எனக்குள் எரியும் நெருப்பு.

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

நளாயினி தாமரைச்செல்வன்


என் பிறப்பே உனக்கென்றாய்.
உன் விழி கொண்டு அன்பை
ஊற்றெடுக்க செய்தாய் என்றாய்-என்
இனியவளே இனி நீயே-என்
இதயம் என்றாய்-உன்
சிரிப்பே என் ஒளி என்றாய்.
உதயம் என்றாய்.
உன்னிப்பாய் என் செவிகள்-உன்
உயிர்ப்பை புரிந்தன.
உயிர்ப் பூக்களாய் இப்புவியில்
உலா வருவோம் என்றாய்-உன்
உருவத்திலும் அன்பு உயர்வாய் எனக்கு-உன்
கண் சிமிட்டலில் நசிந்தேன் என்றாய்-ஏன்
தூரம் சென்றாய் ?.!-உன்
நினைவுகள் மட்டுமே என்னிடம்-ஏனோ
என் நினைவுகள் இன்னும் உனக்காய் உயிர்ப்புடன்.
இன்றும் உன்னிப்பாய் -உன்
குரலுக்காக என் செவிகளை செவிடாக்காது.
____
நளாயினி தாமரைச்செல்வன்
சுவிற்சலாந்து.

thamarachselvan@hotmail.com

Series Navigation