அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue


கவிஞர் சுகுமாரன் முன்னுரையுடன்

1986 – 2005 வருடங்களுக்கிடையில் சுந்தர ராமசாமி அய்யனாருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல்.வெகுளியான இளம் வாசகராக முதல் கடிதத்தை எழுதிய அய்யனார் இலக்கிய ‘நண்பர்களுக்கு எல்லாம் நண்பராகப்’ பரிமாணம் பெற்றிருப்பதில் சுந்தர ராமசாமியின் பங்கு கணிசமானது என்று கடிதப் பரிமாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வாசகனாக அறிமுகமான ஓர் இளைஞரின் இலக்கிய அக்கறைகளை வளர்த்தெடுப்பதில் வழி காட்டிய முன்னோடிப் படைப்பாளியாகவும் அதே இளைஞரின் சொந்த வாழ்க்கையின் சுக துக்கங்களை நிர்ணயித்த ஆசானாகவும் சுந்தர ராமசாமி இந்தப் பரிமாற்றங்களில் இயல்பாக உருவம் பெறுகிறார். கூடவே, இவை எழுதப்பட்ட காலத்தின் இலக்கிய மேன்மைகளும் பூசல்களும் பொது வாழ்வின் உண்மைகளும் விநோதங்களும் மனித குண விசித்திரங்களும் இந்தக் கடிதங்களில் பதிவு பெற்றிருக்கின்றன. சுந்தர ராமசாமி கடைசியாக எழுதிய எழுத்தும் அய்யனாருக்கு எழுதிய கடிதம்தான்.

தொடர்புக்கு
Meenal Publishing House
3/363, Pajanai Koil St
Kelambakkam-603103.
Chennai
Cell 9688086641.

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்