இந்தியாவில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

ஜோதிர்லதா கிரிஜா


இந்து-முஸ்லிம் இணக்கம் என்பதாய் ஒன்று
இந்தியாவில் இம்மியும் இல்லை யென்று
எந்த முட்டாளய்யா பகன்றது ?
அந்த நாள் பாராளுமன்றம் மீது குண்டுவீசித் தகர்க்க
வந்த முஸ்லிம்களுக்கு வரைபடம் ஒன்றை லஞ்சம் பெற்றுத்j
தந்து உதவியவன் ஓர் இந்துவே யன்றோ!

முத்திரைத்தாள் மோசடியில் ஒரு முஸ்லிமுடன் கைகோத்து
முத்திரை பதித்து உதவியவர்கள் இப்போது
முகத்திரை கிழிந்து நிற்கும் இந்துக்கள்தானே ?
செகத்தீரே செப்பிடுவீர், இந்து-முஸ்லிம் ஒற்றுமை இங்கே
இல்லையெனில் வேறு எங்கே உள்ளதென்று!

jothigirija@hotmail.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா