திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070510_Issue

அரசியலும் சமூகமும்

எவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஜிஹாதி உண்மை ஒளியைக் கண்டடைந்தார்? – 2

எட் உசேன்(தி இஸ்லாமிஸ்ட் என்ற புத்தகத்திலிருந்து கட்டுரை வடிவில் எடுக்கப்பட்டது. ) செல் தொலைபேசிகளில் இருக்கும் புளூடூத் தொழில்நுட்பம் மூலமாக ஒருவரை ஒருவர் தெரியாத அந்நியர்களுக்கும் போர்னோகிராபிக் அசைபடங்களை பரிமாறிக்கொள்கின்றனர், பெரும்பாலான இப்படிப்பட்ட அசைபடங்கள்…

வழிவிடட்டும் அரசியல் வாரிசுகள்

புதியமாதவி, மும்பை அரியணைக்காக அண்ணன் தம்பிகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட கதைகள் முடியரசின் வரலாற்று கதைகள் என்று எண்ணி இருந்தவர்களைப் புரட்டிப் போட்டிருக்கிறது அண்மையின் நடந்த சில நிகழ்ச்சிகள். கருத்துக்கணிப்புகளின் நம்பகத்தன்மை எப்போதும்…

தலித் முஸ்லிம்

ஹெச் ஜி ரசூல் வைதீக இந்து மதத்தில் உயர்ந்தது x தாழ்ந்தது என்ற கருத்தமைப்பானது தீவிரமாகவும், பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் மற்றும் சாதியற்ற பஞ்சமன் என பிறப்பு, தொழில், அகமண உறவு அடிப்படையில்…

தமிழ்நாட்டு அரசின் பொறுப்பற்றதனம்

சின்னக்கருப்பன்மாறன் குடும்பத்தினருக்கும் கலைஞர் குடும்பத்தினருக்கும் இடையேயான பூசல் இன்று தெருக்களில் வெடிக்கிறது. வளர்த்த சன் டிவி மார்பில் பாய்கிறது என்று கலைஞர் புலம்பலாம். ஆனால், அது உண்மையாகத்தான் இருக்கும். ஆனால், அதனை விட உண்மையானது…

தமிழர் நீதி

புதுவை ஞானம் 18, ஏப்ரல்,2007 _ இன்று உலக மரபு தினமாம். நமது மரபு என்ன ? வெறுமனே தற்காலப் படைப்பு இலக்கியத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து முற்போக்கு வியாபாரம் செய்வது தான் மரபா?…

அறிவிப்புகள்

இலக்குகள் நோக்கிய பயணத்தில் பாரதி இளைஞர்அணி

நீ “தீ” கடந்த மே 1ல் தனது 25வது ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடி உள்ளது பாரதி இளைஞர்அணி. புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தாஞ்சூர் கிராமம் கடந்த 25ஆண்டுகளாக பொதுப்பார்வையில் சமூகப்பணியாற்றி சாதனைபடைத்து வருகின்றது.…

உரையாடல் குறித்த உராய்தல்கள் – தாஜுக்கு மறுமொழி

அருணகிரி இரண்டு இதழ்களுக்கு முன் தாஜ் அவர்கள் எனது பதிலை விமர்சித்து எழுதியதைக் கண்டேன். தாமதமானாலும் பதில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கடிதத்தை எழுதுகிறேன். தாஜ் மிகவும் குழம்பிப்போயிருக்கிறாற்போல் தெரிகிறது .…

திரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை பற்றி

மணி மாணிக்திண்ணை இதழில் திரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை (தமிழரைத் தேடி) சிந்தனையை தூண்டுவதாக உள்ளது. ஆயினும் வேளாளர் என்பவர் யார் என்பதில் அவருக்கு மிகுந்த குழப்பம் உள்ளது போல் தோன்றுகிறது. தமிழ் சமூகத்தில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் -5

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா"உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. நீ என்ன செய்யப் போகிறாய் என்பது…

இலக்கிய கட்டுரைகள்

‘நிலவு ததும்பும் நீரோடை’ கவிஞர் பஜிலா ஆசாத்தின் அழகியல்!

தாஜ் இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு சென்னை சென்றிருந்த பேது, மணிமேகலைப் பிரசுர அலுவலகத்திற்குப் போகவேண்டிய சூழல். அவர்கள் பிரசுரித்த ஓர் கவிதைத் தொகுப்பு குறித்து அங்கே செய்தி பரிமாறப்பட்டது. நிலவு ததும்பும் நீரோடை…

திருமதி கொப்பலின் குற்றச்சாட்டு

எஸ் என் நடேசன் திருமதி கொப்பலானின் ஆறடி உயரமும், ஆண்கள் போன்ற இடைவெளிவிடாத இடையமைப்பும் கடுகடுப்பான முகமும் எனது கவனத்தை ஈர்த்தது. அவருக்கு பின்னால் பதினாலு வயது இளம்பெண் தாயின் மறுபதிப்பாக சிறிய ரெரியர்…

இலர் பலராகிய காரணம்

முனைவர் மு. பழனியப்பன் செய்க தவம்; செய்க தவம்; தவம் செய்தால் எய்த நினைத்ததை எய்தலாம் என்பது பாரதியார் கூற்று. இங்கு தவம் என்ற சொல் காட்டிடை தனித்துறைதல், ஞானம் தேடி கோயில் குளம்…

காதல் ஒரு போர் போன்றது

சந்திரவதனா அலை அலையாய் அவன் நினைவு வந்து, என் மனமலையில் மோதுகையில் சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன். ஒரு பனி போலக் கரைந்து போகிறேன். நினைவுகளின் தொடுகையிலே உயிர்ப்பூக்களைச் சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு அவனுக்கும்…

குறுந்தொகை காட்சியும் மாட்சியும்

எஸ். ஷங்கரநாராயணன் >>> சங்க இலக்கிய வரலாற்றில் பாடல்களைத் தொகுக்கும் முயற்சி, கடைச்சங்க காலத்தில் தோன்றிய எழுச்சி எனலாம். எட்டுத்தொகை, அகநாëறு, புறநாëறு என பாடல்களின் வரிக்கணக்கை வைத்துக் கொண்டு ஒழுங்கு செய்தார் எனக்…

கதைகள்

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:1)

சி. ஜெயபாரதன், கனடாநடக்காதே என்மீதெனப் பூமி சொல்லும் அந்தோ! நண்பர்கள்! அவமானப் படும் என்னைச் சுமக்க! தவறிப் பாதையை விட்டு விட்டேன் நிரந்தரமாய்! தாமத மாகி விட்டேன் தரணியில்! பொன் நிறைந்த கப்பல் ஒன்றுளது!…

கால நதிக்கரையில்……(நாவல்)-6

வே.சபாநாயகம் சின்ன வயதிலிருந்தே அவருக்கு இந்தக் குளம் பிடித்தமானது. அந்தக் குளத்தின் அழகும் அமைதியும் அவரை அங்கே அடிக்கடி தேடி வரச் செய்திருக்கிறது. பச்சை வட்டத் தகடுகள் போல மிதக்கும் அல்லி இலைகளும், நீர்ப்பாம்பு…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 9

நாகரத்தினம் கிருஷ்ணா டிராக்குலா.கம் அலுவலகம், ஸ்ட்ராஸ்பூர் நகரத்திற்கு தெற்கில், என்சைம்(Entzheim) பகுதியில் இருக்கிறது. அதாது ஸ்ட்ராஸ்பூர் நகரின் பன்னாட்டு விமானதளத்திற்கு அருகில். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த பிரெஞ்சு ராணுவக் குடி இருப்புகளை அகற்றிவிட,…

பிரதிமைகள்

ஹரன்பிரசன்னா சிறிய திறப்பொன்றில் விழுவதாகவே தோன்றியது. ஆனால் அத்திறப்பு நீண்டு பெரும்பள்ளமாகி கீழே வெகு கீழே செல்ல நான் அலறத்தொடங்கினேன். கண் விழித்துப்பார்த்தபோது அறையெங்கும் பரவியிருந்த வெளிர் நீலநிறப் படர்வில் என் மகன் எவ்விதக்…

நாவல்: அமெரிக்கா II! அத்தியாயம் ஒன்பது: 42ஆம் வீதி மகாத்மியம்!

வ.ந.கிரிதரன் அன்றையப் பொழுதினை நியூயார்க் மாநகரத்தின் மான்ஹட்டன் பகுதியில் சுற்றித் திரிந்து கழிப்பதாக இளங்கோவும் அருள்ராசாவும் தீர்மானித்திருந்தனர். இளங்கோவைப் பொறுத்தவரையில் எந்த வேலையானாலும் உடனே செய்வதற்குத் தயாராகவிருந்தான். அருள்ராசா அதற்குத் தயாரில்லை. அதற்கு அன்று…

கலைகள்

கவிதைகள்

மிருகம்

பாஷா நம் படுக்கையறையில் சயனித்திருக்கும் அந்த மிருகம் ஒரு பின்னிரவில் விழித்து என் விரல்பிடித்து இழுக்கும் ஆனால் அதற்கான உணவை நீ உன் குளிர் போர்வையில் எப்போதும் ஒளித்துவைத்திருக்கிறாய் பசியில் உக்கிரமான மிருகம் என்…

நிறச் சுவாசங்கள்

சாமிசுரேஸ், சுவிஸ் ஒவ்வொரு பரிணாமங்களும் வௌ;வேறு பரிமானங்களாய் சிதைவுற வாழ்க்கை நிறக்குழைவினுள் மூழ்கிக்கிடக்கிறது. அந்தக் கருப்பொருளின் வளர்வில் மனிதநிறங்களின் ஒவ்வொரு பிரிகைகளும் வௌ;வேறு ஸ்வரங்களில் கனவுறும். கனவுறும் பொழுதில் காற்றிடை முகிழ்ப்பினூடே ஒரு அரங்காற்றுகை…

கவிதைகள்

உஷாதீபன் பிணக்கு உனக்கும் எனக்குமான உறவுச்சிக்கல்களுக்கிடையில் தார்மீக முனைப்புகளாய் பின்னிக் கிடக்கின்றன ஏராளமான வார்த்தைகள் வறண்டுபோன நம் வாழ்க்கைக்கு சாட்சிகளாய் நிற்கின்றன அதன் வீர்யம் நீயும் நானும் கூடிக்களித்தபோது கும்மாளமிட்ட மெப்பனைகள் காணாமல்போயின மாயமாய்…

மனிதன்

செய்டில்ஹாமோ மோட்சாபிஏறத்தாழ மறந்துவிட்ட நண்பன் நகரத்திற்கு சமீபத்தில் வந்திருந்தான் அவன் உள்ளே வரும்போது மழை ஆரம்பித்தது என்பதை கவனித்தேன் எளிய மனிதனாக அவனை அறிந்திருந்தேன் வளரும்போது நாங்கள் எல்லோரும் டாக்டர்களாக, எஞ்ஜினீயர்களாக ஆசிரியர்களாக ஆக…

பூத்துக் குலுங்கும் பாப்பா! ( சிறுவர் பாடல்)

முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி பூத்துக் குலுங்கும் மலர்க்கொத்துப் பொழிலின் நடுவில் கிடப்பதுபோல் பார்த்துச் சிரித்துக் கிடக்கின்ற பவள மல்லி! ஏனழுதாய்? கோத்த முத்துச் சரம்நழுவிக் குலைந்து தரையில் உருள்வதுபோல் தாத்தா தாத்தா என்றழுதே தாவித் தாவிச்…

காதல் நாற்பது (20) உன்னைத் தெரியாது ஓராண்டுக்கு முன்பு

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநினைத்துப் பார்க்கும் போது நேசனே! என்னரும் நேசனே! ஓராண்டுக்கு முன் நான் பனித் தளத்தில் தனித்திருந்த போது நீ இத்தரணி மீது இருந்தாய், ஆயினும் எத்தடமும் காணேன்! அமைதி…

கவிதை

மு.பழநிக்குமார்இரவு எட்டைத் தாண்டிய பரபரப்பில் கால்கள் முளைத்த அவசரமாய் அதுவும் கொலுசுகள் அணிந்த அவசரமாய் அலுவலகம் விட்டு விரைவாய் படிகளில் இறங்கி சாலை கடந்து சந்து திரும்பி பேருந்து நிலையம் அடைவாய் பூப்போன்ற உன்னை…

நகைச்சுவை

கருத்துக் கணிப்பு – சில ஆலோசனைகள்

சொதப்பப்பாசன் டி வியும், தினகரனும் எக்கச்சக்கமான கருத்துக் கணிப்புகள் நடத்துவதற்கு ஆலோசனைகள் கோரியிருப்பதாக அறிகிறேன். என்னுடைய ஆலோசனைகள் இவை ஒன்று. சன் டி வியில் நிகழ்ச்சி இடம் பெற என்ன செய்ய வேண்டும்? 1.…