உலகம் உலர்ந்து விட்டது

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

கே.பாலமுருகன்


இனி
ஓர் உலகத்திற்காகப்
போராடுவதை நிறுத்திக் கொள்வோம்!

போதும்
இந்த உலகமே!

இந்த உலகத்தில்
எனது கனவுகள்
தொலைந்து விட்டன!

நம்பிக்கையும்
இழந்து விட்டவனாகிவிட்டேன்!

ஓர் இரவில்
என் பழைய
காதலி சாளரமோரமாக
தோன்றி ஒர் இரகசியத்தைக்
கூறிச் சென்றாள்!

“உலகம் உலர்ந்து விட்டது. . போய்விடு”

வீட்டிலிருந்து கிளம்பி
இருளில் நடைபிணமானேன்!

எங்கு நடப்பது?
நடந்து கொண்டிருந்தேன்!

பார்க்கும் முகங்களெல்லாம்
கல்லறை படங்களாக மாறின!

உலகம் உலர்வதற்கு முன்பதாக
ஏன் இவர்கள்
வீட்டைக் கல்லறையாக்கிவிட்டார்கள்?

இந்த உலகத்தில்
வேறொன்றுமில்லை!


கே.பாலமுருகன்
மலேசியா

bala_barathi@hotmail.com

Series Navigation