கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue


அன்புள்ள அருண்பிரசாத், வணக்கம் நாகூர் ரூமி.

உங்கள் கவிதை ‘தாண்டவன் ‘ படித்தேன். மனதைத் தொட்டது. ‘நினைவு அம்பலம் ‘, ‘மற்றுமொரு மானசரோவர் ‘ போன்ற வரிகள் குறிப்பாக. தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும். ஒரு திண்ணையில் கொட்டப்படும் அனேக கவிதைகள் கவிதைகளாக இல்லாதபோது, கவிதைக்குரிய அழகு உங்கள் கவிதையில் இருந்தது சந்தோஷம் கொடுத்தது

அன்புடன்

நாகூர் ரூமி

ruminagore@yahoo.com


அன்புத் திண்ணக்கு

கடிதப் பகுதி கணினித் திரைக்குள் அடங்காமல் நீண்டிருப்பது (மடிந்திருப்பது ?) சுகமான வாசிப்புக்கு உகந்ததாக இல்லை. தயவு செய்து சரி செய்யவும்.

அன்புடன்

பரிமளம்

janaparimalam@yahoo.com


ஆசிரியருக்கு,

ஜெயமோகன் தனது குமரிஉலா தொடரில் கீழ் உள்ளவாறு எழுதி உள்ளார். இதில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அதை ஜெயமோகன் விளக்குவாறா ? ஜெயமோகன்:

‘சுற்றுலாபயணிகளில் தம்ழிநாட்டுக்கும் கேரளத்துக்கும் பெரியவேறுபாடு இருக்கிறது. தம்ழி நாட்டில் நடுத்தரவற்க மக்களைவிட கீழ்த்தட்டுமக்களே அதிகமாக பயணம் செய்கி றார்கள்.அவர்களுக்கு வரலாறு கலை ஏதும் தெரியாது. பயணம் ஒரு குதூகலம், அவ்வளவுதான். எங்கேயும் கட்டுச்சோறு கொண்டுவந்து தின்ன ஆசைபடுகி றார்கள்… ‘

என் கருத்து:

வேளங்கண்ணி என்ன அவ்வளவு சுத்தமாகவா இருக்கிறது ?.

***

ஜெயமோகன்:

‘நான் மேலாங்கோட்டு அம்மன் பற்றி ஒரு கட்டுரையை……. ‘…… நடிகர் முரளி கூட ஃபோனில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.

என் கருத்து:

முரளியின் இலக்கிய அறிவு / ஆழம் குறிப்பிட்டு சொல்லக் கூடியதா ?

***

ஜெயமோகன்: ‘வேலுத்தம்பியின் வம்சத்தில் எஞ்சிய ஒரு பெண்ணுக்கு மணம் செய்வித்து அவளுக்கு கட்டித்தந்த சிறுஅரண்மனை தலக்குளத்தில் இப்போதும் உள்ளது. …………… அரசிடம் அரண்மனையை எடுத்துக் கொள்ளச்சொல்லி பலவருடங்களாக மன்றாடிவருகிறார்கள். தமிழக அரசு ஆர்வம்காட்டவில்லை, கேரளஅரசுக்குஆர்வம்தான், ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதியும் அளிக்கவில்லை ‘

என் கருத்து:

இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா ?

***

அன்புடன்

நம்பி. nambi_ca@yahoo.com


கருணநிதியின் இலக்கியத்தரம் குறித்த திரு.ஜெயமோகனின் கருத்துக்கு எதிர்வினையான கருணாநிதியின் கவிதையையும் (!!!!), அவரது பக்த கே(¡)டிகளின், சாமியாட்டங்களையும் அன்றாடம் படித்துப் புல்லரித்துப்போய் உள்ளேன். என்னடா புத்தக வெளியீட்டு விழாவில், நாம் புகழ்ந்தது, சரியாக தமிழனக்காவலர் டாக்டர் கலைஞர் காதில் விழுந்ததோ, விழவில்லையோ, எல்லா அர்ச்சனைகளையும் சரியாக ஒப்பித்தோமோ, இல்லையோ என்று, தூக்கம் வராமல், புலம்பிக்கொண்டு, அடுத்த முறை, தமிழினக் கடவுள் ஆட்சிக்கு வரும்போது, ஒரு அரசவைப்புலவர் பதவி அல்லது ஒரு கார்பொரேஷன் கவிஞர் பணியாவது கிடைக்குமோ, கிடைக்காதோ, என, எண்ணி, எண்ணி, உள்ளம் குமைந்து கொண்டிருந்த இளயபாரதி அண்டு கம்பெனிக்கு, மணிப்பூர் லாட்டரியின் பம்பர் பரிசு போல் விழுந்தது திரு.ஜெயமோகனின் பேச்சு. விடுவார்களா வந்த வாய்ப்பை ? காறி உமிழ்கிறார்கள், போட்டி போட்டுக்கொண்டு. ஏற்கனவே, காட்டில், நாட்டில் உள்ள விலங்குகள் பெயரையெல்லாம், தானைத்தலவர், தமிழின் கடவுள், தனது உலகப்புகழ் கவிதையில் பயன்படுத்திவிட்டாரே, இனி நாம் எந்த விலங்கினத்துடன் ஒப்பிட்டு ஜெயமோகனைத் திட்டலாம், என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு, மலையாளி, மன நோய்க்காரன், நபும்சகன், என்று முரசொலியில் மீந்த மலத்தினைப் பொறுக்கி அடித்திருக்கிறார்கள். கருணாநிதியின் வானரம், கபோதி போன்ற கவித்துவமான வரிகளும், அவர்தம் கையைப்பற்றி மெய் சிலிர்த்திருக்கும் கவிஞர்களின் கண்ணியமிக்க கண்டணங்களும், தத்தம், இலக்கிய, இன்னபிற தரங்களையும், நன்றாகவே புலப்படுத்துகின்றன. திரு.ஜெயமோகனின் கருத்துக்கு வேறு ஆதாரமே வேண்டாம். இதுபோன்ற நாலாம் தர எழுத்தாளர்களைப் பற்றி விமர்சிப்பது கூட திரு.ஜெயமோகன் போன்றவர்களின் தகுதிக்கு இழுக்கு. மனோகரா வசனமும், ரோமாபுரிப்பாண்டியனின் இலக்கியத்தரமும்தான் கருணாநிதியின் இலக்கியத்தரம் என்றால், குரும்பூர் குப்புசாமிக்கும், பி.டி.சாமிக்கும் இலக்கியத்துக்கான நோபல் பரிசே (தமிழுக்கு ஒன்று உருவாக்கி) வழங்கலாம்தான்.

சக எழுத்தாளரின் மீதான, மிக வெளிப்டையான, கீழ்த்தரமான, அச்சுறுத்தலைக் கண்டும் காணதது போல், இருக்கும் பிற எழுத்தாளர்களின் அலட்சியத்தை, மவுனத்தை என்னவென்று சொல்வது ? இலக்கியக்குண்டர்களின் குண்டாந்தடி குறித்த அச்சமன்றி வேறென்ன ? என்ன இருந்தாலும் சிதம்பரம் உதயகுமரனை மறந்திருப்பர்களா என்ன ?,

கோவில்களில் உயிர்ப்பலி தடை குறித்தான, திரு.நரேந்திரன், திரு.சின்னக்கருப்பன், இன்னும் பிறரின் எதிர்ப்பைக் கண்டேன். இவர்கள் தடை குறித்தான முழு விபரத்தையும் தெரிந்தும், தெரியாததுபோல் எழுதுவது அவர்களின் பாரபட்ச்சமான கண்ணோட்டத்தையே காட்டுகிறது. இவர்களின் முப்பாட்டன் காலம் முதலே இவர்கள் மாமிசம் உண்ணுவதால், அது மீதான எந்தவொரு தடையயும் எதிர்ப்பது, சிறுபிள்ள்ளைத்தனமாக உள்ளது. காலம், காலம் காலமாக கோவில்களில் தேவதாசி முறை இருந்தது, அதனால் அதன் மீதான தடை இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானது என்று, தேவதாசி முறையை மீண்டும் கொண்டுவரலாமா ? காலம் காலமாக உடன் கட்டை ஏறினார்கள் என்பதற்காக சதியை சட்டபூர்வமாக்கி விடலாமா ? நம் பாட்டன், முப்பாட்டன் காலத்தில் தீண்டத்தாகதவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று கூறியதால், இக்காலத்தில் மீண்டும் அம்முறையை அமல் படுத்தி விடலாமா ? ஒரு பழங்குடி இனத்தில், அவர்கள் நம்பிக்கைப்படி, நரபலி கொடுக்கும் சடங்கு ஆண்டாண்டுகாலமக நடந்தால், அதற்க்கு மதிப்புக்கொடுத்து நரபலியை சட்டபூர்வமாக்கி விடலாமா ? மேற்குறிப்பிடப்பட்ட செயல்களின் மீதான தடைகளெல்லாம், கிற்ஸ்துவ, யூதர்களின் முன் நம்மை, நாகரீகமாகக்காட்டும் முயற்சி மட்டும்தானா ? இத்தடைகளெல்லாம் காலம் காலமாக செய்யப்பட்டுவரும் வழிபாட்டுக்கெதிரான, பெருவாரியான மக்களின் நம்பிக்கைக்கெதிரான, ஜனநாயக விரோத சட்டங்கள்தானா ? புத்தர், காந்தி வழி, இச்செயல்களுக்கெதிராக அஹிம்சைவழிப் போதித்திருக்கலாமே, வேலை மெனக்கெட்டு ஏன் சட்டங்கள் இயற்றினார்கள் ?

அரசின் சட்டம் பொது இடங்களில் அது முறையான கோவிலாக இருந்தாலோ, மரத்தடி மாடசாமியாக இருந்தாலோ, குரூரமான முறையில் (நரேந்திரனே கூட எழுதத் தயங்குகிறார், மன்னிப்புக்கேட்கிறார்) விலங்குகள் வெட்டப்படுவதையேத் தடுக்கின்றன. உங்கள் வீட்டு சமையல் அறையில் வெட்டிச் சாப்பிடுவதை அல்ல. இது தெரிந்தாலும் என்னவோ மாமிசம் சாப்பிடுவதையே தடை செய்து விட்டதுபோல் கூக்குரலிடுவது வேடிக்கையாக இருக்கிறது. ஈ வே ரா இது குறித்து என்ன கருத்துக்கொண்டிருந்தார் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. பொது இடங்களில் நடக்கும் ஒருவித காட்டுமிராண்டிச் செயல், தடை செய்யப்பட்டிருப்பது (இதன் நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்து சந்தேகம் இருப்பினும்) அது கிறிஸ்த்தவ, யூத இன்னபிற மதங்களின் முன் நம்மை நாகரீகமாகக்காட்டும் ஒரு முயற்சியாக இருந்தாலும் கூட, வரவேற்கக்கூடிய ஒன்றே. சீர்திருத்தம் குறித்த எந்தவொரு முயற்சியும், அரசாங்கத்தின் தலையீடின்றி வெற்றி பெறாது. இத்தகைய நாகரீகமில்லாத பொது இடத்தில் பலியிடுதல் போன்ற வழிபாடுகள் எந்தவொரு மதத்தில் இருந்தாலும் தடை செய்ய வேண்டியது அரசின் கடமையே. திரு.மஞ்சுளா நவநீதனின் தத்துவப்படி, கோவில்களெல்லாம் பொதுவிடங்களே.

அன்புடன்

விசுவாமித்திரா

viswamitra12347@rediffmail.com


Alien Viel

Duration of film 13 min.

Short film

by

AJeevan

You can download from the following link:-

http://home.no.net/yarl/alien_viel.asf

Greetings

AJeevan


பெரியார் ராமன் சிலைக்கு மாலைணிவித்ததை (பொது இடம், தனிமனித இடம்… மஞ்சுளா நவநீதன்),பொது இடத்தின் துஷ்ப்பிரயோகமாய் பார்ப்பது பொருந்தாது. தனிமனித இடத்தில் இருக்க வேண்டிய வழிபாட்டை சமுதாயத்தில் ஊடுருவச்செய்து, அதன் மேல் சாதிய கட்டுமானங்களை புனைந்து, மனிதனை மனிதன் சுரண்டிக் கொண்டிருந்த பார்ப்பன சுரண்டலின் வடிவத்திற்குத்தான் பெரியார் செருப்பு மாலை அணிவித்தார். எந்த கருத்தாக்கமும் சுமந்து நில்லாத (மைல் கல் போன்ற) அல்லது அபாயமற்ற கருத்தாக்கங்களை சுமந்து நிற்கிற (டொனால்ட் டக் போன்ற) எவற்ரிற்கும் பெரியார் அப்படிச் செய்யவில்லை. பெரியாரின் துஷ்ப்பிரயோகத்தின் இன்றைய வடிவங்களை எஸ்.எஸ். சந்திரனில் தேடுவது ஆசிரியரின் உள்நோக்கத்தை காட்டுகிற அதே சமயத்தில், பெரியார் எதை எதிர்த்தாரோ அது (பொது இடத்தில் மதம்) இன்றைய அரசியாலாயிருப்பதையும், பெரியாரிய வழிபாட்டின் தேவையையும் மஞ்சுளா நவநீதன் உணரவில்லையே என்பது வருந்த்தத்தக்கதே.

நி.தங்கமணி

ntmani@yahoo.com


ஆசிரியருக்கு, ஈரான் சினிமா விமரிசனத்தில தலைப்பை சொதப்பி விட்டேன் என அஞ்சுகிறேன். தி விண்ட் வில் கேரி அஸ் என்று இருந்திருக்க வேண்டுமோ ? வெகுநாட்களுக்கு முன்பு பார்த்த சினிமா. இன்னமும் கதை மனதில் நிற்பது போல் தலைப்பு நினைவு இல்லை. தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன்.

அம்மாளு மாமி.

aparna177@hotmail.com


yes this is your shankaranarayanan

just had been living with KUTTIYAAPPA rumi feels vazhkai as a beauatiful kanavu as in other stories he had once again proved in this piece of kurunovel he just goes on in his flight of thought of course with his readers and enjoys his ownself as a characater – giving the same pleasure for the readers which is rare and his own individual asset – the tone; is friendly – with one hand wrapped around the character he depicts in the writing… and the other, yeah – with the reader, thats me

in my case.

not an attacking style… like; a bouncer in cricket… but a flow of air which has just spread its wings

i wish him goodfuture and goodluck to favour it ha ha what is he going to say about my english – i fear sir bye

writer shankaranarayanan

sankarfam@vsnl.com mailto:sankarfam@vsnl.com


ஸ்டாலினிஸ்ட் என்று தன்னை பெருமையாய்(அதுதான் முக்கியம்) சொல்லிகொண்ட யமுனா, எல்லோரையும் மொத்தமாய் வூடு கட்டி அடிக்கும் நோக்கத்துடன் பாய்ஸ் பட கட்டுரையை கயமைத்தனம் மிகுந்து எழுதியுள்ளார். இப்போது நேரமில்லாததால் அடுத்தவாரம் அது குறித்து எழுதுகிறேன். இப்போதைக்கு பொறுப்புடனும், பொறுமையுடனும் பதில் தந்த ஜெயபாரதனுக்கு மட்டும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ரோஸாவசந்த்.

rksvasanth@yahoo.com


Dear Friends

short film Shadow fight

download from following link:-

http://www.yarl.com/film/shadow_fight.asf

Greetings

AJeevan www.ajeevan.com


October 17 Edition அன்புள்ள ஆசிரியருக்கு,

சுவாரசியம், உள்ளடக்க மதிப்பு ஆகியவற்றைக் கருதி, பொதுவாக கடிதங்களை முதலிலும், கவிதைகளை (அவகாசமிருந்தால்) கடைசியிலும் படிப்பதை வழக்கமாகக் கொண்ட நான், கவிஞர்கள் பட்டியலில் கலைஞர் கருணாநிதியின் பெயரைப் பார்த்த வியப்பில் இந்த இதழை அவருடைய கவிதையில் தான் துவக்கினேன். கலைஞர் ஏமாற்றவில்லை. கவிதையின் கடைசிப் பகுதியில் தமிழ் இலக்கிய உலகை ‘வனவிலங்கு சரணாலயம் ‘ என்று உருவகப்படுத்தியிருந்தது சுவாரசியமாகத்தான் இருக்கிறது (அதற்குத் தகுந்தாற்போல அதே இதழில் ரவி ஸ்ரீநிவாசும் ‘வயதான சிங்கம் ‘, ‘குள்ள நரி ‘ என்றெல்லாம் சில எழுத்தாளர்களை வர்ணித்திருக்கிறார்). இலக்கியவாதிகளின் அக்கப்போர்களைப் பார்க்கும்போது, ‘சர்க்கஸ் ‘ என்ற உருவகமே அதைவிடப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

***

பரிமளத்தின் ‘பரி-மலம் ‘ சமீப மாதங்களில் நான் படித்த கட்டுரைகளில் சிறந்த ஒன்று.

‘இந்திய மக்கள் அனைவரும் மானத்தோடு வயிற்றை நிரப்புவதோடல்லாது மானத்தோடு வயிற்றைக் காலி செய்வதற்கும் ஏற்ற சூழல் அமையாதவரை வல்லரசாவது மண்ணாங்கட்டியாவது ‘–வல்லரசுக் கனவு காண்பவர்கள் யோசிக்கவேண்டிய விஷயம்.

சமீபத்தில், என் நண்பன் ஊருக்குப் போயிருந்தபோது, அவனுடைய அண்ணன் கல்லூரிப் பேராசிய நண்பர் ஒருவரிடம் தன் தம்பி அமெரிக்காவிலிருந்து வந்திருப்பதைச் சொல்ல, அந்தப் பேராசிரியர் என் நண்பனை கல்லூரி மாணவர்களிடம் பேச அழைத்திருக்கிறார். பேசி முடித்தபின் கேள்வி நேரத்தின்போது, ஒரு மாணவன் ‘இந்தியா வல்லரசு நாடா மாற என்ன சார் செய்யனும் ‘ என்று கேட்க, ஒருகணம் என்ன சொல்வதென்று புரியாமல், ‘அப்துல் கலாம் சொல்ற மாதிரி பண்ணுங்க. இந்தியா வல்லரசு நாடா மாறிடும் ‘ என்று சொல்லி சமாளித்திருக்கிறான். இந்த மாதிரி சிக்கல் இனிமேல் யாருக்கேனும் ஏற்பட்டால் பரிமளத்தின் மேற்கோள் கைக்கொடுக்கும்.

மு. சுந்தரமூர்த்தி munirathinam_ayyasamy@yahoo.com


‘மலை மீதிருந்து

ஒரு பூவை

பள்ளத்தாக்கில் எறிந்தால்

எந்த சப்தமும் திரும்பி வராதது போல்

எங்கள் அழுகுரல் உங்களை எட்டாமல்

எந்த எதிரொலியும் இல்லாமல் போய்விட்டதே! அண்ணா ‘

இறந்தபோது ஆரம்பப் பள்ளிச் சிறுவனாக இருந்த நான் என்னை விட 10-15 வயது மூத்த இளைஞர்களிடம் கண்ட சோகத்தை அப்போது புரிந்துகொள்ள முடியாமல், பிற்காலத்தில் கலாப்ரியா அண்ணாவின் மரணத்தின்போது எழுதிய இந்த இரங்கற்கவிதையைப் படித்தபோது புரிந்துகொள்ள முடிந்தது. தாங்கள் இலட்சியத் தலைவனாக மதித்திருந்த ஒருவரை மரணத்திடம் பறிக்கொடுத்த ஏமாற்றமும், ஏக்கமும் கலந்த துயரம். அது வெளிப்பட்ட முறை உணர்ச்சிவயமானது என்பது உண்மை தான். பல்லாயிரக் கணக்கானோர் தங்கள் குடும்பங்களில் நிகழ்ந்த மரணங்களின் சோகத்தை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தியது போன்ற மாபெரும் சோகம். விவரம் புரியாத சிறுவர்களுக்கும், அரசியல் வெறுப்பிற்குள் அடைபட்டு நின்ற சில பெரியவர்களுக்கும் அது பிடிபடாமல் போயிருக்கலாம். ஆனால் அதை பாமரத்தனம் என்று விவரிப்பதும் கூட ஒரு பாமரத்தனம் தான்.

அண்ணாவின் மரணத்துக்குச் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெயகாந்தன் பெரிதும் மதிக்கும் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது எழுந்த சோகத்தையும், அச்சோகம் டில்லி மாநகரத் தெருக்களிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெளிப்படுத்தப்பட்ட விதத்தையும், உடனடியாக தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளப்பட்ட முறையையும் குறித்து ஜெயகாந்தன் எங்கேனும் பதிவு செய்திருக்கிறாரா ? செய்திருந்தால், தேடிப்பிடித்து தட்டச்சு செய்தோ, அல்லது செய்யாமலிருந்தால் புதிதாகக் கேட்டுப் பெற்றோ சிவக்குமார் திண்ணையில் (மறுப்)பதிவு செய்தால் இரண்டையும் ஒப்பிட்டு, ஜெயகாந்தனின் மனோராச்சியத்தில் வீற்றிருப்பது சமூகப் பொறுப்புள்ள ஒரு கலைஞனின் அறச்சீற்றமா அல்லது ஒரு சராசரி கட்சி ஊழியனின் மனதில் இறுகிய அரசியல் அழுக்கா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள உதவிய ‘க இருக்கும்.

அதோடு, ஜெயகாந்தனிடம் தோற்றவர்கள், தோல்விக்கு பயந்து அண்ணாதுரையைப் போல மரணத்தின் மூலம் தப்பிச் சென்றவர்களின் பட்டியலையும் அவருடைய சீடர்கள் தொகுத்து வெளியிட்டால் அவருடைய கதைகள், கட்டுரைகள் சிலவற்றையும் மட்டும் படித்து அவரை அரைகுறையாக புரிந்துகொண்டுள்ள என்னைப் போன்ற பின் தலைமுறைப் பாமரர்கள் அவருடைய மேதாவிலாசத்தை முழுமையாக அறிந்து கொள்ளவும் உதவும்.

மு. சுந்தரமூர்த்தி

munirathinam_ayyasamy@yahoo.com


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

ரவி ஸ்ரீநிவாஸ் போன்ற அணுசக்தி எதிர்ப்பாளிகள் ‘அங்கே பார்! இங்கே பார்! அவுட்லுக்கைப் பார்! ‘ என்று நாட்டியம் ஆடுவதில் அர்த்தம் இல்லை! ‘Outlook ‘ வந்தது, எந்த வருடம் ? எந்த மாதம் ? எந்த வாரம் ? என்ன தகவல் அறிவித்தது ? அதனால் எதிர்ப்பாளிகள் எழுப்பும் வினாக்கள் என்ன என்று எடுத்துச் சொன்னால் பதில் அளிக்கலாம். அவ்வித மின்றி ‘அவுட்லுக்கிற்குப் பதில் விரிவாக எழுதி யிருக்க வேண்டும் ‘ என்று கைகாட்டி விட்டு ஓடி விடுவது பொறுப்பற்ற வாதம்! ஏதோ பிழையான அகிலவலை முகவரிகள் சிலவற்றை வெறுமையாகக் காட்டி விட்டுத் ‘திண்ணை வாசகர்களே! அங்கே போய் படித்து அவர் கூறியதை ஒப்பிட்டுப் பாருங்கள் ‘ என்று வாசகரைத் தள்ளி விடுவது, வெகு புத்திசாலித்தனம்!

நாற்பத்தியைந்து ஆண்டுகள் அணு உலைகளில் பணி செய்து அனுபவம் பெற்றவன் நேராக எழுதினால், ஆண்டாண்டு தோறும் அறிக்கைத் தாளில் வரும் அச்சுப் பிரதிகளையே உண்டு பசி ஆறிக் கொள்பவருக்கு, ஆத்திரம் பொங்குவது நியாயமானதே. ஆனால் ரவி ஸ்ரீநிவாஸ் போன்றோர் சூழ்மண்டலத்தைச் சுத்தமாக்கும் முன்பு, அவரது வாயைச் சுத்தமாக்கி முதலில் வாய்ச்சொற்கள் நாகரீமாக இருத்தல் அவசியம். இல்லாவிட்டால் அவரது ஆத்திர மாசுச் சொற்களே, திண்ணையில் வீசும் தென்றல் காற்றை அசுத்தப் படுத்திவிடும். நாட்டைச் சுத்தம் செய்ய வரும் சூழ்மண்டலவாதிகள், கையில் உள்ள துடைப்பத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வது முதற்கண் தேவை! தனது ஊசி நாக்கிற்கு உறை போட்டு, தனி நபர் எவரையும் தாக்காது, கருத்துகளை மட்டும் குறிவைக்க ரவி ஸ்ரீநிவாஸ் கற்றுக் கொள்ள வேண்டும்!

சி. ஜெயபாரதன், கனடா

jayabar@bmts.com


சி.என். அண்ணாதுரை பற்றிய ஜெயகாந்தனின் பேச்சு படித்தேன். இதை வெளியிட்ட திண்ணைக்கும், தட்டச்சு செய்து கொடுத்த சிவகுமாருக்கும் நன்றி. ஜெயகாந்தன் எழுதியுள்ள பலவற்றையும் நான் படித்திருந்தாலும், இந்தக் கட்டுரை வந்திருக்கும் புத்தகத்தைப் படித்ததில்லை. இந்தப் பேச்சு, ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் ‘ புத்தகத்தை படிக்கத் தூண்டுகிறது.

அண்ணாவின் மறைவின்போது இப்படி வெளிப்படையாகப் பேசிய ஜெயகாந்தனின் துணிவு வேறு எவருக்கு வரும் ? ஜெயகாந்தன் போன்ற பலர் மக்களின் பிரதிநிதியாக இந்திய நாடாளுமன்றங்களுக்கு அனுப்பப்படாதது வேதனைக்குரியது. துதிபாடிகளும், அதிகார நோய் பிடித்தாட்டும் நபர்களும் நாடாளுமன்றங்களில் குவிந்து கிடக்க மக்கள் குரலே மகேசன் குரலாகத் திகழாமல், மகேசன் தேவைகளே மக்கள் மீது திணிக்கப்படும் நிலை இந்தியாவில் உள்ளது. துணிகரமான பேச்சு மட்டுமே ஜனநாயகத்தை வலுவாக்காது. இது நமக்குத் தெரியும். ஆனால், துணிகரமான, துதிபாடாத, யதார்த்தத்தை முகத்திரை கிழித்து பார்க்கும் விமர்சன நோக்கு உய்வுக்கு முதல் படி. அது கூட இப்போது இல்லை என்பதுதான் விசனம் தருகிறது.

ஜெயகாந்தனிடம் பெரும் சமூக மாறுதல்களுக்கு ஏற்ற விதத்தில் கருத்துகளை இடம் பெயர்த்து மக்களுக்குக் கொடுக்கும் வலிய பேனா இருந்தது. செயலுக்குச் செல்லும் வழிதான் அவருக்குக் கிட்டவில்லை. ஒரு நிர்வாகியாக இவர் பரிமளிக்காமல் இருந்திருக்கலாம். நிர்வாகிகளின் விமர்சகராக சமூக நிறுவனங்களில் பங்கெடுக்க கடந்த கால் நூற்றாண்டாக இவருக்கு வாய்ப்புக் கிட்டாதது தமிழருக்கும் இந்தியருக்கும் நஷ்டமே. பல்கலைக்கழகங்களாவது ஒரு கவுரவப் பேராசியராக ஜெயகாந்தனை நியமித்திருக்கலாம். அதுவும் நடக்கவில்லை.

அன்று போலவே இன்றும் தனித்துவம் வாய்ந்தவராக ஜெயகாந்தன் திகழ்வார் என்று நம்புவோம்.

சாரநாத்

saranath@verizon.net


Sir: Thinnai and its readers should award Thiru.Illaya Bharathi a prize for his honest estimation of himself. I donot think any writer has so far given such an opt and honset title as he has given to his article. The ‘lunatic ‘ part of the title is perfectly proved by the writer through his rant against Thiru.Jayamohan, that should put a rabid canine to shame. But is Thiru.Illaya Bharathi a Malayali as he claims in the title ? That is news to one.

S.Aravindan Neelakandan

infidel_hindu@rediffmail.com


அடடடடடா……!

இந்த ஜெயமோகன், ஜெயகாந்தன், ஜெயபாரதி…..இவர்களை விட்டால் வேறு ஆட்களே கிடையாதா ? ? ?

சப்பு சப்பென்று சப்பித் துப்புகிறார்களே ?

அன்புள்ள திண்ணை ஆசி¡¢யருக்கு! தங்கள் சகிப்புத் தன்மைக்கு மிகப் பொ¢ய பாராட்டுக்கள்!

ஏதாயினும் எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

கொண்டாடுகிறீர்களோ இல்லையோ அது வேறு விடயம்…..நராசுரன் அழிபட்டானோ இல்லையோ……இந்தத் திண்ணையை அசுத்தமாக்காமல் துப்புரவாக வைத்துக் கொள்ள அன்பான வாழ்த்துக்கள்!!!!

-ஆகாயி.

‘Eliyathamb Ravindrakumaran ‘ er015g3919@blueyonder.co.uk


Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்