இரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி ? மொழிக்கான மரபணு அடிப்படை

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

நிக்கலோஸ் வேட் (நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து)

அக்டோபர் 4, 2001

பேச்சுக்கும் மொழிக்கும் மரபணு ரீதியான அடிப்படை இருப்பதையும் அதற்கு ஒரு குறிப்பிட்ட ஜீன் காரணமாக இருப்பதையும் மரபணு ஆய்வியலாளர்களும், மொழியியலாளர்களும் கண்டறிந்திருக்கிறார்கள்.

மொழி என்பது நமது மூளையில் இருக்கும் நியூரான் இணைப்புகளால் உருவானதே தவிர, நமது மூளை செய்யும் பொதுவான வேலைகளால் (உதாரணமாக சாப்பிடுவது பசி உணர்வு போன்றது- மொ பெ) உருவாகும் விளைவு அல்ல என்பதை இந்தக் கண்டுபிடிப்பு உறுதி செய்கிறது.

மற்ற விலங்குகளுக்கு இல்லாத , மனித நடவடிக்கைகளைப் பாதிப்பதாக அறியப்பட்ட மற்ற ஒரு சில ஜீன்களில் ஒன்று இந்த ஜீன்.

மனிதக்குழந்தை வளரும் போது இந்த ஜீன் உருவாக்கும் சில புரோட்டான்கள் மற்ற சில ஜீன்களைப் பாதித்து அந்த ஜீன்கள் உருவாக்கும் புரோட்டான்கள் இன்னும் பல ஜீன்களை பாதித்து உருவாக்கும் நியூரான்கள் மூளையில் இணைந்து மொழிக்கான அடிப்படையை உருவாக்குகின்றன. இந்த ஜீனுக்கு கீழே இருக்கும் பல ஜீன்களை கண்டுபிடிப்பதன் மூலம், மனித மொழிக்கான அடிப்படையை முழுவதுமாக விடுவிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தக் கண்டுபிடிப்பு, பரிணாம வளர்ச்சியில் மொழி எப்போது, எந்த கட்டத்தில் வந்தது என்பதையும், மனித மொழி அளித்த ஆற்றல்தான் மனிதர்கள் பரவிப் பெருகி உலகெங்கும் ஆட்சி செலுத்துவதற்கு முக்கிய காரணமா என்ற கேள்விகளுக்கும் பதிலளிக்க உதவும்.

சில அறிவியலாளர்கள் இந்த ஜீனுக்கும் மொழிக்கும் இருக்கும் தொடர்பு இவ்வளவு வெளிப்படையானது அல்ல என்று நம்புகிறார்கள். இதனால், வெகுகாலமாக அறிவியலாளர்களிடன் இருந்து வரும் விவாதம் இதனால் சூடுபிடிக்கலாம். மொழியை சில குறிப்பிட்ட தனித்துவம் வாய்ந்த மரபணுக்கள் தான் கட்டுப் படுத்துகிறது என்று ஒரு சாராரும், வேறு சிலர் பொதுவான மூளைச் செயல்பாட்டின் ஓர் அங்கம் தான் மொழி என்றும் கருதுகின்றனர்.

இந்தப் புதியக் கண்டுபிடிப்பு ‘நேச்சர் ‘ இதழில் டாக்டர் அந்தோணி பி மொனாக்கோ அவர்களும் அவருடைய ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தோழர்களும் எழுதி வெளிவந்திருக்கிறது.

இந்த ஜீன் முதன் முதலாக ஒரு பெரிய குடும்பத்தை ஆராயும்போது வெளிப்பட்டது. லண்டனில் வாழும் இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் திணறுகிறார்கள். இலக்கண ரீதியாகப் பேசவும் இவர்களால் இயலவில்லை. நாக்காலும், உதடுகளாலும் சில அசைவுகளை ஏற்படுத்தத் தெரியாமல் இருக்கிறார்கள். வெறுமே ‘படாகா படாகா படாகா ‘ என்று சொல்லச்சொன்னால், ஒவ்வொரு முறை சொல்வதற்கும் அவர்கள் திணறுகிறார்கள். இந்தக் குடும்பத்திற்கு வெளியே இருப்பவர்கள் இந்தக் குடும்பத்தார் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள கஷ்டப்படுகிறார்கள். குடும்பத்துக்குள்ளேயும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள கஷ்டப்படுகிறார்கள். இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றவகையில் சாதாரணமாகவே மற்றவர்களைப் போல நடைமுறையிலும் பழக்கவழக்கத்திலும் இருக்கிறார்கள். ஆகவே இதற்கு ஒரு குறிப்பிட்ட ஜீன் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இப்போது இந்தக் குடும்பத்தில் பாதிக்கப்பட்டவர்களது உடலில் இருக்கும் டி என் ஏவில் ஒரு குறிப்பிட்ட ஜீன் சிறிய மாறுபாட்டை (mutation) அடைந்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். இவர்களது டிஎன் ஏவில் இருக்கும் ஒரு ஜீனின் 6500 பகுதிகளில் ஒரு பகுதி மாறியிருப்பதால், இந்த குறைபாடு நிகழ்ந்திருக்கிறது. இது இந்த குறிப்பிட்ட ஜீன் எவ்வளவு முக்கியமானது என்பதும், இதில் நடக்கும் ஒரு மிகச்சிறிய மாறுதல் எந்த அளவுக்கு மனித மொழியைப் பாதிக்கிறது என்பதையும் காண்பிக்கிறது.

மொழிக்குறைபாடு உள்ள பலரது டி என் ஏவை ஆராயும்போது, இந்த ஜீனில் இருக்கும் மாறுபாடே காரணமாக இருப்பது தெரிகிறது. 1990இல் லண்டனில் இருக்கும் ஒரு சொந்தக்கார குழுமத்தில் பரவலாகத் தெரியப்பட்ட இந்தக் குறைபாடு ஆராய்ச்சியாளர்களின் கவனத்துக்கு வந்தது. இப்போது இந்தக் குடும்பத்தில் சுமார் 29 பேர்கள் இருக்கிறார்கள். அதில் 14 பேருக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது.

இந்தக் குடும்பத்தை ஆராய்ந்த முதலாவது மொழியியலாளர் டாக்டர் மைர்னா கோப்னிக் என்ற மாண்டிரியலில் இருக்கும் மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், இந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரு வினைச்சொல்லின் காலவேறுபாட்டு மாற்றத்தை சரியாகச் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள் என்பதை கண்டுபிடித்துச் சொன்னார் இவர். மொழி இலக்கணத்துக்கு ஜீன் சம்பந்தம் இருப்பதாக காட்டும் இந்தக் கண்டுபிடிப்பு மொழியியல் உலகத்தில் பெருத்த விவாதத்தைக் கிளப்பியது.

ஆனால், குழந்தை நலனுக்கான லண்டன் நிறுவனத்தில் பணிபுரியும் டாக்டர் ஃபாரானெ வார்கா-காதெம் அவர்கள் இந்தக் குடும்பத்தை ஆராய்ந்து, இந்தக் குடும்பத்துக்கு பரந்த அளவில் மொழிக்குறைபாடு இருப்பதையும், பேச்சு மற்றும் மொழியிலும், பொதுவான அறிவிலும் குறைபாடு இருப்பதையும் கண்டுபிடித்துச் சொன்னார். இந்த ஜீன் மாறுபாடு, ‘பேச்சை பாதிக்கிறது, இதன் தொடர் விளைவாக பேச்சுமொழி அல்லாத மற்ற திறமைகளையும் பாதிக்கிறது ‘ என்று குறிப்பிட்டார்.

1998இல் டாக்டர் மொனாக்கோ அவர்களும் அவரது தோழமை மரபணு ஆராய்ச்சியாளர்களும் இந்த லண்டன் குடும்பத்தின் மரபணுவில் மாறுபட்ட அல்லது இல்லாத ஜீனைத் தேடி வேலையை ஆரம்பித்தார்கள். மனித டி என் ஏ இல் இருக்கும் 23 குரோமசோம்களில் 7ஆவது குரோமசோமில் இந்த பிரச்னை இருக்கும் என்று கண்டுபிடித்தார்கள். ஆனால் 7 ஆவது குரோமசோமில் இவர்கள் குறிப்பிட்ட பகுதியில் 100 ஜீன்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு ஜீனையும் ஆராய்ந்துகொண்டிருக்கும்போது, டாக்டர் ஜேன் ஏ ஹர்ஸ்ட் என்ற மருத்துவர் இன்னொரு குடும்பத்தில் இதே போன்ற குறைபாடு உடைய ஒருவரைக் கண்டுபிடித்தார்.

இந்த புது நோயாளிக்கு 7ஆவது குரோமசோமில் வித்தியாசம் இருந்ததை வைத்து டாக்டர் மொனாக்கோ அந்த மாறுபட்ட ஜீனைக் கண்டுபிடித்தார். இதே மாறுபாடுதான் லண்டன் குடும்பத்திலும் இருந்தது. ஆனால் இந்த ஜீன் அந்தக் குடும்பத்தில் வேறுவிதமான சேதத்திற்கு ஆள்கியிருந்தது.

இந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஜீன் ஒரு குறிப்பிட்ட புரோட்டானை உருவாக்குகிறது. இது டி என் ஏவில் இருக்கும் பல இடங்களைப் பாதித்து பல அருகாமை ஜீன்களுக்கு ஆணையிடுகிறது. எந்த எந்த ஜீன்கள் இந்த ஜீனால் ஆணையிடப்படுகின்றன என்பதை கண்டுபிடிக்கும்போது எப்படி மனித மூளைக் கட்டமைக்கப்படுகிறது என்பதையும் அறிய நல்ல வாய்ப்பு இருக்கிறது.

‘இந்த புது ஜீன் நமக்கு மொழிக்கான திறவுகோலாக இருக்கிறது ‘ என்று டாக்டர் மொனாகோ குறிப்பிடுகிறார்.

எப்போது மொழி பரிணாமத்தில் வந்தது என்ற கேள்விக்கு விடையைக் கண்டுபிடிக்க அறிவியலாளர்களுக்கு இந்த ஜீனின் கண்டுபிடிப்பு உதவும். சில நிபுணர்கள் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய மனித தலை எலும்புகளில் மொழிக்கான தடயங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டாலும், பல நிபுணர்கள் ‘ஓவியம் ‘ போன்ற வேறுவகை குறியீட்டு வடிவங்கள் மிகவும் சமீபத்திலேயே தோன்றியிருக்கின்றன என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள். இரண்டும் ஒரே நேரத்தில் பரிணமித்திருந்தால், மொழி மிகவும் சமீபத்திய மனிதக் கைப்பற்றலாக இருக்கவேண்டும்.

டாக்டர் ரிச்சர் க்லைன் அவர்கள் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அகழ்வாராய்ச்சியாளராக இருக்கிறார். இவர் நவீன மனித மூளை சமீபத்தில் சுமார் 50000 வருடங்களுக்கு முன் ஒரு மரபணு மாற்றத்தால் ஏற்பட்டது என்றும், மூளை நியூரான் மாற்றமே மொழி உருவாகக் காரணம் என்றும் கூறுகிறார்.

இவ்வாறு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஜீன் மரபணுவியலாளர்களை மனித ஜீனையும் குரங்குகள் ஜீனையும் ஒப்பிட்டு மேற்கண்ட தேற்றத்தைப் பரிசோதிக்க வாய்ப்பளிக்கிறது. சிம்பன்ஸி குரங்குகள் குறியீடுகளைக் கற்றுக்கொள்ளும். ஆனால் இந்தக் குறியீடுகளை இணைத்து ஒரு சொற்றொடர் அமைக்க அவைகளால் இயலாது. இவ்வாறு சொற்றொடர் அமைப்பது மனிதர்களின் தனித் திறமை.

டாக்டர் மொனாக்கோ, லிப்ஸிக் ஜெர்மனியில் இருக்கும் டாக்டர் ஸ்வாண்டே பாபோ அவர்களுடன் இணைந்து சிம்பன்ஸி மற்றும் பலவகை குரங்குகளை ஆராய முனைந்திருக்கிறார். பலவேறு மரபணு பரம்பரை வழிகளில் எவ்வாறு இந்தக் குறிப்பிட்ட ஜீன் மாறுபாடு அடைந்திருக்கிறது என்பதையும், சமீபத்திய மனித ஜீனில் இருக்கும் மாற்றம் எப்போது ஏற்பட்டது என்பதையும் அளவிட இவர்கள் முனைந்திருக்கிறார்கள்.

1959இல் பிரபல மொழியியலாளர் நோம் சோம்ஸ்கி அவர்கள், மொழித்திறமை என்பது மனிதனின் கூடப்பிறந்தது என்ற கருத்தை வெளியிட்டார். அதாவது மனித மூளைக்குள் மொழிக்காக தனியான பகுதிகள் இருக்கின்றன என்பதை இவர் தேற்றமாகக் குறிப்பிட்டார். மற்ற மொழியியலாளர்கள் மனித மூளையின் பல வேலைகளின் பக்க விளைவாக மொழி உருவாகிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள்.

இந்தப் புதியக்கண்டுபிடிப்பைப் பற்றி டாக்டர் ஜே புரூஸ் டோம்ப்ளின் என்ற அயோவா பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆராய்ச்சியாளரிடம் கேட்டபோது அவர், இதற்கு முன்னர் மொழியை மட்டும் பாதிப்பதாக அறியப்பட்ட பல ஜீன்கள் மற்ற உணரும் பிரச்னைகளுக்கும் காரணம் என்று அறியப்பட்டது போல, இந்த புது ஜீனும் வேறு செய்கைகளுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

‘மொழி அல்லது பேச்சுக்கான மரபணுக்கள் இல்லையென்று எனக்குத் தோன்றுகிறது ‘ என்று டாக்டர் டாம்ப்லின் கூறுகிறார்.

ஆனால், டாக்டர் ஸ்டாவன் பின்கர் என்ற மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் மொழியியலாளர் ‘இந்த புது ஜீன், மரபணு ரீதியில் மொழிக்கான அடித்தளம் மூளையில் இருக்கிறது என்பதையும், டாக்டர் சோம்ஸ்கி அவர்களது தேற்றத்துக்கு ஓரளவுக்கு ஆதரவு தெரிவிக்கிறது ‘ என்றும் தெரிவித்தார்.

***

மொழி பெயர்ப்பாளர் குறிப்பு:

தலைப்பு உங்களைப் படிக்க வைக்கத் தூண்டுவதற்காகத் தரப்பட்டது. மொழி என்பதற்கான அடிப்படைதான் மூளையில் இருக்கிறதே தவிர, ஒரு குறிப்பிட்ட மொழிக்கான அடிப்படைதான் மரபணுவில் இருக்கிறது என்பது சரியல்ல. ஆனால் மனித மொழிகள் அனைத்தும் மனித மூளையில் ஒரு குறிப்பிட்ட ஜீனின் மாறுபாட்டினால் உருவாவது என்று கொண்டால், எல்லா மனித மொழிகளும் அடிப்படையில் ஒரே அமைப்புக் கொண்டவை என்ற பொருளில் பார்க்கலாம். (உதாரணமாக வேறு கிரகத்தில் நடக்கும் பரிணாமத்தில் தோன்றும் ஒரு மரபணு மாற்றத்தால் உருவாகும் மொழிக்கும் மனித மொழிகளுக்கும் மரபணு ரீதியில் மாறுபாடு இருப்பதால், இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்க வாய்ப்பு இருக்கிறது)

Series Navigation