இடையினம்

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

நாகூர் ரூமி


ஆண்மைக்கும் பெண்மைக்கும்
இயற்கை வைத்த திருஷ்டி.
திருஷ்டி என்றாலே கழிக்கத்தானே ?

சிவன் பாதி பார்வதி.
இவன் பாதி யார் சதி ?

திறண்ட மார்புக்குள்
வறண்ட பெண்மை.
கறந்த பாலுக்குள்
புகுந்த கருமை.

தரிசான இந்த நிலங்களை
பரிசாக யார் விரும்புவார் ?

க்ரோமோசோம்களின் கோபம்
யாரால் வந்த சாபம் ?

காதலுக்குப் பெருமை தரும் பாதி – இவர்
வாழ்தலுக்குச் சிறுமை தரல் என்ன நீதி ?

எந்தப் பக்கமும் குதிக்க முடியாமல்
மதில்களே வாழ்க்கையாய்
மாறிப்போன பூனைகள்.

வல்லினத்தில் மெல்லினமாய்
மெல்லினத்தில் வல்லினமாய்
வாழுமிந்த இடையினம்.

கூத்தாகிப்போன இவர் வாழ்வை
கூத்தாண்டவர்தான் காப்பாற்ற வேண்டும்.

11:05 PM 3/3/05

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி