இறுதி

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

தி கோபாலகிருஷ்ணன், திருச்சி


ஆணும் பெண்ணும்
நண்பர்களாகவே
இருக்க முடியுமா
இறுதி வரை ?

நிச்சயமாக
இருக்க முடியும் –
அந்த இறுதி வரும் வரை

யாருமற்ற தனிமையில்
தற்செயலாக சந்திக்க நேர்ந்து
இருவருமே போலித்தனம்
துறக்காவிட்டால்
அந்த இறுதி வராமலே போகலாம்.

gk_aazhi@rediffmail.com

Series Navigation

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி