு ஏற்ற மொழி என்ற சொல்வதற்கான அடிப்படையைக் கேட்டுத்தானே ஒழிய வெறுப்பை மட்டும் உமிழ அல்ல.
திரு.அரவிந்தன் நீலகண்டனோ, திரு.ஆசாரகீனனோ அதை விளக்கியிருந்தார்கள் எனின் பயனுள்ளதாய் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் அதில் இருந்து விலகி முழுமையாக மொழி அரசியல் நடத்தி விட்டார்கள்.
திரு.அரவிந்தன் அவர்களின் எதிர்வினை, பல இடங்களில் பொருளில் இருந்து விலகி இருந்தாலும் சமற்கிருதத்தைச் சுற்றிய பல சேதிகளைக் கொண்டிருந்தது நன்றாகவே இருந்தது.
ஆனால் திரு.ஆசாரகீனன் அவர்களோ, கற்பில் தொடங்கி, மூத்தகுடி மற்றும் உலகப் பொதுமறையில் தொங்கி, சுந்தரம் பிள்ளையை சுற்றி வந்து, கடைசியில் பெண்களின் புடவையில் போய் நின்றிருக்கிறார். என்ன பொருத்தமோ யான் அறியேன். எனினும் அது அவரின் எதிர்வினை என்பதால் அவர் எழுதிவிட்டுப் போகட்டும்.
ஆனால், பாவாணரின் தமிழ்த்தூய்மையை மூன்றாம்தரத்தினது என்று அவர் எழுதியது மன்னிக்க முடியாதது! அதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
பாணினியின் சமற்கிருதத் தூய்மையைப் போற்றி, யாரோ எழுதினால் இனிக்கிறது! ஆனால் அதே நேரத்தில் பாவாணரின் தமிழ்த் தூய்மை மூன்றாம் தரத்தினதா ? திரு.ஆசாரகீனனின், பாவாணரைப் பற்றிய அறிவின் தரம் கண்டு தற்போது நான் வியக்கவில்லை!.
திரு.தங்கமணி அவர்களின் மடலை மிகவும் இரசித்தேன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
ஆசிாியருக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கம்.
பாலாவின் ‘பிதாமகன் ‘ பற்றி ஜமுனாவின் கருத்துக்கள்..பார்த்தேன்…….ஆயினும் அது பற்றி நான் சொல்ல விரும்புபவை..
இங்கேயும் சிவன் தான் கருவூலமாய் மறைந்து நிற்கிறான். ~பிதா| என்று குறிக்கப்படுவது அண்டசராசரங்களிற்கும் அதிபதியான கடவுள் சிவனைத் தான்! ஆதியும் அந்தமும் இல்லாத அந்தக்கடவுளின் புத்திரன் தான் இந்தக் கதையின் நாயகன் ஆகிறான்! அதே வேளை சிவனுக்கு இன்னுமொரு பெயர் இருக்கிறது-~பித்தன்| என்று! அந்தப் பித்தனே இங்கு சித்தன் ஆகிறான்! பித்தன் என்றால் பைத்தியக்காரன் என்று பெயர். சித்தன் என்றால் சித்து வேலைகள் செய்பவன். இங்கு பிதா மகன் என்பவன் கடவுளின் பிள்ளையாகவே உருவாக்கப்பட்டிருக்கிறான். பிறப்பும் இறப்பும் இல்லாதவன்…..அல்லது இரண்டும் ஒன்று என்று கருதுகிறவன்! சிவன் சுடலைப் பொடி பூசி, சுடுகாட்டில் நின்று ஊழி நடனம் பூிகிறவன்! அவனுக்கும் இவனுக்கும் வேறுபாடு கிடையாது…….பிறப்பால், இறப்பால்….வாழ்வால்…..குணத்தால்…..மனத்தால்……இறைவனுக்கு ஒப்பானவன்!
இத் திரைப்படத்தில் ஒரு காட்சி இப்படி வருகிறது– சித்தன் சிறுவனாக இருக்கும் போது ….அவனது நாளாந்த சுடுகாட்டு வாழ்வில், பிணங்களை எாிப்பதுவும் சாம்பலைக் கூட்டிக்குவிப்பதுவும் கற்கள் அடுக்கி கல்லறைகளை அமைப்பதுவுமே தொழிலாகவும் கடமையாகவும் அமைந்துவிட்டிருக்கிற போது அவனின் போசனம் கூட பிணம் எாியும் நாற்றத்தின் மத்தியிலும் எலும்புக்கூடுகளின் சிதைவுகளின் மத்தியிலும் பிணமொியும் தீக்கங்குளின் வெளிச்சத்திலுமே அநேகமாய் அமைந்திருக்கிறது! ஒரு பிணமாவது எாிந்தால் தான் அவன் சற்று வயிறு நிறையச் சாப்பிடமுடியும் என்பதுவும் ஒரு கசப்பான உண்மை! உணவின் பின்னரான அமைதியான நித்திரை…..பிணமொியும் விறகுகளிற்கருகாய் அந்தச் சுவாலைகளின் வெம்மையில் சாதாரணமாய் அமைந்திருக்கிறது(இது எமக்கு ஒரு வித பயத்தையும்; ஒரு இருண்ட மனநிலையையும் வாழ்வின் வெறுமையையும் அவன் மீதான பச்சதாபத்தையும் ஏக்கத்துடன் ஏற்படுத்திவிடுகிறது)
மனித வாழ்வின் எல்லையை ….அவன் தனது வாழ்வின் தொடக்கத்திலிருந்தே தாிசித்து வருபவன்! பிணம் விளாசி எாிகிற போது சுள்ளிகளை விறகுகளை தள்ளிவிட்டு சாியாக எாிந்து சாம்பலாகிறவரை அவன் அதனோடு நின்று போராடி வரும் ஜீவன்…..அவனுக்குத்தொிந்த சில வாிகள் வெறும் பாடலாக மட்டுமல்ல…. ‘உன்னையே நீயறிவாய்…. ‘ அவனின் வாழ்க்கை அவனுக்களித்த உள்ளார்ந்த தத்துவமாக ……சாவீட்டுச் சடங்குவாிகளாக ……. ஆனால் எப்பவும் அவனுக்குள் ஒலித்தபடியிருக்கும் ஆத்ம வாிகளாகவே அமைந்து விடுகிறது! ஏனெனில் ஒரு சமயம் சக்தி….உல்லாசமாக இருக்கிற ஒரு அமைதிப்பொழுதில் ‘சித்தா நீயும் பாடு ‘ என்கிறான். அப்பவும் இவன் பாடுவது …சுடலையில் பிணமொிகிறபோது அவன் பாடும் அதே வாிகளைத்தான்!!! ஆனால் அந்தக் காட்சியில் அந்த வாிகளின் ஒலி….மற்றவர்களின் உல்லாசமான அட்டகாசமான பாடல்வாிகளினுள் அடிபட்டுப் போகிறது! ஆனால் அதைக் கவனிப்பவள் அவர்களுடன் கூடவிருக்கும் அந்த அக்கா மட்டும்தான்.
உலகம் அவனுக்கு எப்பவும் ஒரே மாதிாித்தான் தொிகிறது …..இன்பமோ துன்பமோ மனித வாழ்வின் முடிவுகள் ஒன்று தான் …….ஒரு சூனியவெளியில் மிதந்து கொண்டிருக்கிற உலகில்……சொற்ப காலம் வாழ்கிற மனிதா;கள் அனைவருமே பிணமாகும் முன்னரான விளையாட்டுப் பொம்மைகள்…..என்கிற சித்தப் பார்வை அவனுடையதானது!!
சிறைச்சாலையில் அவனுடன் மோத வரும் சக கைதியை மாங்குமாங்கென்று புரட்டியெடுக்கிறபோதும் அந்தக் கைதியின் தாடையைப் பெயர்ப்பது போல வாயைப்பிாித்து….ஒரு எாிக்கப்பட்;ட பிணத்தின் முக எலும்புக்கூட்டுத் தோற்றத்தை உண்டுபண்ணப் பிரயத்தனப் படுவதும் …..அந்தத் தோற்றத்தில் ஒரு ஆத்ம திருப்தியைப் பெறமுயல்வதும்…….அவனின் வாழ்வனுபங்களினால் சிதைபட்டிருக்கும் அவனின் மனதின் கோரமும் விகாரமும் அவனையறியாமலே வெளிப்படுவது மிக அழகாகக் காட்டப்படுகிறது!! அந்த வெளிப்பாடு எம்மை திடுக்குற வைக்கிற போதும்……பாலா சொல்ல வந்ததை….அப்பப்போ…..எந்தத் தயக்கமும் இல்லாமல் மிக நிதானமாக சொல்லி வைத்திருக்கிறார்.
நடிகர் விக்ரம் ‘சேது ‘ வை விட மிகக் கடினமாக உழைத்திருக்கிறார் என்பதை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும்! அது போலவே ‘நந்தா ‘ வின் சூர்யாவை விட பிதாமகன் சூர்யா மிக இயல்பாய் கடினமான ஒரு மிகச்சிறந்த நடிப்பை தந்திருக்கிறார்! லைலாகூட மிக அசமந்தமான, நடிப்பே அவசியமில்லாத பல பாத்திரங்களில் வந்து அழகை மட்டும் மூலதனமாக்கி உழைத்துவிட்டுப் போய்க்கொண்டிருந்த திரையுலகச் சூழலில் , பிதாமகனில் கொஞ்சம் நடித்திருக்கிறார்…..நம்மைச் சிாிக்கவும் வைத்திருக்கிறார்.(சத்தி ஏமாற்றி காசு பறிக்கிற போது நிலத்தில் புரண்டு புரண்டு அழுவது……மற்றும் சத்தியை பொலிஸில் பிடித்துக்கொடுக்கும் முயற்சியில் அவன் கழுத்தை அழுங்குப்பிடி பிடித்தபடி முதுகில் மூட்டை போல ஒட்டிக்கொண்டு கத்துவதும்..)..
இசை ….. அருமை. அதீத கற்பனைகள் சிலவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிற சில காட்சியமைப்புகள்! சித்தனின் உறுமல் மனித இயல்பிலிருந்து முற்றிலும் அந்நியமானதாய் சித்தாிக்ப்படுவது….. ? ? ? ? ? வார்த்தைகளை குழந்தைத்தனமாகக் கூட வடிக்கத்தொியாத ஊமைத்தனம் ? ? ? ?
சிவன்-.—பிதா
மகன்——சித்தன்(விக்ரம்)
சிவனின் மனைவி—-சத்தி(சூர்யா)
‘சிவன் இல்லையேல் சக்தி இல்லை….சக்தி இல்லையேல் சிவன் இல்லை ‘
படம் முடிவடைந்த பின்னர் இவையெல்லாம் ஏனோ ஞாபகத்தில் வருகின்றன!!!
–சந்ர.ஆகாயி.
10.12.2003
er015g3919@blueyonder.co.uk
கருணாநிதி இலக்கியவாதியா இல்லையா என்று அலசி ஆராய நண்பர் வரதன் அழைக்கிறார். என்ன தைரியம் அவருக்கு ? இதற்குமுன் அவ்வாறு ஆராயத்துணிந்தவர், வேண்டாம் அது பற்றி கருத்துக்கூறத் துணிந்தவர் நிலையறியாரா வரதன் ? இப்பொழுதான் ஒருவர் கருணாநிதி ஒரு தீவிர இலக்கியவாதி இல்லை என்று கூறப்போக, கசுமாலம், கபோதி என்று அர்ச்சிக்கப் பட்டு, நொந்து நூலாகிக் கிடக்கிறார். இதற்குமுன் பூங்காவில் களை இருக்கிறது என்று கூறியதை துக்ளக்கில் வெளியிடப்போக, சோவைப் பேடி, அலி என்று இணையத்தில் ஒரு கும்பல் வசைபாடித் தீர்த்தது. பல வருடங்களுக்கு முன்பு தமிழருவிமணியன் துக்ளக்கில் கருணாநிதியின் தமிழ் அறிவு எவ்வளவு ஆழமற்றது, எவ்வளவு போலியானது என்று எழுதப்போக, பின்னொரு தருணத்தில் ஆசிட் அனுப்பப் பட்டது, அவர் முகத்துக்கு. தகுதியில்லாத தரம் தாழ்ந்த அரசியல்வாதிக்கு டாக்டர் பட்டமா என்று கேள்வி எழுப்பிய உதயகுமாரன் தன் பெற்றோர்களுக்கே பிள்ளையாகாமல் அநாதையாகக் கொல்லப் பட்டார். இதற்கு மேலும், மரியாதையின் மேல், உயிரின்மேல் ஆசையுள்ள எவரும் கருணாநிதியின் அடுக்கு மொழி இலக்கியத்தை ஆராயத் துணிவார்களா என்ன ? ஒரு வேளை வரதன் ஆட்டோ இல்லாத ஊரில் குடி இருக்கிறாரோ என்னவோ ?
திசைகளில் கருணாநிதியை ‘கபோதி ‘ பதப் பிரயோகத்துக்காக மென்மையாகவேனும் கண்டித்திருக்க வேண்டும் என்று வரதன் எதிர்பார்க்கிறார் போலும். தன் எஜமானைக் கண்டிக்க அவருக்கென்ன பைத்தியமாப் பிடித்திருக்கிறது. ஜெ.மோ பேசியதை வைத்து ஒரு ஆறு வித்தியாச ஆராய்ச்சி செய்து தன் எஜமான விசுவாசத்தை மேலும் ஒரு முறை அல்லவா பறை சாற்றிக் கொண்டுள்ளார் ?
நேருவின் பண்டிட் பட்டம் அவர் பிறந்த ஜாதியால் வந்தது. அதை தனக்குத்தானோ அல்லது காங்கிரஸ் கட்சியினர் மூலமாகவோ சூட்டிக்கொள்ளவில்லை. நேருவே பல தருணங்களில் தன்னை பண்டிட் என்று அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதுபோல் மூதறிஞர் என்ற பட்டமும் ராஜாஜியோ, அவரின் சுதந்திரக் கட்சிக் காரர்களாளோ தங்களுக்கு தாங்களே சூட்டிக்கொண்டப் பட்டம் அல்ல. இந்த திராவிடக் கட்சிக் கும்பல் அவருக்கு அளித்தப் பட்டம்தான் மூதறிஞர். இவர் அவர்களுக்குத் தேவைப் படும் பொழுது மூதறிஞராகத் தெரிவார். தேவைப் படாத பொழுது குல்லுகப் பட்டராகவோ, குள்ள நரியாகவோ ஆகி விடுவார். என்னவோ அவர் தன்னைத் தானே மூதறிஞர் என்று அழைத்துக் கொண்டது போலவும், பிறரையும் அவ்வாறுதான் அழைக்க வேண்டும் என்று திராவிடக் கும்பல்கள் போல் எதிர்பார்த்தது போலவும், ஏன் அதுகுறித்து ஜெயகாந்தன் ஒன்றும் சொல்லவில்லை என்றும் ஒரு அறிவுஜீவி கேட்டுள்ளார். அதுபோல் ஜெ.கா/ஜெ.மோ பற்றி இன்னுமொரு அறிவுஜீவிக் கேள்வி. ஜெ.கா ஜெ.மோ எழுதிய எதையுமே படிக்காமல் தன் வாரிசு என்று சொல்லிவிடவில்லை, விஷ்ணுபுரம் மட்டுமே படிக்கவில்லை என்று கூறிய்ள்ளார். தனக்குத் தானே அல்லது தன் கட்சிக்காரர்களை விட்டுப் அறிஞர் என்றும், கலைஞர் என்றும், பேராசிரியர் என்றும், பெரியார் என்றும், புரட்சித்தலைவர் என்றும், தலைவி என்றும் பட்டங்கள் கொடுத்துக் கொள்வதும் கொடுத்தப் பட்டத்தின் படி எல்லோரும் அவர்களை அழைக்கவேண்டுமென எதிர்பார்ப்பதும், அவ்வாறு அழைக்காதவர்களைத் திட்டுவதும், அடிப்பதும்,, திராவிடக் கட்சிகளுக்கே உரிய நார்சிச மன வியாதி. அந்தக் கும்பலுக்கு ஒருவர்தான் பேராசிரியர், மற்ற ஆசிரியர்களெலாம் கல்லூரியில் என்ன பெஞ்சு துடைத்துக் கொண்டா இருந்தார்கள் ? எவ்விதத் தகுதியும் இல்லாமல் தன்னைத்தானே கலைஞர் என்றும் அறிஞர் என்றும் அழைத்துக் கொள்ளும் வெக்கம் கெட்டப் பிறவிகள் இவர்கள். இவர்களின்பின் அப்படி அழைப்பது சரிதான் என்று கூறிக்கொண்டு, தன்மானமில்லாத, ஒரு பெரிய கும்பலே வாழ்த்தித் திரிகிறது. பிற்படுத்தப் பட்டவர்களை அவ்வாறு பட்டங்கள் கொடுத்து அழைப்பது சரிதான் என்று சப்பைக்கட்டு வேறு. துரைசாமி முதலியார் எந்தக் காலத்தில் பிற்படுத்தப் பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டார் என்று தெரியவில்லை. இதுபோன்ற தரந்தாழ்ந்த தற்புகழ்சியுள்ள, ஒழுக்கங்கெட்ட நாலந்தர அரசியல்வியாதிகள்தான் இளைய தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக நமது பாடப்புத்தகங்களிலும், நாற்சந்தியில் சிலைகளாகவவும் காட்டப் படுகிறார்கள். இதுதான் தமிழகத்தின் தலையெழுத்து. அண்ணா பெயரைச் சொல்லி தமிழகமே மண்ணாய்ப் போகிறது.
பி.கே.சிவக்குமார் தளராது, தொடர்ச்சியாக, கோர்வையாக, எவ்வித குழப்பமும் இல்லாமல் தனது வாதத்தை வைத்துள்ளார். அவரது துணிவான, தர்க்கரீதியான விவாதங்களுக்கு எனது பாராட்டுகள். நரேந்திரனது அண்ணா குறித்த கேள்விகளுக்கும் எவ்வித பதிலுமில்லை. அவரது தர்க்க ரீதியான கேள்விகளுக்கெல்லாம் திசைமாற்றும் முயற்சியே பதிலாகக் கிடைக்கிறது. நரேந்திரனின் கட்டுரைகள் நகைச்சுவையுணர்வுடனும், பொருள் பொதிந்தும் இருக்கின்றன. அவரது அண்ணா குறித்தான துணிவான கேள்விகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
அன்புடன்
விஸ்வாமித்ரா
viswamitra12347@rediffmail.com
(சில நீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன – திண்ணை குழு)
அன்புள்ள ஆசிரியருக்கு,
சென்றவாரங்களில் மிகவும் ‘அவதூறு ‘ செய்யும் கடிதங்களை பிரசுரித்திருக்கிறீர்கள். முக்கியமாக இரோசாவசந்து எழுதும் கடிதங்கள். எல்லோரையும் மாமா மாமி அம்பி போன்ற வார்த்தைகளை உபயோகித்து எழுதும் இது போன்ற கடிதங்களை நியூஸ்குரூப்பில்தான் எழுதி வந்தார்கள். திண்ணையிலும் வர ஆரம்பித்திருக்கிறது. தார்மீகக் கோபம் பொங்கி வழிகிறது போலும். யாருடைய தார்மீகக்கோபத்தையோ வேறுயாரோ உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள். திண்ணை மீது இருக்கும் மரியாதை காரணமாகவும், இதில் எழுதுபவர்கள் மீது இருக்கும் மரியாதை காரணமாகவும் நான் இந்தக் கடிதத்தில் அது போன்ற வார்த்தைகளை எழுதுவதைத் தவிர்க்கிறேன். எனக்கு எழுதத்தெரியாது என்ற பொருளில் அல்ல. கருத்துக்களை நேரடியாக எதிர்கொள்ளத்தெரியாதவர்கள் தங்கள் கோப வார்த்தைகள் மூலம் தங்கள் வார்த்தைகளுக்கு நியாயம் இருக்கிறது என்பதை பறைசாற்றமுயல்கிறார்கள். ஆனால், இது வெறுமே கிராமத்துத் திண்ணையில் உட்கார்ந்து வாயில் வெற்றிலை போட்டுக்குதப்பிக்கொண்டு, அடிக்க முடியாத அந்தஸ்தில் உட்கார்ந்துகொண்டு, போகும் வரும் ஆட்களை கெட்டவார்த்தையில் குதர்க்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் ஆட்களையும் அவர்வழி வந்தவர்களையுமே காட்டுகிறது. இப்படிப்பட்டவர்களிடம் எனக்குப் பரிதாபமே மிஞ்சுகிறது.
பண்டிட் என்பது ஜாதிப்பெயர் என்ற மகத்தான கண்டுபிடிப்பை செய்த இரோசாவசந்துவைப் பின்பற்றி எல்லோரும் ஓஹோ பண்டிட் என்றால் சாதிப்பெயர்தான் என்று முடிவு செய்துவிட்டார்கள். நம் ஊர் வித்வான்கள் தன் பெயருக்கு முன்னால் வித்வான் என்று போட்டுக்கொள்கிறார்கள். அது போலத்தான் பண்டிட் என்பதும். உத்தரபிரதேசத்தில் எல்லா பள்ளி ஆசிரியர்களும் பண்டிட்ஜிக்கள்தான். எல்லா இசைக்கலைஞர்களும் பண்டிட்கள்தான். (பண்டிட் ஜஸ்ராஜ், பண்டிட் ரவிசங்கர்) காஷ்மீரப் பண்டிதர்கள் பண்டிட் என்ற வார்த்தையை பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதில்லை. ஜோதிபாசு, ஈ.கேநாயனார் (இடதுசாரிகள் பின்னால் ஜாதிப்பெயரைப் போட்டுக்கொண்டால் அவர்கள் ஜாதிவெறியர்கள் இல்லை. Note to self: ஏன் ‘இரோசாவசந்து ‘ இரோசா என்று பெயர் முன்னால் போட்டிருக்கிறார். ஏதேனும் பிராம்மணசாதிப்பெயர் இரோசா என்று வருகிறதா என்று ஆராயவேண்டும். ) போல தங்கள் பின்னால்தான் போட்டுக்கொள்கிறார்கள். அதுவும் பண்டிட் என்ற வார்த்தையை அல்ல. அவரவர் குடும்பப்பெயர்களை. நேரு என்பது அவரது குடும்பப்பெயர். ஜவஹர்லால் என்பது அவரது பெயர். அதே போலத்தான் நம் ஊர் இந்தி பண்டிட்களும். ஆகவே எல்லா தமிழ்நாட்டு இந்தி பண்டிட்டுகளும் காஷ்மீரப் பண்டிதர் ஜாதியைச் சார்ந்தவர்கள் என்று ரோஸாவஸந்த் நினைக்கலாம். யார் என்ன செய்யமுடியும் ? ஆக, உத்தரபிரதேசத்தில் பண்டிட் ஆக இருக்க மாபெரும் அறிஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை. பள்ளிஆசிரியராகவோ அல்லது ஒரு புத்தகம் எழுதியவராகவோ அல்லது வெறுமே உயர்கல்வி படித்தவராகவோ இருந்தால் கூட போதுமானது.
ஆகவே ஏன் நேரு பண்டிட் என்று நிரூபிக்க பெரிய காரியங்களை நேரு செய்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பது புரிந்திருக்கும். அந்த பண்டிட் என்ற வார்த்தையை சிவக்குமார் சொன்னதன் காரணம் அவர் நேருவின் ஜாதியை மனதில் கொண்டுதான் என்று ரோசா வேண்டுமென்றே ஜாதிப்பெயரைக் கண்டுபிடிக்கும் வக்கிரப்புத்தியைப் பார்த்து வியக்கிறேன். இது அறியாமல் ஏன் நேரு பண்டிட் இல்லை என்பதற்கு பரிமளம் எழுதிய கடிதம் இன்னும் நகைச்சுவையானது. நேருவின் குறைகளை பட்டியலிடும் அந்தக் கடிதத்துக்கு ஜெயபாரதன் பதில் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் காஷ்மீர் விவகாரத்தில் நேருவை பழி சொல்வது இந்திய ‘அறிவுஜீவிகளின் ‘ தேவையாக இருக்கின்ற காரணத்தால், அது பற்றிய உண்மையான விஷயங்களை கொஞ்சம் படித்துத் தெரிந்து கொண்டால் நலம். நேரு அவ்வாறு உறுதி மொழி கொடுத்தது உண்மைதான். அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. பாகிஸ்தான் காஷ்மீரில் ஆக்கிரமித்துள்ள இடங்களை முழுதுமாக காலி செய்து வெளியேற வேண்டும் என்பதே. பாகிஸ்தான் கோருவதோ, இந்தியாவின் கீழ் இருக்கும் காஷ்மீரத்தில் மட்டும் வாக்கு எடுப்பு. அதற்கு நம் அறிவுஜீவிகள் ஆதரவு. என்ன சொல்வது நம் தி இந்து குலோன்களை ? தார்மீகக்கோபம் கொள்வதற்கு வசதியாக சந்தனமரம் கடத்தும் கொலைகாரனைக்கூட ஆதரிக்க முனையும் கூட்டம் அல்லவா அது ?
சிவக்குமார் சொன்னது இதுதான். காந்தியை மகாத்மா என்றோ நேருவை பண்டிட் என்றோ எளிதாக நிறுவிவிடலாம். (சொல்லப்போனால், முதலில் இதனை எடுத்த சங்கரபாண்டி கூட பண்டிட் என்ற பட்டத்தை ஜாதி அடிப்படையில் உபயோகப்படுத்தவில்லை.) எந்த காரணத்தைக்கொண்டு கலைஞர். அறிஞர், பேராசிரியர், பெரியார் போன்ற பட்டங்கள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான். (அதே போல ஜகத்குருக்களையும் போப்புக்களையும் கேட்டிருக்கலாம். ஏனோ யாரும் அதனைப் பேசமாட்டேனென்கிறார்கள்) அதிலும் அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. ‘மகாத்மா ‘ காந்தியோ, ‘மூதறிஞர் ‘ ராஜாஜியோ ‘பண்டிட் ‘ நேருவோ பட்டத்தைக் கேட்டு வாங்கிப்போட்டுக்கொண்டு ஊரெங்கும் அலையவில்லை. ஆனால் போஸ்டர் ஒட்டும்போதே புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, தலைவர் கலைஞர், தளபதி ஸ்டாலின், அறிஞர் அண்ணா, பெரியார், ஜகத்குரு என்று பெயர் எழுதி ஒட்டி பிரபலம் தேடும் கூட்டம் வேறு கூட்டம்.
ஆனால் சிவக்குமார் இரோசாவசந்துவை உதாசீனம் செய்தது மிகச்சரி.
**
மஞ்சுளா நவநீதனின் கருத்துக்களுக்கு எதிர்வினைகள் வருகின்றன. எதிர்வினைகளுக்கு மஞ்சுளாவிடமிருந்து எதிர்வினைகள் வருவதில்லை. சிவக்குமார் போலவே அவரும் புரியாதவர்களையும் புரியாமல் நடிப்பவர்களையும் உதாசீனம் செய்கிறாரோ என்னவோ. ஏராளமான ஓட்டைகள் உள்ள மாலனின் பதில் ஒரு சிறந்த உதாரணம். (இது ரோஸா வஸந்த் பாணி. ஓட்டைகள் என்று சொல்லியாய் விட்டது. என்ன ஓட்டைகள் என்று சொல்வதில்லை. அப்புறம் எனக்கு நேரமில்லை என்று ஒரு பாட்டு)
நரேசு
naresh3021@yahoo.com
அன்புள்ள ஆசிரியருக்கு
அரவிந்தன் நீலகண்டன் வழக்கம் போல் தன் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளார்-எதிர்வினைகள்
என்ற பெயரில்.அவரிடம் ஆதாரங்கள்/சான்றுகள் கேட்பது வீண், இருந்தாலும் சோம்ஸ்கி பற்றி எழுதியுள்ளதற்கு சோம்ஸிகியின் எழுத்துக்களிலிருந்து சான்றுகள் காட்டுவாரா ?
சம்ஸ்கிருதத்தை தேவ மொழி என்று கொண்டாடவும் வேண்டாம், வெறுப்பு கொண்டு நிராகரிக்கவும் வேண்டாம்.வெகுஜன வழக்கில் இல்லாத ஒரு செவ்வியல் மொழி அது.அதற்கு தனி முக்கியத்துவம் கொடுப்பது தேவையற்றது.பிற மொழிகளுக்கு ஒதுக்கப்படும் தொகையை அதற்கு ஒதுக்கினால் போதும்.அதை கற்பதை விட இன்று பிரெஞ்ச்,ஜெர்மன் போன்ற மொழிகளைக் கற்பது பயனுள்ளது.அதற்கு அதிக நிதி ஒதுக்கீடும்,பிற மொழிகளுக்கு குறைவான நிதி ஒதுக்கீடும் செய்வதை எதிர்க்க வேண்டும்.தமிழும் சமஸ்கிருதம் போன்ற ஒரு சிறப்புமிக்க செவ்வியல் மொழிதான்.ஐரோப்பியர்கள்,அமெரிக்கர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததும்,மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் அதில் உள்ளவற்றை குறித்து எழுதியதும் அது குறித்த போலி பிரமைகளை உருவாக்கிவிட்டன.துரதிருஷ்டவசமாக தமிழில் உள்ளவை அதே கவனிப்பினை பெறவில்லை.வெள்ளைக்காரன் கொடுத்த முக்கியத்துவம் இல்லாவிட்டால் அந்த மொழி பாலி,பிராகிருதம் போன்ற மொழிகளின் நிலையில் இன்று இருந்திருக்கும். நானறிந்த வரையில் பல மடங்கள் சார்பில்/ஆதரவில் நடத்தப்படும் வேத பாடசாலைகளில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.பிற ஜாதியினர் கற்றால் வேதங்களின் ‘தூய்மை ‘ கெட்டுவிடுமா ?.இது குறித்து அப்துல் கலாம் முதல் அரவிந்தன் நீலகண்டன் வரையில் சம்ஸ்கிருதத்தின் உயர்வு குறித்து பேசுபவர்கள் என்ன கருதுகிறார்கள் ?. சமஸ்கிருதம் ஒரு கலாச்சார மேலாண்மையினை நியாயப்படுத்தவே பயன்படுத்தப்படுகிறது. நாசி சிந்தனைகளை உள்வாங்கியுள்ள ஹிந்த்துவ அமைப்புகள், அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் அதை ஏற்கலாம்.பாரம்பரிய இந்திய சிந்தனை என்றால் வேதங்கள்,உபநிடதங்களிலிருந்து மட்டும் மேற்கோள்கள் காட்டுவதை தமிழர்கள் தவிர்க்க வேண்டும்.மாறாக தமிழிலிருந்தும், அவைதிக மரபுகளிலிருந்தும் மேற்கோள்கள் காட்ட வேண்டும்.
K.ரவி ஸ்ரீநிவாஸ்
- சோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து
- யெளவனம்
- உள்வீடு
- கால் கொலுசு
- என்ன உலகமோ
- அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)
- வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
- ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்
- கடிதங்கள் – டிசம்பர் 11,2003
- கடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003
- நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்
- ‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘
- ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு
- மனித நல்லிணக்கம்.
- காபியிலும் ஆணாதிக்கம்
- கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்
- வைர வியாபாரமும் வன்முறையும்
- வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்
- சில எதிர்வினைகள்
- அன்புள்ள மனுஷ்யபுத்திரன்
- காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்
- முரசொலி மாறன்
- பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை
- எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘
- பாரதி, மகாகவி: வரலாறு
- பாரதி நினைவு நாள்
- யானை பிழைத்த வேல்
- பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்
- பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை
- விடியும்! – (26)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)
- வினைத்தொகை
- மேல் நாட்டு மோகம்
- அம்மண தேசம்
- காதல் மாயம்
- ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
- நட்பு
- கடவுள்கள் சொர்க்கத்தில்…..
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- கொஞ்சம் தள்ளிப்போனால்
- தேர் நிலைக்கு வரும் நாள்
- தேர்க்கவிதை
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு
- கங்கைகொண்டசோழபுரம்
- புதசுக்கிரயோகம்
- கவிதைகள்
- கவிதைகள்
- என் புத்திக்குள்
- அரவம்.
- காகம்.
- ஏ ! பாரதி
- ஆதாரம்
- கபிலர் பாறை
- நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?
- இணையம்