எல்லை

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

எஸ்ஸார்சி


மருத்துவமனை வாயிலில் என் நண்பன் வரதன் நின்று கொண்டிருந்தான், ஏன் அவன் இங்கு யோசித்தேன். யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையோ , எனக்குக்கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது இதில் எல்லாம் என்ன யோசனை வேண்டிக்கிடக்கிறது. சென்று பார்த்துத்தான் வருவது ஆகக்கிளம்பினேன். எனக்கும் அவனுக்கும் ஒரே நிறுவனத்தில் பணி. அவன் இன்று படித்துப் படித்து ஒரு பெரிய அதிகாரி. நானோ வேலைக்கு அன்று வந்து உட்கார்ந்த அதே படியிலேயே இன்னும். ?ாதகத்தில் லக்னத்துக்கு இரண்டில் பாப(வ)ர்கள் இருந்தால் ஒரி ?ினல் மான் மார்க் குடை கை வசம் இருந்தால் என்ன, மழை சோவென பெய்யும்போது பிரிக்கத்தான் வராதாம், என் அம்மா சொல்லிக்கொண்டிருந்தது. சரி. நாம் நம் கதைக்கு வருவோம்.

வரதன் அருகில் அவன் தாய் நின்று புலம்பிக்கொண்டிருந்தாள். அவன் மனைவியும் துயரம் தோய்ந்தே காணப்பட்டாள்.

என்ன வரதரா ?ன் என்னப்பா சேதி, இங்க நிக்குற

பெயர் சொல்லித்தான் அழைத்தேன். கொஞ்சம் அதிகப்படியோ என்றும் தோன்றியது.

பரீட்சை என்று ஒன்று எழுதி அதில் பாசும் ஆகிவிட்டால் அவர்களைப்பார்த்து அடி வயிற்றில்அச்சம் வந்து குடிகொள்கிறது. சரியாய் விலாசம் எழுதி தபால் அனுப் பிவிடத்தெரியாதவர்கள்எல்லாம் ப்ரமோ ?னில் போவதும் உண்டு. வரதன் அப்படி இல்லைதான். மற்றபடி நொந்து கொள்பவர்கட்கு எல்லாம் அல்சர் மட்டும் உறுதி.

?ராமு என் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. ஐ சி யு வுல இருக்கிறாரு இன்னும் நினவு திரும்பாம இருக்கு. ?

கண்களை இடுக்கிக்கொண்டான். அவன் தாய் அருகில் காய்ந்து போன புடலங்காயாய் தெரிந்தாள்.

தலை மயிர் சோம் பப்பொடியை நிமிர்த்தி வைத்த மாதிரி இருந்தது.

வரதனின் மனைவி அருகிலேயே தான் நின்று கொண்டிருந்தாள். வரதன் குள்ளமாய்த்தான் இருப்பான். அவன் மனைவியோ இன்னுமொரு குள்ளம். என்னப்பொருத்தமோ எல்லாம் சரிய்ய்ய்யாக இருந்திருக்க வரதனின் குட்டிப்பையன் விளையாடிக்கொண்டு தெருவையே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தான். பையனின் முகத்தில் மட்டும் கவலையின் ரேகையே காணோம்.

டாக்டர் யாரு பாக்குறா அப்பாவை

பார்த்தசாரதி ?ார்ட் வியாதிங்க பாக்குறவரு தான்

வரதனின் மனைவியை ஒருமுறைபார்த்துக்கொண்டேன். ஏன் பார்த்தேனோ எல்லாம் என் நேரம் தான்.அவளின் கழுத்தில் கிடந்த ரெட்டை வடம் தங்கச் செயின் அறுந்து கோணல் மாணலாய் தொங்கிகொண்டுக்கிடந்தது. அந்த பிரம்ம தச்சன் கடைந்து எடுத்த அழகுச்சிற்பமாய் ஆனைத் தந்தம்போல் பளிச்சென்று இருந்த அவை என் கண்ணில் பட்டிருக்கவேண்டாம். மனித மனம் எப்போதும் குரங்கு. பரிணாம வளர்ச்சியில் அது மட்டும் இன்னும் பழவினை பாக்கியில்மாட்டிக்கொண்டதுவாம் யார் கண்டது.செவிவழி கிடத்தசெல்வம்தான். செயின் அறுந்த வி ?யம் மட்டும் தன் கண்ணில் பட்டதை அவர்களிடமே சொல்லிவிடலாம் என்று வாய் எடுத்தேன். வார்த்தைகள் தான் வெளிப்படவில்லை.ால்லிவிடுவோமா,சொன்னால் தவறா சொல்லவிட்டால் தவறா. வரதன் மனைவி என்னைப்பார்த்து அதிர்ந்து போயிருப்பது தெரிந்து போனது எனக்கு. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறதோ.

மீண்டும் ஒருமுறை அவளின் அதே இடத்தை நோக்கினேன். ஏன் அப்படிச்செய்தேனோ அவள் விருட்டென்று தன் இடத்தைக்காலிசெய்து வேறி டம் சென்று நின்றுகொண்டாள். வரதன் இவைகள் ஏதும் அறியாது அப்பாவியாய் கண்களைத்துடைத்துக்கொண்டு நின்றான். என் கைகளைப்பிடித்துக்கொண்டான்,

சங்கிலி நழுவி க்கொண்டிருப்பதைச்சொல்வதா கூடாதா

என்பதிலேயே மனம் கிடந்து கிடந்து அடித்துக்கொண்டது. தாமதம் எப்போதும் சத்தானின் ஆட்சிக்கே வலு சேர்த்து விடுமாம். அது நி ?ம்தானோ என எண்ணினேன்.

மருத்துவமனையின் ஐ சி யு வார்டில் உள்ளாகச்சென்றேன். வரதனின் அப்பாவைச்சுற்றி டாக்டர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். கண்கள் திறந்து கொண்டிருக்க ஆகாயம் பார்த்துக்கொன்டிருந்தார் பெரியவர்.

ஏ ?டு. நதிங் கென்பி டன், வாட் ட்டு டு நவ், லெட் ?ிம் லீவ், அடுக்கடுக்காய் ஆங்கிலதத்தில் மாறி மாறி ஒரு வாழ்க்கை முடியப்போவதற்கு வியாக்கியானம் பேசிக்கொண் டிருந்தார்கள்.

?நான் இனி என்ன செய்வேண்டா, என்னை ப்பிடித்துக்கொண்டான் வரதன்.

?ஒண்ணும் கலங்காம இரு. இப்பதான் தைர்யம் வேணும். நிண்ணுதான் நாம சந்திக்கணும் வரதா ? என்றேன். வரதனின் தாய் கண்களை இடுக்கிக் கொண்டு தன் கரம் பிடித்தவன் பொம்மையாய் நீட்டிக் கொண்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் இருந்தாள்.

வரதனின் மனைவியை தேடியது எனது கண்கள். சங்கிலி சமாச்சரமாகத்தான். கிஞ்சித்தும் கீழ்மையே இல்லாத நேர்மையோடுதான்.

அவனும் சதாரணமாய் எனக்கு

< FONT size=5>பதில் சொன்னான், ?பைய்யன் பண்ற இமுசை அவ வெளியில நின்னுகிட்டு இருப்பா ?

சின்னக் குழந்தைங்களும் ஐ சி யு உள்ளாற வராம இருக்கிறது நல்லது வரதா ? எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய் பதில் சொன்னேன். என் மனம் ரணமாகித்தான் இருந்தது. இந்த கிராதகன் உள்ளே இருக்கும்போது நாம் ஏன் போகணும், என்று தான் அவள் வாயிலில் நின்றிருப்பாள் என்றது மனம் கள்ளத்தனமாய்.

அப்பாவை பாத்துக்கோ எந்த உதவின்னாலும் தயக்கம் இல்லாம கேளு, நான் பெறகு வந்து பாக்கிறேன், சொல்லிவிட்டு வெளியில் வந்துகொண்டிருந்தேன்

வரதனின் மனைவி நான் வருவதை அனுமானித்து சிறுவனோடு உள்ளே வந்து கொண்டிருந்தாள்.

நான் வர்ரங்க ?, எப்படியோ சொன்னேன் நான்

சரி சார்

பைடா குட்டிப்பையா

பை அங்கிள்.தாங்க் யூ

வார்த்தைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் அவள் பேசியது அவளியல்பாய் இல்லை என்பதை எனக்கு உணர்த்தின.

வரதன பாத்துகுங்க ரொம்ப மனசு உடஞ்சி இருக்கான்

ஆமாம் ரொம்பவே சார் ? அவள் எப்படியோ பதிலும் சொல்கிறாளே

அந்த அறுந்து தொங்கும் செயின் என்னவானது என்று பார்க்க துணிவு எழவில்லை. அவள் ஏதோ முணுமுணுத்து நடந்தாள்

?கண்ணுல பாரு கொள்ளிக்கட்டை ? சொல்லியிருக்கலாம் அவள்.

நான் மருத்துவமனையிலிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்தேன். நம் கண்கள் நமக்கு எதிராய். என்ன செய்ய. குடும்பத்துப்பெரியவருக்கு உடல் சுகம் இல்லை. அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டு நிற்கும் சக மனிதர்களுக்கு முன்பாய் அல்ப சில்மி ?ங்கள் தான் சாத்யப்படுமா, யார் இதைஎல்லாம் எடுத்து விளக்குவது. என் வரதன் மிக நல்லவன்.அவனுக்கு என்னைத்தெரியும்.அத்தோடு விட்டுவிடவேண்டியதுதான் மனம் சமாதானம் சொல்லிச் சொல்லி ஒய்ந்துபோனது.

பிள்ளைய ார் பிடிக்கப்போய் அது குரங்கில் முடிந்த கதைதானோ இது. வரதனிடம் நாம் சொல்லலாம். இல்லை சொல்லாமல் விடலாம் அதில் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.

தரதர என்று மனைவியின் கையைப்பிடித்து இழுத்து வந்த வரதன்,

? டா பாலா ராமு கெளம்புறான் பாரு ?

என்று சொல்லி என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சரி

சொல்லிய அவள் மீண்டு கொண்டு உள்சென்றாள்.

என் கண்கள் அவள் பின் கழுத்தையே முறைத்து நிறுத்தின. அவள் தன் முந்தாணையால் கழுத்தை மறைத்துத்தான் செல்கிறாள்.

இது எல்லாம் நமக்கு வேணுமா, வேலில போற ஒணானை பிடித்துவிட்டோம்

சொல்லிக்கொண்டேன்.

மறு நாள் வந்தது இறப்புச்செய்தி. வரதனின் அப்பாதான் இற்றுக்கொன்டு விட்டார்

அவனே தொலைபேசியில் தெரிவித்திருக்கலாம்தான். நேரம் யாரை விடுகிறது.

?நான் வரதன் வீட்டுலேந்து பேசுறேன் மாமா காலம் ஆகிவிட்டார் ?

வரதனின் மனைவிதான் பேசினாள்.

?அடடா ரொம்ப க ?டம் மனசுக்கு சங்கடமா இருக்கு ?

?எதுலதான் சங்கடம் இல்லே ? அவள் டெலிபோனை வைத்துவிட்டாள்

தெய்வம் வெறொன்றுதான் நினைத்து விட்டிருக்கிறது.ஊர் ?ிதம் செய்து கொண்டேன்.

என் கையில் இறப்புக்கென்ற மாலை ஒன்றோடு வரதன் வீட்டு வாயிலில் மனம் கனக்க நின்று கொண்டிருந்தேன். இறப்பு வீட்டுக்கு முன்பாக மனித மனம் குன்னிப்போகிறது. யாருக்கும் இதே கதிதான் போங்கடா என்று சொல்லிச்சொல்லித்தான்

சவங்கள் படுத்துக் கிடப்பதாகவே எனக்குத்தோன்றுகிறது.

?அப்பாவப்பாரு ராமு ? என் கால்களை கட்டிக்கொண்டு வரதன் அழுதுகொன்டிருந்தான்.

? ராமு உனக்கு தெய்வமா உன் அப்பா இருப்பாரு ?

நான் ஆறுதல் சொன்னேன். கண்களை ஒருமுறை மூடித்திறந்தேன்.

வரதனின் மனைவி சவத்தின் அருகிலிருந்தவள் விருட்டென்று இடத்தைக்காலி செய்தாள்.

?கழிசடையே நீயெல்லாம் இங்க வரணுமா ? அவள் சொல்லவில்லை. நான்தான் அவள் சொல்லிச்செல்வதாய் உணர்கிறேன்.

அந்தப்பின் கழுத்தில் சதைப்பிண்டமே கன்ணில் பட்டது. சங்கிலி என்னவானால்தான்

எனக்கு என்ன ?

—-

essarci@yahoo.com

Series Navigation

எல்லை!

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

பனசை. நடராஜன்


உப்பின் அளவு உணவிலே வேறுபட்டால்

துப்பிடத் தோன்றுமே ‘தூ ‘வென- எப்போதும்

துன்பத்தில் தோள்தந்து, தொல்லை தராதிருந்தால்

நன்றாய் நிலைதிருக்கும் நட்பு !

– —-
kpselvams@yahoo.com

Series Navigation

author

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்

Similar Posts