இயல்பாய் ஒரு தடவை…

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

நெப்போலியன்


இது
இப்படி
நடக்கக்கூடாது
உனக்கும்
எனக்கும்
ஒரு
எந்திரத் தூண்டலாய்.

விசைகளின் கனிவை
ஒரு முறையேனும்
இயல்பாய்
நீயெனக்கு
வழங்கியதில்லை.

திமிறும்
என்
இயக்கச் சுழிக்கு
உன் உந்து
இயற்கை முரண்.

நிறுத்த இயலா
பெண்டுலங்களின்
ஆடலை
ஒரு கணக்கின்
முடிப்புடன்
நீ
தவிர்ப்பது
எனக்கு
ஏற்புடையானதல்ல.

விசைகளின் அதிர்வினை
வியர்க்காத நிமிடங்களில்
கொடுக்க முயல்கிறாய்.

முயக்க ஊக்கிகளின்
சத்தம் கேளாது
கொக்கிகளைப் பூட்டுகிறாய்.

தடதடக்கும்
ஆளுமையென
பூடகமாய்
தினந்தோறும்
வெதுவெதுப்பின்
மிரட்சிக்கற்ற
வெறும் சத்தம்
நம்மியக்கம்.
—- நெப்போலியன்,சிங்கப்பூர்–
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்