எச்.முஜீப் ரஹ்மான்
நீங்கள் இதை வாசிக்கும் போது மிகத் தெளிவாக புரியும் என்று நம்பலாம்.ஆனால் இதை வேறொரு ஆள் வாசிக்கும் போது உங்களுக்கு புரியாமலிருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.நீங்கள் காதில் ‘உய்..ங் ‘ என்ற இரைச்சல் மட்டுமே கேட்பதாக சொல்லுகிறீர்கள் அதோ அந்த குழந்தை வீறிட்டழும் சப்தம் கூட ‘உய்..ங் ‘ என்று மட்டுமே இருப்பதாக ஏன் சொல்லுகிறீர்கள் ? பசுமாடு விளிக்கும் சப்தம் கூட ‘உய்..ங் ‘ என்று தான் கேட்கிறதா ? வீட்டில் உள்ளவர்கள் ஏதோ வாயசைத்து பேசுகிறார்கள் என்று மட்டும் தான் புரியமுடிகிறதா ? என்ன அவர்களும் கூட ‘உய்..ங் ‘ என்று மட்டும் தான் சப்தமிடுகிறார்களா ? வேறு எந்த சப்தமும் கேட்கவில்லை என்றா சொல்லுகிறீர்கள் ? யாரு என்ன பேசினாலும் ‘உய்..ங் ‘ என்று மட்டும் தான் கேட்கிறதா ?
நீங்கள் தொலைக்காட்சியை பார்கிறீர்கள்.ஆனால் தொலைக்காட்சியில் இருந்து “உய்..ங்” என்று தான் சப்தம் வருவதாக சொல்கிறீர்கள்.சரி..தொலைக்காட்சியை விடுவோம்.போன் மணி ஒலிக்கிறது.ரிஸீவரை எடுத்துப் பேசுங்கள்.மீண்டும் “உய்..ங்” என்று மட்டும் கேட்கிறது என்றா சொல்கிறீர்கள். ? நீங்கள் “உய்..ங்” என்று சப்தம் கேட்கிறது என்று புகாராகவா கூறுகிறீர்கள். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.யாருமே உங்களிடம் “உய்..ங்” என்று மட்டுமே வேண்டுமென்று சப்தமிடுவதில்லை.அவர்கள் உங்களிடம் “உய்..ங்” என்று சப்தமிட வேண்டிய அவசியம் என்ன ? அவர்களை விடுங்கள்..குழந்தையும், பசுமாடும்,தொலைக்காட்சியும்,போனும் கூடவா “உய்..ங்” என்று சப்தமிடவேண்டும்.நீங்கள் குழம்பிப் போய் இருக்கிறீர்கள் அல்லது உங்களுக்கு காதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. உங்களிடம் பிரச்சனையை வைத்துக் கொண்டு மற்றவரை குறை சொல்வது அவ்வளவு நல்லதல்ல.
நீங்கள் வீட்டை விட்டு வெளியே இறங்கி சாலையில் மெதுவாக நடந்து கொண்டிருக்கிறீர்கள்.சாலையில் வேகமாகப் போகும் வாகனங்களின் இரைச்சலும்,ஹார்ன் சப்தங்களும் கூடவா “உய்..ங்” என்று கேட்கவேண்டும்.உங்களுககு எதிரே வருபவர்களும் உங்களை தாண்டி போகுபவர்களும் “உய்..ங்” என்று மட்டுமே சப்தமிட வேண்டிய அவசியம் என்ன ? நீங்கள் சொல்வது போல் எல்லோரும் திட்டமிட்டே இப்படி செய்கிறார்கள் என்பது வீணாக நீங்கள் கற்பனை செய்து கொண்டதாகும்.இந்த உலகத்த்டில் உள்ள எல்லா சப்தங்களும் உங்களுக்கெதிராக திசை திரும்பி சூழ்ச்சி செய்கின்றன என்று சொல்வது பெரிய அபாண்டமாகும். ஒவ்வொன்றும் அதற்கான சப்தத்துடன் அதனதன் ஏற்ற இறக்கங்களுடன் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.சலசலக்கும் ஓடையின் சப்தமும்,பெருகியோடும் ஆற்ரின் சப்தமும்,காட்டாற்றின் இரைச்சலும்,ஓங்கி விழும் அருவியின் சப்தமும்,ஆர்ப்பரித்து அடிக்கும் அலையின் ஓசையும்,மெல்ல வீசும் காற்ரின் சப்தமும்,பறவை,விலங்கு என்று எல்லாசப்தமும் வேண்டுமென்றே “உய்..ங்” என்று மட்டும் சப்திக்க வேண்டிய அவசியம் என்ன ? சத்தியமாக நம்புங்கள்.இயற்கையும் செயற்கையும் சப்த அளவில் மாறுபாடு கொண்டிருந்த போதிலும் நீங்கள் சொல்வதைப்போல் ஒரேவ்தமாக ஒலிப்பதில்லை என்பதெ உண்மையாகும். நீங்கள் கடைவீதியில் செல்கிறீகள்.சந்தைக்கு செல்கிறீர்கள்.அங்கெல்லாம் மக்கள் வேண்டுமென்றே “உய்..ங்” என்று மட்டும் சப்தமிடுவதாக சொல்கிறீர்கள்.
நீங்கள் கடைக்காரரிடம் சென்று பேசி அந்த பொருளை விலைக்கு வாங்க முயல்கிறீர்கள்.நீங்களும் பேசுகிறீர்கள்.கடைக்காரரும் பேசுகிறார்.பின்னர் எப்படி கடைக்காரர் மட்டும் “உய்..ங்” என்று மட்டுமே சப்தமிடுவதாக சொல்வீர்கள் எப்படியோ அந்த பொருளை வாங்கிய நீங்கள் அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கூட “உய்..ங்” என்று மட்டுமே சப்தமெழுப்புவதாக கூறுகிறீர்களே.இப்போது கடை வீதியில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.சற்று அமைதியாக சிந்தித்துப்பாருங்கள்.கடைவீதியில் மக்கள் “உய்..ங்” என்று மட்டுமே சப்தமெழுப்பி கொண்டு வியாபார நடவடிக்கையில் ஈடுபடமுடியாது வியாபாரிகளைப் பொறுத்தவரையில் “உய்..ங்” என்று மட்டுமே சப்தமெழுப்பிக்கொண்டு வியாபாரம் செய்தால் நிலைமை என்னவாகவிருக்கும் என்று நினைக்கிறீர்கள்.ஆனால் அப்படி தான் நடக்கிறது என்று அடித்து கூறுகிறீகள்
சிங்கம் கர்ஜிக்கிறது என்பதற்க்கு பதிலாக “உய்..ங்” என்று சப்தமிடுவதாகவும் புலி உறுமுகிறது என்பதற்க்கு பதிலாக “உய்..ங்” என்று சப்தமிடுவதாக சொல்வதும் யானை பிளிறுகிறது,ஓநாய் ஊளையிடுகிறது,குதிரை கனைக்கிறது,ஆடு கத்துகிறது,நாய் குரைக்கிறது,சேவல் கூவுகிறது,குளவி ரீங்காரம் செய்கிறது,காக்கை கரைகிறது என்பதர்க்கு பதிலாக இல்லை “உய்..ங்” என்று மட்டுமே சப்தமிடுவதாக நீங்கள் கூறுவதை நம்பமுடியாது.அதோ அந்த சிலைக்கு அருகில் பொதுக்கூட்டம் நடக்கிறது.ஒலிபெருக்கி ஓயாமல் “உய்..ங்” என்று மட்டுமே சப்தமிட்டுக்கொண்டு இருப்பதாக கூறுகிறீர்கள்.மேடையில் அமர்ந்திருப்பவர்கள் ஒவ்வொருபேராக மைக்கு முன் வந்து நின்று “உய்..ங்” என்று மட்டுமே சப்தமிடுவதாக சொல்கிறீர்களே..வழியில் உங்கள் நண்பன் உங்களை சந்தித்து “உய்..ங்” என்று மட்டுமே சப்தமிடுவாரா ? அப்படிதான் நடந்தது என்கிறீகள் சரி..எல்லோருமே,எல்லாமே “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்புவதால் என்ன லாபம் கிடைக்கபோகிறது.மிருகங்களின் ,பறவைகளின்,மற்றவைகளின் சப்தங்களை விடுங்கள்.மனிதர்கள் “உய்..ங்” மட்டுமே குரலெழுப்புவதால் உரையாடல் நிகழுமா ? பேச்சு நிகழுமா ? சொற்பொழிவு போன்ற அனேக காரியங்கள் நடைபெற வாய்ப்பு இல்லாமலல்லவா போகும்.சைகை காட்டி “உய்..ங்” என்று சொன்னால் புரியவாபோகிறது. வெறுமனே “உய்..ங்” என்று குரலெழுப்புவதால் உங்களால் புரியாமலல்லவா போகும்.அப்படி எல்லோரும் உங்களிடம் “உய்..ங்” என்று சொல்லுவதால் அவர்களுக்கல்லவா புரியாமல் போகும்.நீங்கள் பேசுவது தெளிவாக இருக்கிறது என்று சொல்லுகிறீர்கள்.ஆனால் அவர்களெல்லாம் “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்பினால் எப்படி தொடர்பு உருவாகும் ? உங்களிடம் தொடர்பு வைத்திருக்காமல் இருக்க பிறர் விரும்புவார்களா ?ஏதாவது பகை இருந்தால் கூட “உய்..ங்” குரலெழுப்ப மாட்டார்களல்லவா. பிறர் உங்களி டம் பேசும் போது குறைந்தபட்சம் ‘ஆம் ‘ அல்லது ‘இல்லை ‘ என்றுதாம் சொல்லுவார்களே ஒழிய நீங்கள் சொல்லுவது போல “உய்..ங்” என்று குரலெழுப்பினால் என்ன புரிய போகறது. உங்களுக்கு புரியாத போது திருப்பி எப்படி பேச முடியும். நீங்கள் பேசிக்கொண்டிருப்பதாக சொல்லுகிறீர்கள்.ஆனால் பதிலுக்கு அவர்கள் “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்புவதாக சொல்லுகிறீர்கள். இதனால் பலவிதமான சிக்கல்கள் தான் உருவாகுமே தவிர வேறொன்றும் நேராது.
மேலும் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.சாதாரணமாக பழக்கமில்லாதவர்களை கண்டால் தான் நாய் குரைப்பது இயல்பு.ஆனால் உங்களைப்பார்த்து நாய் “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்புவதாக சொல்லுவது சரியானதல்ல.நீங்கள் கேட்டை தாண்டி வாசலருகே சென்று ஹாலிங்பெல்லை அழுத்துகிறீர்கள். சில நிமிடங்களுக்குளாக அந்த பெண்மணி கதவை திறந்து உங்களிடம் “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்புவது எதற்க்காக. நிச்சயமாக உங்களுக்கு அந்த பெண்மணி எழுப்பிய குரலில் என்ன புரிந்திருக்கும் அந்த பெண்மணி ஒருவேளை உங்கள் நண்பர் இல்லை வெளியில் போயிருக்கிறார் என்று சொல்லாம் அல்லது அவர் உள்ளே இருக்கிறார்,வாருங்கள் என்று அழைத்திருக்கலாம்.ஆனால் நீங்கள் எதுவுமே புரியாமல் ‘நாளைக்கு காலையில் அவரை வீட்டுக்கு வர சொல்லுங்கள் ‘ என்றீர்கள்.அத்துடன் அங்கே நிற்காது திரும்பி வந்துவிட்டார்கள்.ஆனால் நீங்கள் உங்கள் நன்பனை சந்தித்துபேச எண்ணிதான் வீட்டிற்க்கு சென்றீகள்.ஒருவேளை உங்கள் நண்பர் வீட்டில் இருந்திருந்தால் உங்களை பற்றி என்ன நினைத்திருப்பார். வா என்று சொல்லியும் வராமல் தானே போய்விட்டான் என்று தானே நினைப்பார்.வீட்டை விட்டு தெரு வழியாக நடந்து வரும் நீங்கள் ஒரு கும்பல் உரத்த குரலில் “உய்..ங்” கோஷம் போட்டு சென்றிருக்க முடியுமா ? ”உய்..ங்” என்று கோஷம் போட முடியாது.கோஷம் போடுவதற்கான காரணங்கள் குறைந்தபட்சம் வாழ்க அல்லது ஒழிக என்று தான் சொல்லிச் சென்றிருப்பார்களே ஒழிய நீங்கள் சொல்வது போல் இல்லை என்பது தான் உண்மை.
உங்கள் மனைவி, குழந்தைகள்,பெற்றோர்,சகோதர சகோதரிகள்,உற்றார் உறவினர்கள்,நண்பர்கள்,அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அனைவரும் உங்களுக்கு கேட்கும் சக்தியில் ஏதோ குளறுபடி நடந்தாக நம்பி கொண்டு உங்களை பிரபல ஈ.என்.றி டாக்டரிடம் கொண்டு போய் விஷயத்தைச் சொல்லி டாக்டரின் அட்வைசின் படி பல டெஸ்டுகள் எடுத்து கொடுத்த போது அதை படித்து பார்த்த டாக்டர் எந்த குழப்பமும் இல்லை என்று சொன்ன போது எல்லோரும் திடுக்கிட்டு போயினர்.பின்னர் நீங்கள் எனக்கு தான் ஆரம்பத்திலிருந்தே பிரச்சனையொன்றுமில்லை வேண்டுமென்றே எல்லோரும் ,எல்லாமும் “உய்..ங்” என்று குரலெழுப்புகின்றன என்றபோது உங்கள் மனைவி கதறி அழுதாள்.அப்போதும் நீங்கள் உங்கள் மனைவி “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்புவதாக கூறுகிறீர்கள்.உங்களை பல டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போய் காண்பித்து விட்டனர். எல்லோரும் ஒரே பதிலை தான் சொல்லுகிறார்கள். உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று.அதுதான் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.எல்லாவிதமான மருத்துவ முறை டாக்டர்களையும் பார்த்தாயிற்று.கோயில்,குளம்,தற்ஹா,குருசடி என்றும் பார்த்தாயிற்று. துறவிகள்,மகான்கள்,சாமியார்கள் எல்லோரையும் பார்த்தாயிற்று.ஆனால் இன்னமும் நீங்கள் எல்லோரும்,எல்லாமும் “உய்..ங்” என்று குரலெழுப்புவதாக கூறுகிறீர்கள்.
நீங்கள் பேச்சை ஒருவேளை சாதாரணமாக இருப்பதால் பேச்சின் மகத்துவம் தெரியாமல் எல்லோரும் உங்களை பரிகாசம் செய்வதாக நினைத்து கொள்கிறீகள்.நீங்கள் பேசும் போது வேண்டுமென்று ஒருவர் பரிகாசம் செய்தாலும் “உய்..ங்” என்று குரலெழுப்பமாட்டார்கள்.வெறுமனே ஒலி எழுப்புவதால் உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்த முடியாது.தவிரவும் இது விலங்கின் குணம் ஆகும்.மேலும் ஒருவர் விலங்கின் குணத்தோடு இருக்கமாட்டார்கள் என்பது முக்கியமாகும்.மனிதர்களும் சரி,விலங்குகளும் சரி நீங்கள் சொல்வது போல இருந்தால் எந்த வித்தியாசமும் இல்லை என்றாகி விடாதா ? எனவே பேசுவது என்பது பரஸ்பரம் புரிந்து கொள்ளும் ஒரு முயற்சி ஆகும்.பேச்சின் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபட்டாலும் பேச்சை தாண்டி வேறு வகையில் புரிவது ஆபத்தான விஷயமாக மாறிவிடும் என்று தெரிந்து வைத்துள்ளனர்.
திபாவளி சீஷனாக இருப்பதால் எல்லோரும் பட்டாசு வெடிக்கும் சப்தம் கூட “உய்..ங்” என்று கேட்பதாக சொல்வது யோசித்து பார்க்க வேண்டிய விஷயம் தான்.இரயில் போகும் சப்தமும்,விமானம் பறக்கும் சப்தமும்,கல்குவாரியில் பாறையை வெடிவைத்து பிளக்கும் சப்தமும்,டிராபிக் ஜாமால் வாகனங்களின் ஹார்ன் சப்தமும்,வாகனங்களின் இரைச்சல் சப்தமும்,கோவில் மணி ஓசையும், ஸ்கூல் விடும் போது வருகின்ற ஆர்பரிப்பும்,ஆர்பாட்ட சப்தங்களும்,பலமாக வீசியடிக்கும் காற்றின் இரைச்சல் சப்தமும்,மேகம் திரண்டு தெறித்த மின்னல்கீற்றில் கேட்ட இடியோசையும்,மழை பெய்யும் சப்தமும்,திருமண மண்டபத்தில் இருந்து வரும் ஆர்கெஸ்டிரா சப்தமும்,அடுத்த தெருவில் மரித்து போன வீட்டில் இருந்து வரும் அழுகை சப்தமும் என்று எல்லா சப்தங்களும் “உய்..ங்” என்று மட்டுமே கேட்பதாக சொல்கிறீர்கள்.
நீங்கள் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருக்கும் போது நண்பர்கள் வந்து “உய்..ங்” என்ற சப்தம் எழுப்பிக்கொண்டு போனதும்,மனைவி குழந்தைகள் “உய்..ங்” என்று சப்தம் எழுப்பி கொண்டிருப்பதாகவும்,அக்கம் பக்கத்திலுள்ளோர்கள் வந்து உங்களிடம் “உய்..ங்” என்று சப்தம் எழுப்பிக்கொண்டு சென்றதாகவும் தொடந்தார்போல் பலபேர்கள் “உய்..ங்” என்று மட்டுமே சப்தம் எழுப்பியதால் எரிச்சல் கொண்டு வீட்டுக்குள் சென்று அறையை தாழிட்டு கொண்டு இருந்ததாக சொல்கிறீர்கள்.உங்கள் சகோதரர் வந்து அறைகதவை தட்டியபோது “உய்..ங்” என்ற சப்தத்தால் கோபபட்டு படாரென கதவை திறந்து கொண்டு வெளியே வந்த போது சகோதரர் நின்றிருந்தார்.அவர் “உய்..ங்” என்று பேசுகிறார்.நீங்கள் பதிலுக்கு என்னவென்றே தெரியவில்லை எல்லோரும் என்னை எரிச்சலூட்டுகிறார்கள் என்கிறீர்கள்.அதற்கு பதிலாக அவர் “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்பியதாக கூறுகிறீர்கள்.நீங்கள் பேசும் போது தம்பி .. எல்லோரும் என்னை ஒருமாதிரியாக பார்ப்பது எனக்கு சங்கோஜமாக இருக்கிறது. நீ வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம்.இங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பார்.. மைனியும்,குழந்தைகளும்,பெற்றோர்களும் என்னை சுற்றி நின்று ஏளனம் செய்வது போல் தான் படுகிறது.நீயாவது அவர்களிடம் சொல்லி விலக்கி வை.என் நண்பர்களுக்கு என்ன ஆகி விட்டது. என்னை ஏன் திடாரென்று பரிகசிக்கவேண்டும்.ஒவ்வொருவராக வந்து நின்று என்னை கிண்டல் செய்கிறார்கள்.என் பொறுமைக்கும் ஓரளவு தான் எல்லை உண்டு.எவ்வளவு நேரம் தான் பொறுத்து பார்ப்பது.பக்கத்து வீட்டுகாரர்கள் கூட..சே..சே..நான் அவர்களிடம் நல்லவிதமாகவல்லவா பழகிக்கொண்டிருந்தேன்.அவர்களும் என்னை ஏளனம் செய்வது போல குரலெழுப்ப வேண்டுமா ? வேண்டுமென்றே எல்லோரும் ஏளனம் செய்கிறார்கள்.வெளியே இறங்கினதும் அப்படிதான் இருக்கிறது.சம்பந்தமில்லாதவர்கள் கூட ஏளனம் செய்கிறார்கள்.ஒருவேளை என்னை என்ன பைத்தியம் என்று நினைத்துக்கொண்டார்களா ? நான் பார்ப்பதற்கு தான் சாது.. கோபம் வந்தால் உனக்கே என்னை நல்லா தெரியும்.தயவு செய்து இந்தமாதிரியெல்லாம் கிண்டல் செய்யகூடாது என்று எல்லோரிடமும் சொல்லிவை.
நான் தாலி கட்டிய மனைவியும் ,பெற்றபிள்ளைகளும்,பெற்றோரும் என்னை ஏள்னம் செய்யும் போது மற்றவர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்.எல்லாம் இப்படி தலைகீழாக மாறிப்போக என்ன காரணம் என்றே தெரியவில்லை.எல்லோரும் என்னிடம் தான் குழப்பம் இருப்பதாக சொல்கிறார்கள். நிச்சயமாக நான் ரொம்ப தெளிவாக தான் இருந்து கொண்டிருக்கிறேன்.என்னை சீண்டி விடுவதற்காக எல்லோரும் போடும் நாடகம் என்றே எனக்கு படுகிறது.திடாரென்று எல்லோரும் இவ்வளவு சாமர்த்தியமாக எப்படி தான் நடந்து கொள்ள முடிகிறது என்றெனக்கு வியப்பாகதான் இருக்கிறது என்று நீங்கள் சொல்லியபோது உங்கள் தம்பி பதிலுக்கு “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்பியதால் கோபபட்டுக்கொண்டு அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டு இருந்துவிட்டாகள்.
உங்களை “உய்..ங்” என்ற சப்தசுளி மூழ்கடித்து எங்கோ கொண்டு சென்று விட்டது. கண் திறந்து பார்த்தபோது உங்களுக்கு எல்லாமே நீலநிறத்தில் தெரிந்தது.எங்கு நோக்கினும் நீலநிறப்புகை கசிந்து கொண்டிருப்பதாக தோன்றியது.நீலநிறத்தையுடைய இலைகளைக் கொண்டொரு மரம் அசைந்தாடிக் கொண்டிருந்தது.செடிகொடிகள்,புற்பூண்டுகள்,மலைகள்,ஆறு அருவிகள்,விலங்குகள்,பறவைகள் இன்னபிற எல்லா ஜீவராசிகளும் நீலநிறத்திலே தெரிந்தது.நீலம், கருநீலம்,வெளிர்நீலம்,மென்நீலம்,உலர்நீலம் என்றுபலவகையான நீலங்களில் இயற்கையும்,ஜீவராசிகளும் காட்சியளித்துக் கொண்டிருந்தது. நீங்கள் பார்த்துகொண்டிருந்த போது அதிரூபசுந்தரியான தேவதையொருவள் உங்களருகில் தோன்றி வாழ்த்தி வரவேற்று வானத்தின் பால் உயர்த்தினாள்.வானத்தையடைந்த அவள் கதவை திறக்குமாறு கூறினாள்.அப்போது நீ யார் ? என்று கேட்கப்பட்டது. நீலலோகிதை என்று மறுமொழி பகர்ந்தாள்.உம்முடன் இருப்பவர் யார் என கேட்கப்பட்டது.மனிதபிறவி எனக்கூறினாள்.அவரையும் இங்கு அழைத்துவர அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என கேட்கப்பட்டது.ஆம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினாள்.உடனே கதவு திறக்கப்பட்டது.அப்போது நீங்கள் சிலரை சந்தித்து பேசியதாக கூறினீர்கள். அவர்களுடன் பேசும்போது அவர்கள் சொன்ன பதில் தெளிவாக கேட்டதாக கூறுகிறீர்கள்.”உய்..ங்” என்ற சப்தம் இப்போது கேட்கவில்லை என்கிறீர்கள்.தேவதை உங்களை பற்றி விலாவாரியாக எடுத்துரைக்கிறாள்.அவர்களுடன் பேசிய பேச்சிலிருந்து அந்தபகுதி சொர்க்கம் என்பதையும் மாட்சிமைமிக்க அவர்கள் நீல நிறத்திலிருப்பதையும் அறிந்துகொண்டார்கள்.
அந்த பகுதியே ஒரு பெரிய அரண்மனை மாதிரி தான் இருந்தது என்று சொன்னீர்கள் .அவர்கள் யாவரும் சிம்மாசனங்களில் வீற்றிருக்க பணிப்பெண்கள் சாமரம் வீசிக்கொண்டிருந்தார்கள். ஜந்தாறு பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர் . அற்புதமான இசை அந்த பகுதியில் பிரவாகமெடுத்தது. நீலநிற தட்டுகளில் வைத்திருந்த கனிவர்க்கங்கள் கூட நீலமாகயிருந்தது.குவளைகளில் வைக்கப்பட்டிருந்த பானங்கள் நீல நிறத்தில் காட்சியளித்தன.தேவதை உங்களை எல்லா இடங்களையும் சுற்றிகாட்டுகிறாள். நீல நிறத்தில் அந்த அரண்மனை அழகாக காட்சியளித்ததாகவும், வினோதமாக இருந்ததாகவும் கூறுகிறீர்கள்.நீலநிறத்தையுடைய பணிப்பெண்கள் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தனர் என்கிறிர்கள்.மாளிகையில் தொங்கிக்கொண்டிருக்கும் அலங்கார விளக்குகள் நீலநிறத்தில் ஒளியை உமிழ்ந்தன.அந்த நீலநிற வெளிச்சத்தில் அலங்கார நீரூற்றுகள் பீச்சியடித்ததும் அழகாக காட்சியளித்தது. மாடமாளிகைகளும்,கூட கோபுரங்களும்,நெடிதுயர்ந்து நிற்கும் தூபஸ்தம்பங்களும் என அரண்மனை காண்போர் கண்ணை கொள்ளை கொள்ளச் செய்வதாக கூறுகிறீர்கள்.நீங்கள் நடந்து வரும்போது கொஞ்சம் புறாக்கள் காலடி சப்தம் கேட்டு படபடவென சிறகடித்து பறந்து போயின.அவையும் நீலநிறத்தில் இருந்தன.நீல நிற மயில்கள் அலைந்து திரிந்தன.இப்படி பார்க்குமனைத்தும் நீலநிறமாக இருப்பது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது.இப்போது தேவதை உங்களை அந்தபுரத்தில் அழைத்துச் செல்கிறாள்.அங்கே அழகிய தேவதைகள் நிறைய பேர் நின்றுகொண்டிருந்தனர்.அவர்களது தலையில் வைக்கப்பட்டிருந்த கிரீடத்திலிருந்து நீலநிற கற்கள் நீல ஒளியை உமிழ்ந்தன. உங்கள் கையை பிடித்திழுத்திறக்கி தாடகத்தில் குளிப்பாட்டிவிடுகிறார்கள்.நீங்கள் ரொம்பவும் வெட்கபட்டு கொண்டே குளித்து முடித்தாக கூறுகிறீர்கள்.பின்னர் விருந்துபசாரம் தடால் புடாலாக நடந்தெறியது.விருந்துண்டு முடிந்ததும் நீங்கள் ஓய்வெடுப்பதற்காக அரண்மனையின் விருந்தினர் மாளிகையில் அனுமதிக்க பட்டார்கள்.விருந்தினர் மாளிகையில் சயன அறையில் உங்களை விட்டுவிட்டு தேவதை விடைபெற்றுகொள்கிறாள். அறையில் மூன்று தேவதைகள் உங்களை இழுத்து படுக்கையில் போடுகின்றனர். இப்போது விளக்குகளின் வெளிச்சத்தை குறைக்க மங்கலான வெளிச்சத்தில் தேவதைகளை கண்ட நீங்கள் உடம்பில் உஷ்ணம் ஏறுவதை உணர்கிறீர்கள்.
சயனத்தில் கிடக்கும் உங்களை தேவதைகள் குறும்புகள் செய்து மகிழ்விக்கின்றனர்.தங்களது மேலாடைகளை கழற்றி காமமூட்டுகிறார்கள்.நீங்களும் காம களியாட்டங்களில் ஈடுபடுகிறீர்கள்.நீங்கள் உட்பட தேவதைகள் மூன்று பேரும் நிர்வாணமாக படுக்கையில் கிடந்து புரள்கிறீர்கள்.ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று மூன்று பேரையும் அனுபவிக்கிறீர்கள்.உங்கள் விந்து ஸ்கலிதமானதை உணரும் போது சொர்கத்தில் தான் இருந்தீர்களா அல்லது பூமியில் தான் இருந்தீகளா என்று தீர்மானமான முடிவுக்கு வரவில்லை என்று கூறும் நீங்கள் “உய்..ங்” என்ற சப்தத்தை பின் எப்போதும் உணரவில்லை என்று அடித்து சொல்கிறீகளே.
எச்.முஜீப் ரஹ்மான்
—-
mujeebu2000@yahoo.co.in
- பனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு
- உன்னதம் இலக்கிய இதழ்.
- ‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி
- உயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்
- கடிதம்
- தவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து
- விளக்கு பரிசு பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனுக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- வாஷிங் மெஷினும், மனுஷனும்!!
- அகமும் புறமும் (In and Out)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்
- தவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்
- ‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து
- ‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்
- நிலாக்கீற்று -3
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2
- அப்பாவி ஆடுகள்
- நிவாரணம் வந்தது மனிதம் போனது!
- கீதாஞ்சலி (55)
- பெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்
- ரிஷபன் கவிதைகள்
- ஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்
- ‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1
- ராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு!
- எல்லாம் ஒலி மயம்
- பயம்
- கன்னிமணியோசை
- மஹான்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)