அமெரிக்கா…! அமெரிக்கா…!!

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

கோவிந்த ராஜன். கே


++++

ஆறும் நதியும்
அது பாட்டுக்கு
ஓடிக்கொண்டிருந்தது.
தொழிற் புரட்சிக் கழிவுகள்
வாய்க்காலாய் வந்து
கலக்காத வரை…!!!
****
மரமும் மலரும்
கூட்டமாய்ப்
பூத்துக் குலுங்கின-

தோட்டமழித்து பிளாட்டும்
மரங்கள் வெட்டித் தெருவும்-
போடாத வரை…!!!
****
அழகுப் பொருள்முதல்
அனிமேஷன் படம் வரை
அமெரிக்கா அமெரிக்கா
என்போரே…

ஆறும் நதியும்
மரமும் மலரும்
பாதுகாக்கும்-
அமெரிக்காவின்
அக்கறை பாருங்கள்…!

ஆடை ஆட்டம் தாண்டி
இதில்
கற்றுக் கொள்ளுங்கள்-
அமெரிக்காவிடம் …!!

நாளைய நம் தலைமுறை
நிம்மதியாய் சுவாசிக்க…!!!
****

Series Navigation

கோவிந்த ராஜன். கே

கோவிந்த ராஜன். கே