அழியாத குற்றங்கள்

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

வந்தியத்தேவன்


காலிக் கூண்டில்
அடை மறக்காத கோழி
கிர் கிர் என்று வாலுயர்த்தும்
வயிறா வலிக்கும்
ஆம்லெட்டின் அஜீரணத்தால் ?

துளித் துளியாய் குடும்பத்திற்கு சேர்த்ததை
தீப் ‘பந்தம் ஒன்றில் பறிகொடுத்து
கொட்டாமல் இறக்கும் தேனீக்கள்
பளபளக்காமலா இருக்கும்
தேனில் தேய்த்த முகம் ?

பேசாப் பொருளை பேச விரும்பி
தெரியாமல் வாய் திறந்து
கொக்கியில் சிக்கிய மீன்கள்
மீன் வித்த பணம்
நாறவா செய்யும் ?

அரிசிமாவென கோலம் கடித்த எறும்பு
தேங்காய் சில் கொறித்த எலி
வெளிச்சம்தேடி வெப்பகம்பியடைந்த பூச்சி
தற்காப்புக்கு சீறிய பாம்பு
சமாதானமாகவா சமாதியில் ?

பாவக்குற்றங்கள் கழுவப்படலாம்
வரும் நாட்களில் புதிய சந்ததியால்
‘மனுஷனை மனுஷன் சாப்புடுராண்டா ‘
என்றோ கேட்டது இன்று சுடும்
மறக்கவோ மன்னிக்கவோ முடியுமா ?

t_sambandam@yahoo.com
http://vanthiyathevan.blogspot.com

Series Navigation

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்