This entry is in the series 20020217_Issue

எஸ்.வைதேஹி.


சிதறிய என் கனவுகளுக்கு
நான் பொறுப்பில்லை

கண்ணாடி
ஜன்னலுக்கு வெளியே
இறக்கை கட்டிய பல்லி.

பலாப்பழ முள்ளின் மேல்
நேற்றைய ஓணான்.

அழுகிய இரத்தத்தில் அமிழ்ந்த என் வீடு
மூடிய யிமையின் மேல் சிதைந்த என் கரு

அவ்வளவுதான்
சிதறிய என் கனவுகளுக்கு
நான் பொறுப்பில்லை.

Series Navigation