அன்னையர் தின வாழ்த்து

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்


அ ன்பை பொழிந்து
ஆ ற்றல் அளித்து
இ ன்னுயிர்
ஈ ந்து
உ திரத்தை உணவாக்கி
ஊ ன் நோக எனைக்காத்து
எ தையும் எதிர்பார்க்காது
ஏ ட்டறிவு எனக்களித்து
ஐ யா என்றழைத்து
ஒ வ்வொரு கணமும்
ஓ டியாடி உழைத்து
ஒள வைவயாகிவிட்ட
என் அன்னையே
உம்மை வணங்குகின்றேன்.

saxsun76@yahoo.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்