அமெரிக்காவும் ஐரோப்பாவும் செவ்வாய் கிரகத்துக்குப் போட்டி

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue


அமெரிக்க அரசாங்கத்தின் நாஸா நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என ஆராய சில இயந்திரங்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த மாதம் செவ்வாய் பூமிக்கு மிக அருகில் வருவதால், அந்த நேரத்தை உபயோகப்படுத்திக்கொள்ள ஒரு விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் தான் ஐரோப்பாவின் முதன் முதல் செவ்வாய் நோக்கிய திட்டத்தின் விளைவாக ஒரு விண்கலம் செவ்வாய் நோக்கி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் சில வாரங்களுக்குள் அமெரிக்க நாஸாவின் திட்டம் ஜூன் 9 ஆம் தேதி விண்கலம் அனுப்ப திட்டமிட்டு, மோசமான வான்நிலையால் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

அமெரிக்கா இரண்டு வேறுபட்ட வண்டிகளை அனுப்பி, அங்கு இருக்கும் பாறைகளை ஆராய இருக்கிறது.

இந்த ‘இயந்திர புவியியலாளர்கள் ‘ இந்த கற்களில் இருக்கும் வேதியியல் கையெழுத்துக்களை ஆராய்ந்து அங்கு ஒருகாலத்தில் செவ்வாயில் தண்ணீர் இருந்ததா என்பதை கண்டறிவார்கள்.

முன்னம் அனுப்பிய ஸோஜார்னர் என்ற இயந்திரத்தைவிட வலிமையானதாகவும், சிறப்பானதாகவும் பெரியதாகவும் இந்த புது தலைமுறை இயந்திரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 1997இல் மைக்ரோ ரோவர் எனப்படும் ஒரு இயந்திரம் நாஸாவின் பாத்பைன்டர் விண்கலத்துடன் உபயோகப்படுத்தப்பட்டது.

இதுவரை நாஸாவின் மூன்று இயந்திரங்களே செவ்வாய் கிரகத்தின் மண்ணைத் தொட்டிருக்கின்றன. 1976இல் வைக்கிங் இயந்திர வண்டி பிறகு மார்ஸ் பாத்பைண்டர் இயந்திர வண்டிகள்.

எல்லாம் சரியாகச் சென்றால், ஜனவரி 2004 இல், இவை செவ்வாய்க்குச் செல்லும். செவ்வாயில் ஒருகாலத்தில் வெள்ளம் அடித்தது போலத் தோன்றும் இரண்டு இடங்களுக்குச் சென்று இவை ஆராயும்.

1976இல் வைக்கிங் இயந்திர வண்டிகள் இரண்டு இடங்களை ஆராய்ந்தன. முதலாவது குஸேவ் பள்ளம் (Gusev crater). இது ஒருகாலத்தில் ஏரியாக இருந்தது. அடுத்தது மெரிடியானி எனப்படும் சமவெளி. இதனில் முன்பு ஒருவேளை சூடான தண்ணீர் ஓடியிருக்கலாம்.

பிரிட்டிஷ் கட்டிய பீகில்-2 தரையிறங்கும் வண்டி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செவ்வாய் ஆராய்வு திட்டத்தின் பகுதியாக மூன்றாவது இடமான இஸிடிஸ் பள்ளத்தாக்கில் அதே நேரத்தில் இருக்கும்.

ஆனால் பீகில்-2 வண்டி அல்ல. இது நகர இயலாது. ஆனால், இதனிடம் ஒரு இயந்திரக் கை இருக்கிறது. இதன் மூலம் கற்களின் கீழே நோண்டவும், பரிசோதனைக்காக சில சேகரிப்புகளை செய்யவும் இயலும்.

பீகில்-2 செவ்வாயில் இருக்கும் மண்ணை ஆராய்ந்து அதில் உயிர் இருப்பதற்கான அல்லது இருந்ததற்கான அடையாளங்களை ஆராயும். இது 1970களில் நாஸாவின் வைகிங் இயந்திரங்கள் செய்ததுதான். ஆனால் அப்போது வெற்றிபெறவில்லை. இந்த முறை நாஸா அந்த உயிரியல் பரிசோதனைகளை இந்த முறை செய்யவில்லை.

மார்க் அட்லர், இந்த திட்டத்தின் உதவி இயக்குனர், ‘எங்களது முக்கியமான அறிவியல் பரிசோதனை நோக்கம், செவ்வாயில் தண்ணீர் சுற்றுச்சூழல் இருந்திருக்கிறதா, இருக்கிறதா என்று ஆராய்வதுதான் ‘ என்று கூறுகிறார்.

‘நாங்கள் இந்த முறை உயிர் இருக்கிறதா என ஆராயவில்லை. பழங்கால சுற்றுச்சூழலில் தண்ணீர் இருந்திருக்குமா என்றே ஆராயப்போகிறோம் ‘.

நாஸாவின் குறிக்கோள், செவ்வாயிலிருந்து பரிசோதனைக்காக சில பரிசோதனை மண் பொருட்களை எடுத்துக்கொண்டு வருவதுதான். பிறகு பூமியில் இவற்றில் உயிர் பற்றி ஆராய உதவும்.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு