அழுக்கு
Published August 9, 2003 • By
புகாரி
புகாரி, கனடா

உடலழுக்கில்லா
ஒரு பொழுதுண்டா ?
மலம் சுமக்கிறோம்!
O
உள்ள அழுக்கென்பதென்ன
இல்லாப் பொருளா ?
சிதறும் எண்ணங்களை
முற்றும்
உதறிக் களைவது
என்றும்
முற்றுப்பெற முடியாத
வெற்றுக்கலை!
O
பின்
அழுக்கற்றுப் போகும்
நாள்தான் எது ?
அழுக்கல்ல இவையென்று
அமைதிகொள்ளும் போதே
நாம்
அழுக்கற்றுப் போவோம்
காலங்காலமாய்க்
கற்பிக்கப்பட்ட
அழுக்குகளே
நமக்குள்
நீங்காத அழுக்கு!
*
புகாரி, கனடா
buhari@rogers.com