உயிர் தேடும் வண்ணங்கள்
தினேசுவரி, மலேசியா
சில
வண்ணங்கள்
இழந்ததாக
நான் கண்ட கனவுகளில்
தூரிகைகள்
இருத்தலை
உறுதி செய்தது…..
மரங்களுக்கான
என் பச்சை நிறமும்
வானத்திற்கான
என் நீல நிறமும்
களவாடப் படும்
சாத்தியங்கள்
இருப்பினும்
என் சகவாசம்
நிலைத்தது வெள்ளை
வண்ணங்களோடு……..
நிஜம் வண்ணமா…?
தூரிகையா…?
பிரிதொரு நாள்
தூரிகைகள்
தொலைந்ததில்
சூழ்ந்து கொண்டது
வெறுமை….
மங்கிய
வண்ணங்களோடு
தேடல்
தொடர்ந்துக் கொண்டே…….
– தினேசுவரி, மலேசியா
salthana82@yahoo.com.my