எப்போதும் நம் வசமே

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


#

எப்போதும் நம் வசமே
கொடுக்கப்பட்டிருக்கிறது

ஏதொன்றையும்
தேர்ந்து கொள்ளும்
உரிமை

வயோதிக வயதில்
வாய்க்குமொரு
உத்தியோக உயர்வோ

கடும் முதுகு வலியோடான
கார் பயணமொன்றோ

முழுதும் படபடப்புடன்
மேற்கொள்ள நேரும்
ஒரு சுற்றுலாவோ

அமைதியற்ற மனதுடன்
கூடிய
ஷாப்பிங் நாளொன்றோ

சிற்சில
பிழைகளோடான

சீரிய கவலையேதுமற்ற
ஒரு வாழ்வோ

சின்னச் சின்ன
சண்டைகளுடனோ

விழுந்தெழுந்த சில
காதல் நினைவுகளுடனோ

தேர்வதில் நிகழும்
அத்தனை
சாதக பாதகங்களுடன்

ஏதொன்றையும்
தேர்ந்து கொள்ளும்
உரிமை

எப்போதும் நம் வசமே
கொடுக்கப்பட்டிருக்கிறது.

o

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி