அனாஅரந்த் – பாசிசம் – ஸ்டாலினியம்

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

யமுனா ராஜேந்திரன்


அனா ஜெர்மனியில் பிறந்த யூதப் பெண்மணி. நாசிக்காலம் தோற்றுவித்த அசலான சிந்தயைாளர்களில் அனா அரந்த் முக்கியமானவர். அனாவின் தாய் பாசிஸ்ட் எதிர்ப்புப் பெண்மணியான ரோஸா லக்ஸம்பர்க் தோற்றுவித்த ஸ்பார்ட்டஸிஸ்ட் இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டவர். அதனது அரசியலில் ஈடுபாடு காட்டியவர்.; துர்ப்பாக்கியமான தருணமொன்றில் தற்கொலை செய்து கொண்டு மரணமுற்ற தியாடோர் அதார்னோ போன்ற பிராங்க்பர்;;;;ட் பள்ளிச் சிந்தனையாளர்களை நண்பராகக் கொண்டவர் அனா. இருத்தலியல் மூலத் தத்துவவாதியான ஹைடேக்கரின் மாணவியும் காதலியும் ஆனவர். இவரது நேசம் வெளிப்படையாக ஹைடேக்கரால் அங்கீகரிக்கப்படவில்லையாயினும்; அனாவின் மரணம் வரை அவரது மேசையில் ஹைடேக்கரின் படம் இருந்து கொண்டுதானிருந்தது. ஹைடேக்கர் நாசிக் கட்சியின் உறுப்பினராக இருந்தவர். நாசிகள் புதிய ஜெர்மனியை உருவாக்குவார்கள் என நம்பியவர் அவர். தத்துவாதிகளின் வாழ்வுக்கும் அவர்களது தத்துவப் பார்வைக்கும் ஒப்பீடு செய்ய முடியாது என்பதைத் தெளிவாகச் சொன்னவர் ஹைடேக்கர். காதல் எனும் உணர்ச்சி இன மத மொழி கருத்தியல் எல்லைகளைக் கடந்து தோன்றும் உணரச்சி என நம்பியவர் அனா. இந்த வகையில் ஹைடேக்கரின் மீதான அனாவின் காதலை நாம்; புரிந்து கொள்ள முடியும்.

அனாவின் நூல்கள் அனைத்துமே ஐரோப்பிய வரலாற்றின் மிக நெருக்கடியான தருணத்தில் தோன்றிய நூல்களாகும். இ;;ட்லர் ஸ்டாலின் போன்றவர்கள் தமது அதிகாரத்தின் உச்சத்தில் நின்ற காலம் அது. இனக் கொலை சித்தாந்த நீதியில் வரலாற்றை அறிவாதாரமாகக் கொண்டு அக்காலத்தில் நியாயப்படுத்தப்பட்டது. அனாவின் நூல்கள் அனைத்;துமே; வன்முறை குறித்த ஆய்வு நூல்களே என்று காண்பது மிகையாக இருக்கமுடியாது. ஐரோப்பிய சமூகத்தில் யூதர்களின் பாத்திரம், அவர்களின் மீதான இனக்கொலை போன்ற பிரச்சினைகள் குறித்து இன்றளவும் விவாதங்கள் நிகழ்ந்து வருகின்;றன. இன்றிருக்கிற யூத இனவெறியைக் கவனம் கொள்ளாமல் ஐரோப்பிய இனக்கொலைக்குப் பலியான யூதர்கள்; குறித்;த அதே சித்திரத்தை இன்றும் இஸ்ரேல் ஆதரவாளர்கள் முன்வைப்பதற்கு எதிரான நிலைபாட்டை எரிக் ஹாப்ஸ்பாம் போன்ற யூத மார்க்சியர்களே கூட ஒப்புக் கொள்வதில்லை.

பல்வேறு ஐரோப்பியப் பிரச்சினைகளில் இடதுசாரி நிலைபாடுகளை மேற்கொண்ட பிரெஞ்சுக் கோட்பாட்டளார்களும் பிறப்பால் யூதர்களுமான அறிஞர்கள் பலர் இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினையில் பாலஸ்தீன எதிர்ப்பு நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்கள். இருத்தலியலாளரான ஸார்த்தர் பின்-அமைப்பியலாளரான பூக்கோ போன்றவர்களை இப்படிக் குறிப்பிடலாம். காலஞ்சென்ற பாலஸ்தீன அறிஞர் எட்வர்ட் ஸைத் தனது பல்வேறு கட்டுரைகளில் ஸார்த்தர் பூக்கோ போன்றவர்களின் இஸ்ரேலிய ஆதரவு நிலைபாடு குறித்த தனது நேரடி அனுபவத்தை விரிவாகப் பதிவு செய்துமிருக்கிறார். இதனை முன்வைத்து ஒரு தத்துவாதிகளின் வாழ்வு-பிறப்பு-கருத்தியல் உருவாக்கம் போன்றவற்றிற்கிடையிலான உறவு குறித்து நாம் பேசமுடியும். ஆனால் ழான் ஜெனேவின் அன்பின் கைதி எனும் அவரது இறுதி நூல் பாலஸ்தீன மக்களின் விடுதலையும் பயணமும் குறித்ததாக இருக்கிறது. கைவிடப்பட்ட மக்களின்; பிரச்சினைகளில் ஈடுபாடு காட்டிய கைவிடப்பட்ட கலைஞன் ஜெனே. இப்பிரச்சினையில் ஸ்தூலமான நிலைபாடு எடுக்காமல் பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்று மட்டுமே பேசிக்கொண்டாருக்கிற ஸ்லாவோய் ஜிஸக் போன்ற நவ-லெனினியவாதிகள் இன்னொரு புறத்தில் இருக்கிறார்கள். இதுவன்றி அல்த்தூஸரின் இணை எழுத்தாளரான எட்டின் பாலிபர் போன்றவர்கள் இஸ்ரேலுக்குச்; சென்று உரை நிகழ்த்;துகிறார்;. ஸார்த்தர் பூக்கோ பாலிபர் போன்ற மேற்கத்திய அறிஞர்கள் எவரும் இன்ககொலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்கள் பற்றிப் பேசுவதில்லை. இவர்கள் பாலஸ்தீனத்திற்கும்; செல்வதில்லை. சமகாலத்தில் ஆப்ரிக்கரான வோலே ஸோயிங்கா உள்பட இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற பல அறிஞர்கள் பாலஸ்தீனத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள். ஸல்மன ருஸ்டி போன்ற எழுத்தாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சர்வதேசிய எழுத்தாளர்கள் பாராளுமன்றம் இதனது பின்னனியில் இருக்கிறது.

நாவலாசிரியரான ஸோல்ஸெனித்ஸன் போல்ஸ்விக் கட்சியில் யூதர்களின் பிரசன்னம் அதிகமாக இருந்ததென்றும் ரஷ்யாவில் நிகழ்ந்த கம்யூனிஸ அழிவுகளுக்கு யூதர்களுக்குத் துணை போனார்கள் என்றும் குறிப்பிடுகிறார். ஆதாரமாக யூதரான டிராட்;ஸ்க்கி போல்ஷ்விக் கட்சியில் அதிகம் யூதர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்த தருணம் சொல்லப்படுகிறது. அது குறித்த அபிபிப்ராயங்களை முன்வைக்கும் ரஷ்ய ராணுவ அதிகாரியொருவர் அக்காலகட்டத்தில் இனம் என்கிற கருத்தாக்கம் போல்ஷிவிக்குகளுக்கிடையில் பெரிய பாத்திரம் வகுக்கவில்லை எனக் குறிப்பிடுகிறார். இவ்வகையில் யூதர்களின் பாத்திரம் குறித்தும் அவர்கள் போல்ஸ்விக்குகளால்; நடத்தப்பட்ட விதம் குறித்தும் ஜெர்மானிய நாசிக் கருத்தியலின் இனவெறுப்புடன் ஒப்பிட்டுப்; பாரக்கமுடியாது என்பது தெளிவுபடும். நாசிக் கருத்தியலில் ஜெர்மானிய இனமேன்மை, ஆரிய இனமேன்மை என்பதும் இதிலிருந்து கிளர்ந்த யூத இன அழிப்பு என்கிற கோட்பாடும் உள்ளுறைந்து இருந்தது. போல்ஷிவிஸத்தில் இப்படியான இன்வெறி எனும் கருத்தியலைப்; பார்க்கமுடியாது. யூதர்கள் பாலான போல்ஷ்விக்குகளின் அணுகுமுறையைப் புரிந்து கொள்வதற்கு அன்று அவர்கள் இனம் பாலியல் மொழி போன்றவை சம்பந்தமாகக் கொண்டிருந்த பார்வைகளைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னும் யூதர்களின் ஐரோப்பியச் சமூகப் பாத்திரம் குறித்தும் அவர்களின் மீதான ஐரோப்பியர்களின் வெறுப்புக்குமான காரணங்கள் குறித்தும் அனா அரந்த் முன்வைக்கும் அவதானங்களையும் புரிந்து கொ;ளகிறபோது போல்ஷ்விக்குகளின் யூதர்களின் பாலான வர்க்கக் கண்ணோட்டத்திலான அணுகுமுறைகளையும் புரிந்து கொள்ள முடியும். யூதர்கள் குறித்த அனாவின் அணுகுமுறை யூத இனவாதிகளுக்கிடையில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளகியது எனபதையும்; நாம் இங்கு குறித்துக் கொள்ள வேண்டும்.

அனா எழுதி 1951 ஆம் ஆண்டு வெளியான எதேச்சாதிகாரத்தின் தோற்றுவாய்கள் ( The origins of totalitarianisms-on1945-1949-published in 1951) எனும் நூல் 1945 இலிருந்து 1949 வரை ஐரோப்பாவில் எழுந்;த நாசிசம் மற்றும் ஸ்டாலினியம் பற்றிய ஆய்வாக அமைந்தது. இட்லரையும் ஸ்டாலினையும் முன்வைத்து எதேச்சாதிகாரம் எழுந்ததற்கான வரலாற்றுக் காரணிகளை பின்சென்று நோக்கிப் பாரக்க முயன்றது. அவ்வகையில் அவர் எதேச்சாதிகார்தின் மூன்று தூண்களாக 1. ஏகாதிபத்தியம் 2. யூதஎதிர்ப்பு 3. நிறவாதம் அல்லது இனவாதம் பேர்றவற்றை முன் வைத்து ஐரோப்பிய வரலாற்றை விளக்க முய்னறார். ஏகாதிபத்தியத்தின் பொருளியல் நெருக்கடியிலிருந்து ஜெர்மானிய இன்வாத்தை விளக்க முய்ன்ற அவர் போல்ஸிவிஸத்தின் வளர்ச்சியை லெனினியத்திலிருந்தும்; பின்போய் மாரக்கிஸிலிருந்தும் காண அவர் முயன்றார். அவ்வகையில் எதேச்சாதிகாரத்தின் தோற்றத்தின் தொடரச்சியாக மனித நிலை என்னும் நூலை ( வூந ாரஅயெ உழனெவைழைெ-1951-1958) இவ்வகையிலேயே அவர் எழுத முனைந்தார். ஆனால் ஸ்டாலினியத்தின் வேர்களை மார்க்ஸிடம்; அவரால் கண்டடைய முடியவில்லை. காரணம் உழைப்பிக் மேன்மையை, மனித மேன்மையாக வலியறுத்திய, அன்னியமாதலிலிருந்து விடுபடமுடிந்த மனிதனை மார்க்சிடம் அவர் கண்டார்.; மனித உழைப்பு, மனித சுதந்திரத்தை உன்னதமான மதிப்பீடுகளாகக் கொண்ட மார்கிஸிடம் ஸடாலினியத்தின் வேர்களை அனாவால் காணமுடியவில்லை. மாறாக மனித சுதந்திரம் குறித்துப் பேசிய புதியதொரு உன்னத மனிதனை மாரக்சிடம் கண்டார்.

1960 களின் இறுதியில் அவர் வெளியிட்ட வன்முறை குறித்து எனும் அவரது புத்தகம் (ழுெ எழைடநெஉந – கழடடழறைபெ 1968 ியசளை றழசமநசள ளவரனநவெ சநஎழடவ) சமூக மாற்றத்தில் வன்முறையின் இடம் பற்றிக் பேசியது. அறுதியாக அமெரிக்க யாப்பின்; அடிப்படையிலான உரிமைகள் குறித்த சாசனம்தான் எந்தவிதமான சமூக எதிர்ப்பினதும்; எல்லையாக இரு;கமுடியும் எனவும் அனா குறிப்பிட்டார். அனா பேசிய மூன்று தீமைகளான ஏகாதிபத்தியம் யூதஇன எதிர்ப்பு நிறவாதம் அல்லது இனவாதம் ஐோாப்பியர்கள் மத்தியில் ஆற்றிய சமூகப்பாத்திரம் என்பது என்ன ? யூதர்கள் மீதான வெறுப்பு ஐரோப்பிய சுமூகமெங்கும் புரையோடிப் போனதற்கான சமூகக் காரணங்கள் என்ன ? யூதர்கள் ஐரோப்பிய சமூகங்களில் ஆற்றிய சமூகப் பொருளியல் கலாச்சாரப் பாத்திரங்கள் என்ன ?; சம வேளையில் யூத அறிவாளிகளில் சிலர் மாரக்கசியத்தைத் தேர்ந்து கொண்டதற்கும் சிலர் யூத இனவெறிளைத் தேர்ந்து கொண்டதற்க்கும்; என்னதான் காரணம் ? எதேச்சாதிகாரம் குறித்த தனது ஆய்வை அனா தேசிய அரசுகள் தோன்றிய- நிலப்பிரபுத்தவத்திற்குப் பிந்திய ஐரோப்பிய சமூகத்திலிருந்து துவங்குகிறார். வுர்க்கங்களுக்கிடையிலான மோதல்கள் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல்கள் அதனோடு தேசங்களுக்கு இடையிலான மோதல்கள் மலிந்ததாக இருந்தது அன்றைய ஐரோப்பா. பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய யூதர்களின் மேலான வெறுப்பை அவர் ஒப்புக் கொள்ள வில்லையாயினும், அதே சமயத்தில் அவர் பொறுமையாகவும் நிதானமாகவும் அத்தகைய வெறுப்பிலிருந்த சமூகக் காரணங்களை அறிவார்ந்த நிலையில் நின்று புரிந்து கொள்ளவும் செய்தார். யூதர்கள் மீதான வெறுப்பு தன்னிச்சையாக எழுந்தது என்பதையும் அவர்கள் அப்பாவிகளான பாலியாடுகள் என்பதையும் அவர்கள் மிதான வெறுப்புக்கும் அவர்களின் வாழ்நிலைக்கும் சம்பந்தம் இல்லை என்கிற எண்ணத்தையும் அனா ஒப்பக் கொள்ளவில்லை. அதைப் போலவே அன்றைய யூத வெறுப்பென்பது வரலாற்றில் நிலவிய பழைய யூதர்கள் மற்றும் யூதர்கள் அல்லாதவர்கள் என்ற வெறுப்பின் அடிப்படையில்- எந்தவிதமான குறிப்பான காரணங்கள் இல்லாமல் வந்த வெறுப்பு என்பதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இ;ப்படிப் பார்ப்பதானது வரலாற்றில் யூதர்களின் பொறுப்பிலிருந்து அவர்களை விலக்கிவிடுவதாகும் என்றும் அவர் நினைத்தார்.

ஐரோப்பாவில் யூதர்கள் முடியாட்சியைச் சார்ந்த வங்கியாளர்களாகவும் சமுகத்தில் உயர்ந்த மட்டத்தில் உள்ளவர்களாகவும் முன்னுக்கு வநதார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் முடியாட்சி சாரந்தவர்களும் அரசுகளும் அதிகரித்தபடி அவர்களது பணத்தேவைகளுக்கு புதிய முதாலாளித்துவவாதிகளைச நோக்கியவர்களாக ஆகிவந்தாரகள் அரசுகளில் முதலாளித்துவவாதிகள் அதிகரித்த பாத்திரத்தை மேற்கொண்டபோது பணக்கார யூதர்களின் சிறப்பான பாத்திரம் என்பது குறைந்து வந்தது. சுமூகத்திலிருந்து வெளியேற்றப்படடவர்களாக அவர்கள் ஆனார்கள். அதாவது அதிகரித்த அளவில் பணத்தைக் கொண்டிருந்தார்கள் ஆனால் எந்தவித சமூகப்பாத்திரமும் அதிகாரமற்றவர்களாகவும் இருந்தார்கள். இந்த நிலை எல்லா வர்க்த்தவர்களிடமும் அவர்களின் பால் அதிருப்தியைத் தோற்றுவித்தன. இந்த நிலை மனிதர்களைப் பிணைக்கக்கூடிய எல்லாக் கண்ணிகளையும் அறுத்தது. சுரண்டலுக்குப் பயன்படாத சொத்துடைமையால் சொத்;துடமையாளனுக்கும் சுரண்டப்படுபவனுக்கும் உள்ள உறவு கூட அற்றுப் போய்;விட்டிருந்தது. கோட்பாட்டுக்குள் வராத வர்க்கம் சுரண்டலாளன் குறித்து உணர்வைக் கூட சுரண்டப்படுபவர்களிடம் விட்டுவைக்கவில்லை. ஐரோப்பாவில் யூதர்களின் மேல் ஏற்பட்ட இந்த விரோத உணர்வுதான் பிற்காலத்தில் இட்லரின் யூத வெறுப்பு அரசியலுக்கான முகாந்திரமாக அமைந்தது என்கிறார்; அனா. இந்நிலையில் யூதர்கள் ஒரு சமூகமாக இருந்து எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. மாறாக அவர்கள் பிளவுண்டு போனார்கள் .சிலர் கலைஞர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் சமுகத்தின் மேல்நிலைக்குச்; சென்றார்கள். புிறர் தமது மரபான வியாபாரத் தன்மைக்குள் ஆழந்து போய் எந்தவிதமான சமுகப் பொருளியல் பாத்திரங்களும் அற்றவர்களாக ஆனார்கள். அந்தந்த நாடுகளில் தேசபக்தியற்றவர்களாகவும் வேர்கள்ற்ற நகரத்துக் கும்பல்களாகவும் அவர்கள் ஆனார்கள். அவர்கள் மீதான வன்முறைகள் தோன்றியபோது அவர்களிடமிருந்து யூதவெறியுணர்வு தூண்டப் பெற்றவர்கள் ஒருபுறமும் மார்க்சியர்கள் இன்னொரு பற்மும் தோன்றினார்கள். ஐரோப்பிய மாரக்சியர்களில் புகழ் பெற்ற மாரக்சியர்களில் பெரும்பாலுமானவர்கள் யூதர்கள் என்பதையும் இங்கு குறிப்பிடடுச்; சொல்வது நல்லது. 1970 ஆண்டு மரணமுற்ற அனாவின் காதலர் அர்மன் கம்யூனிஸ்ட்டுக் கட்சியைச்; சேர்ந்தவர் என்பதும் அவருடன் 30 ஆண்டுகள் அனா வாழந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முதலாவதாக டிராட்ஸ்க்கி ஸ்டாலின் இடையிலான முரண்பாட்டை, ஸ்டாலினின் தனிநபர் அதிகாரக் குவிப்பு, ஒருநாட்டில் சேசாசலிசத்தை மறுத்த டிராட்ஸ்க்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு, ஸ்டாலின் கட்சியில் மத்தியத்துவ்ததை மறுதலித்;தமை போன்ற அடிப்படைகளில் வைத்துத்தான் விளக்க முடியுமேயல்லாது அதனை யூத இனவெறுப்பாகக் குறுக்க முடியாது. சமூகப்பாத்திரமற்ற செல்வந்தர்கள் முடியாட்சியோடு இயைந்தவர்கள் எனும் அடிப்படையில்தான் பல்வேறு நபர்கள் குருரமாக ஸ்டாலினால் ஸைபீரியச் சிறை முகாம்களுக்கு அனுபப்பட்டார்களேயொழிய அவர்கள் யூதர்கள் என்பதற்காக அல்ல. தாஸ்தாயவ்ஸக்கியுிடம் கூட யூத வெறுப்;பு இருந்ததாக விவாதங்கள் இருக்கிறது. குற்றமும் தண்டனையும் நாவலில் வருகிற இரக்கமற்ற வட்டிக்கடைக்கிழவிவையே அதற்குச் சான்றாகக் காட்டுபவர்களும் உண்டு. ஆயின் அ;னாவின் சித்திரத்;தை வைத்துப் பாரப்பவர்களே கூட யூதர்களின் பாலான சாதாரண மக்களின் விலக்கத்தையும் வெறுப்புணர்வையும் விளக்கிவிட முடியும். வர்க்கம் ஒரு அடிப்படைக் காரணியாக இருந்ததேயல்லாமல் இனம் அடிப்படைக் காரணியாக இருக்கவில்லை. அதிகாரத்தை ஸ்தாபிப்பதில் எதிரில்; வந்தவர்களையெல்லாம் ஒழித்துக்கட்டவும் இதே காரணிகளைத்தான் ஸ்டாலின் பாவித்தார் என்பதும்தான் வரலாறாக இருக்கிறது. இதே வரலாற்று நிலையயைத்தான் சால்செனிதசனின்; கூற்றும்; உறுதிப்படுத்துகிறது. பாசிசத்துக்கு இனமும் விளிம்;பநிலை மக்களும் அதனது கலாச்சார மேன்மைக்கு எதிரான கறைகளாகத் தோனறினார்கள். ஸ்டாலினது அதிகாரத்துக்கான நிலைபர்ட்டை இனக் காரணி மற்றும் விளிம்புநிலைக் காரணிகள் கொண்டு விளக்க முடியாது.

இரண்டாவதாக அனா கவனம் குவிக்கும் விஷயம் ஏகாதிபத்தியம் தொடரபானதாகும். 1930 ஆம் ஆண்டுகளில் ஏகாதிபத்தியங்கள் நீதிக்கெதிரான சுரண்டல் காலனியாதிக்கம் போன்றவற்றைக் கொண்டிருந்தது. பொருளியல் சுபிட்சத்திற்காகவும் மூலதனத் திரட்டலுக்கும் அது எத்தகைய கயமையையும் மேற்கொள்வதாக இருந்தது. இந்த நிலைபாடு இந்த மக்களுக்கு எதிராகவே இதனைத் திருப்பியது. ஏகாதிபத்தியத்தியம் பல தன்மைகளைக் கொண்டது. அதனது நோக்கம் கட்டுதளையற்ற எந்த அறமுறையுமற்ற விஸ்தரிப்பபு ம்ட்டும்தான். அது பல நாடுகளை அடிமைகளாக்கியது. ஐரோப்பியரல்லாத மக்களைக் கீழானவர்கள் ஆக்கியது. வன்துறையின் மூலம் ஆளுகை செய்வது போன்றவற்றை அது தனது தன்மைகளாகக் கொண்டிருந்தது. அனா மாறுபாட்டை மையப் படுத்தி அதனை வன்முறை மூலம் கைக் கொள்வது என்பதையும் அது கொண்டிருந்தது. அகண்ட ஜெர்மனியை அகண்ட ஸ்லாவ் இன விஸ்தரிப்பை மேற்கொள்ளும் ஆசை இவ்வாறு உருவானது. இவைகளுக்கு வெளியிடத்தில் விஸ்தரிக்க வாய்ப்பு இல்லாததால் ஐரோப்பாவுக்கு உள்ளேயே அதனைச் செய்ய நோக்கம் கொண்டது. இது வேர்களற்ற இனக்குழு தேசியவாதிகளில் புதிய எதிரிகளை உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இந்த உதிரிகளை அவர்கள் யூதர்களில் கண்டார்கள் என்கிறார் அனா. இதுதான் 20 ஆம் றூற்றாண்டு யூத வெறுப்புக்குக் காரணம் என்கிறார். ஜெர்மானிய ஸ்லாவிய இனத்தவர் போலவே யூதர்கள் எல்லைகள் அற்றவர்கள். ஆகவே இவர்களை விரட்டி அடித்து தமக்காக புதிய எல்லைகளை விஸ்தரித்துக் கொள்ள முயன்றார்கள் என்கிறார் அவர். முதலாம் உலகப் போர் இந்த நிலைமையை உறுதி செய்தது, வேலையில்லாத் திண்டாட்டம் இடப்பெயர்வு வறுமை பணவீக்கம் நம்பிக்கையின்மை போன்றன நிலவிய சூ+ழலில் தம்மைத் திருப்திப்படுத்துக் கூடிய திருப்தி செய்கிற எந்த வாய்பபையும் பற்றிக் கொள்ள ஐரோப்பிய மக்கள் நின்றனர். அரசுகளிடம் என்பதைவிடவும் தங்கள் இனத்திடம் அவர்கள் நம்பிகளை வைத்தனர். இடப்பெயர்வினால் மனிதர்கள் நாடற்றவர்களாகவும் எல்லைகள் அற்றவர்களாகவும் அனார்கள். நாடுகள் அவர்களது விருப்பப்படி மக்களை நாடுகடத்தவும் சித்திரவதை செய்யவும் நேர்ந்தது. மக்கள் உரிமைகள் அற்றவர்களாக ஆகினர்.

மூன்றாவது கட்டத்திற்கு இத்தருணத்தில அனா வருகிறார் : ஸ்டாலினியம் மற்றும் நாசிஸத்திற்கான கட்டம் கட்டமான தந்க்கபூர்வமான வளரச்சியை அவர் விவரிப்பதில்லை. மாறாக இரண்டுக்கும் இடையிலான மேற்போக்கான பொதுத்தன்மைகளை அவதானிக்க முயல்கிறார். இதைத்தான் குறிப்பான வரலாற்றுச் சம்பவங்களின் மீது கட்டப்பெறாத அனாவின் வரலாறு தவிர்த்த பார்வை என்று ஐஸையா பெர்லின் குறிப்பிடுகிறார். சித்திரவதை, பாதிக்கப்பட்ட யூதர்கள், முகாம்கள், அதிகாரக் குவிப்பு போன்றனவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மட்டும் ஸ்டாலினியத்தை பாசிசத்துடன் ஒப்பிட் முடியாது. ஸ்டாலின் காலத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தேசியவிடுதலை இயக்கங்களை ஆதரித்திருக்கிறது. இன்னும் தேசிய இனங்களின் உரிமைகளைக் குறித்து மிக ஆழமாக முதல் முதலில் விவாதித்தவரும் ஸ்டாலின்தான்.. இக்காலகட்டத்தில்தான் ஐரோப்பாவில் கும்பல் மனிதன் உருவாகிறான் என்றும் இவன் வர்க்க நிலைபாடோ குழுசார்ந்த நிலைபாடோ கொண்டவன் இல்லையென்றும் தமது துயரகரமான வாழ்வை அலசிப்பார்க்க இயலாது தப்பிக்க நினைத்தவர்கள் அவர்கள் எனவும் அவர்களுககுக கற்பனையான ஒரு சித்தாந்தம் தேவைப்பட்டதென்றும,; அவர்கள் அதை தம் பிடிக்குள் கொண்டு வர நினைத்தார்களென்றும், இதிலருரந்துதான் நாசிசமும்; போல்ஷிவிசமும் தோன்றியது என்றும் அனா குறிப்பிடுவதை சோவியத் யூனியனை அனுபவபூர்வமாக ஆய்வு செய்த அனைவருமே மறுத்தனர். சோவியித் வரலாறு குறித்த அனுபவமற்ற அனாவின் அவாதனங்களில் ஒன்ற கூட நிஜமில்லை என்று இது பற்றிக் குறிப்பிடுகிறார் ஐஸையா பெர்லின். எதேச்சதிகாரம் பற்றிய அனாவின் ஆய்வுகள்; பரவலாகக் கடுமையான விமர்சனத்தைக் கொண்ர்ந்தது. சோவியத் யூனியன் சம்பவங்களை நிதானமாகப் பாரக்காமல் அமெரிக்க கெடுபிடிப்போர் நிலைபாட்டுக்கு ஆதரவாக அனாவின் நிலைபாடு அமைகிறதென அவரை விமரச்சித்தாரக்ள. யூதர்களின் மீதான ஐரோப்பிய வெறுப்பணர்வை வரலாற்று ரீதியில் விளக்கி அவர்களை வீராவேசமாகச் சித்திரிக்காததற்காக இனத்துரோகி என அவரை யூத இனவாதிகள் விமர்ச்ித்தார்கள்.. எதேச்சாதிகாரம் உலகெங்கிலும் வேறு வேறு வகைகளில் தோனறலாம் என அனா எச்சரித்தார். 1950 களில் ஐக்கிய அமெரிக்காவில் கூட எதேச்;சாதிகாரம் தோன்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறதெனச் சொன்னார் அனா அரந்த்.

ஸ்டாலினது இட்லருடனான ஒப்பந்தம் ஒரு வரலாற்றுத்தவறு எனச் சொல்வதில் எந்த மாரக்சியருக்கும் தயக்கமில்லை. பிடல் காஸ்ட்ரோ ஸ்டாலினது இத்தவறு கொடுமையானது எனச் சொல்லியிருக்கிறார். ஒரு நாட்டில் சோசலிசம் என்று ஸ்டாலின்; விவாதித்தற்கு அவர் கொடுத்த கொடூரமான விலைதான் அது. ஆனால் பாசிசத்தைப் புறங்கண்டதில் மகத்தான பாத்திரம் வகித்த செஞ்சேனையின்; பங்களிப்பு அவர் காலத்தில்தான் நேர்ந்தது என்பதையும் எவரும் மறந்துவிடமுடியாது. ஸடாலினது ஆட்சிக் காலத்தில் நிறுவனங்களும் சொத்துக்களும் பொதுவுடமையாகத்தான் இருந்தது. இட்லர் காலத்தில் அவரது ஆட்சியமைப்பில் இப்படியில்லை. ஸ்டாலினது அதிகாரம் ஜனநாயக மத்தியத்துவம் தவிர்த்த வர்க்கத்தைக் காரணியாக் கொண்ட எதேச்சாதிகாரமான கட்சியாக உருவானது. அவரது அத்துமீறல்களும் அதன் அடிப்படையிலேயெ நடந்தது. ஸ்டாலினது சரியான தொடரச்சியென ருமேனியா அதிபர் சியாவெஸ்க்குவைச் நாம் சொல்லலாம். அவர் தனது அறுதி நாட்களில் கூட தொழிலாளி வர்க்கத்திற்கே தான் பதில் சொல்லக் கடமைப்பட்டவன் என்றார். ஆனால் 3000 அறைகள் கொண்ட மாளிகையில் வாழ்ந்தவராக, ரகசியப் போலீசின் துணைகொண்டு ஆட்சி செய்தவராக அவர் இருந்தார். மாறாக இட்லர் இனத்தைக் காரணியாகக் வைத்து கொலைகளும் சித்திரவதை முகாம்களும் கட்டினார். இட்லர் நாடுகளைப்பிடித்தார். ஆனால் ஸ்டாலினும் மேற்கத்திய அரசுகளும் ஐரோப்பாவைக் கூறு போட்டுக் கொண்டனர். இவ்வகையில் இட்லரிரையும் ஸ்டாலினையும் அணுகுவதற்கு யூத வெறுப்பு இனவெறி அடிப்படை போதுமானதல்ல. இன்னும் ஸ்டாலின் பற்றிய விவாதங்களை அன்றைய சூழலில் கம்யூனிஸத்தை அழிக்க கங்கனம் கட்டிக் கொண்டிருந்த அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் சதியினின்றும் பிரித்துப் பாரக்கவும் முடியாது.

1975 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் அனா மாரடைப்பினால் மரணமுற்றார். அமெரிக்காவில் எதேச்சாதிகாரம் கவிந்து வருவதை அவர் தனது இறுதி நாட்களில் கண்டித்துக் கட்டுரைகள் எழுதினார். புல்கலைக்கழகங்களில் உரை நிகழத்தினார். வியட்நாம் விவகாரத்தில் அமெரிக்காவின் பொய்களையும் அயோக்கியத்தனங்களையும் அவர் கடுமையாக விமர்சித்தார். வாட்டர் கேட் ஊழலை விமர்சித்து அமெரிக்கப் பொதுவாழ்வின் அவலம் குறித்துச் சுட்டிக்காட்டினார். வியட்நாம் யுத்தம், அமெரிக்கர்கள் அல்லாத அறிவாளிகள் கலைஞர்கள் மீதான மெக்காரத்தியிச வேட்டை, வாட்டர் கேட் ஊழல் போன்றவற்றை அமெரிக்கா எதேச்சாதிகாரம் ஆகிவருவதற்கான சான்றுகளாக அவர் கண்டார். பாலஸ்தீனப் பிரச்சினையில் கூட பாலஸ்தீன மக்களுக்கென ஒரு நாடு வேண்டும் எனும் நிலைபாட்டுக்கு வந்தவர் அவர். ஸ்டாலினியம் பற்றிய அவரது குறிப்பல்லாத ஆய்வை நாம் நிராகரித்து விட்டால் கூட எதேச்சாதிகாதத்தின் எல்லை தாண்டிய ஆபத்து குறித்த மனித உணர்வு, யூதர்கள் குறித்த அவரது வரலாற்றுப் பார்வை போன்றவற்றுக்காக அவர் என்றும் நினைவில் இருத்தக் கூடிய சிற்தனையாளராகவே இருப்பார்.

ஸ்டாலினியத்தை மார்க்சியத்தோடு சமன்படுத்திப் பாரப்பதும் மார்க்சியத்தை நிராகரிக்க அதனைப் பாவிப்பதையும் தமிழகத்தில் சில இந்துத்துவவாதிகள் – மார்க்சிய எதிரிகள் சாதுரியமாகச் செய்து வருகிறார்கள். ஸ்டாலினியத்தை விமர்சிப்பார்கள். சந்தரப்பங்களில் மார்க்ஸ் மீது சேறு வாரி இறைப்பதிலும் முன்னணியில் நிற்பார்கள். இட்லரையும் ஸ்டாலினையும் சமப்படுத்துவதன் மூலம் இக்காலத்திலும் அதற்கு முன்னும் பிற மேற்கத்திய அரசுகளும் அமெரிக்காவும், மார்க்கியத்தின் மீதும் சோவியத் யூனியின் மீதும் மேற்கொண்டிருந்த மிகக் கேவலமான செயல்களை முற்றிலும் மறுத்துவிடவே செய்வார்கள். பாசிசம் தம்மீது போர் தொடுக்காதவரையிலும் ரஷ்யா அழிவதில் மேற்கத்திய அரசுகளுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ ஏதும் சங்கடமில்லை. இந்திய இந்துது;துவவாதிகள் ஸ்டாலினியத்தை முதல் எதிரியாக நிறுத்துவதன் மூலம் இவர்கள் இன்று போற்றிததிரிகிற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்திகளான சாவர்க்கரும் தேவ்ரசும் எவ்வாறு பாசிசத்தையும் இட்லரையும் சித்தாந்த நீதியில் நேரடியாகவும் கூச்ச நாச்சமின்றியும் ஆதரித்து நின்றார்கள் என்கிற அசலான, இன்று தேவையான விவாதத்தையும் திசைதிருப்பி விடுவார்கள். 1989 களின் பின் ஐரோப்பாவில் நடந்த விஷயங்களை முற்றிலும் மாரக்சியத்தின் வீழ்ச்சியாக அறிவிப்பதற்கு இவர்களுக்கு ஸ்டாலினியம் ஒரு முகாந்திரமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. இட்லரைச் ஸ்டாலினோடு ஒப்பிடுவதற்கு வெறுமனே வன்முறைச்சட்டகம் சார்ந்த விவாதங்கள் மட்டுமே போதாது. வன்முறையைின் காரணிகளாக இவர்கள் எவையெவற்றைத் தேரந்து கொண்டார்கள் என்பதும் முக்கியமானதாகும். ஏனெனில் அமெரிக்கரும்; ஐரோப்பியரும்; இன்று தாராளவாத ஏகாதிபத்தியம் எனும் நவகாலனிய அடிப்படைக் கருத்தாக்கத்துடன் வன்முறை யுத்தங்களை நியாயப்படுத்தி வருகிறார்கள். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்த அமெரிக்காவின் முன்கூட்டாய தற்பாதுகாப்பு யுத்தமும் அதனைத் தொடர்ந்த வெகுமக்கள் கொலைகளும் இன்று நாகரிகத்தின் பெயரிலும் மனித குல சுபிட்சத்தின் பெயரிலும் தான் நியாப்படுத்தப்படுகிறது. நீதியான யுத்தம் – நீதியான வன்முறை என்பதுதான் இவர்தம் தாரக மந்திரம். இவ்வகையில் ஐரோப்பியர்களின் சிந்தனையில் சமூக மாற்றத்திற்கும் வன்முறையினால் அதைச் சாத்தியப்படுத்துவதற்கும் அவர்கள் முன்வைக்கும் தர்க்க நியாாயம் குறித்த கேள்விகளுக்கு நம்முடைய அடிப்படையான விவாதங்களைத் திருப்புவது நியாயமாக இருக்கும். தர்க்கத்தின் வன்முறை குறித்து இந்த வகையில்தான் பூக்கோ போன்ற சிந்தனையாளர்கள் மேற்கத்திய காரண காரிய அறிவின் வன்முறை குறித்த அகழ்வாய்வை மேற்கொள்கிறார்கள்.

ஸ்டாலினும் இட்லரும் வன்முறையின் காரனிகளாகத் தேர்ந்து கொண்டவை முற்றிலும் வித்தியாசமானவைகளாகும். ஸ்டாலினது தவறுகள் மூலதனத் திரட்டலுக்காக விவசாயிகளைக் கொன்;றொழித்ததும், கட்சியில் தனது எதேச்சாதிகாரத்தை நிலைநாட்ட சக தோழர்களைக் கொன்றொழித்ததும், அரசியல் எதிரிகளைக் கொன்றொழித்ததும,; உட்கட்ச்ி ஜனநாயகத்தை அழித்ததும், ஒரு நாட்டில் சோசலிசத்தை உருவாக்க இட்லரோடு கூட ஒப்பந்தம் செய்து கொண்டதும்தான். அவரது அடிப்படையான வன்முறைக் காரணியாக இன ஒதுக்கலோ, மத ஒதுக்கலோ, அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டமோ இருக்கவில்லை. ஆனால் இட்லரது ஆரிய மேன்மையைக் காப்பாற்ற அவர் தேர்ந்து கொண்டது இனத்தூய்மையும் மதத்தூய்மையும் விளிம்பு நிலைமக்கள் அழிப்பும்தான். ஜிப்ஸிகளையும் சமப்பாலுறவாளர்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் அதனால்தான் சமூகத்தின் ஒட்டுண்ணிகள் என்ற பெயரில் இட்லர் வேட்டையாடினான். இன்னும் இட்லரை எதிர்த்து வீராவேசமாக நின்ற பெரும்பாலுமான சிற்தனையாளர்கள் பல சந்தர்ப்பங்களில் அன்று ஸ்டாலினை ஆதரித்ததும,; அதே போது விமர்சித்து நின்றதும் அறிவீனமான நிலைபாடும் அல்ல. பெர்டோல்ட பிரெக்ட்டும் லுகாக்சும் ஸ்டாலினை பல சந்தர்ப்பங்களில் ஆதரித்திருக்கிறார்கள் என்பது வரலாற்றில் இருக்கிறது. மார்க்சிய மரபில் கட்சிக்குள் இருந்தபடியே எதேச்சாதிகாரம் ஜனநாயகம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தவர்களாக ரோஸா லக்ஸ்ம்பர்க் தொடங்கி ஒரு பாரம்பர்யம் இருக்கிறது. ஸ்டாலின் மீதான விமர்சனம் குருஸ்சேவினால் துவக்கி வைக்கப்படுவதற்கும் முன்பே ஸ்டாலின் பற்றிய விவாதங்கள் தோன்றுவதற்கு முன்பே, சிவில் சமூகம், கட்சி, ஜனநாயகம் போன்றவை குறித்து கிராம்ஸி போன்றவர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயெ சிந்தித்திருக்கிறார்கள். சிவில் சமூகம், மக்கள் பங்கேற்பு, மனித உரிமைகள் போன்ற அக்கறைகள் உலகெங்கிலும் அதிகிரித்திருக்கும் நிலையில், ஸ்டாலினை இன்றைய மார்க்சியவாதிகள் எவரும் உயர்த்திப் பிடிப்பதில்லை. மேற்கிலும் அமெரிக்காவிலும்; வளமான ஸ்டாலினிய-நீக்க மாரக்சியம் வளரச்சியடைந்திருக்கிறது. ஆனாலும் வரலாற்று ரீதியில் இட்லரையும் ஸ்டாலினையும் ஒப்பிடுகிற முட்டாள்தனத்தை- அதாவது ஸ்டாலினியத்தை யூத எதிர்ப்பு எதேச்சாதிகாரமாக, இனவாதமாகச் சித்தரிக்கிற போக்குகளை ஐஸையா பெர்லின் போலவே மாரக்சியர்களும்; நிராகரிக்கிறார்கள்.

yamunarn@hotmail.com

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்