திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060728_Issue

அரசியலும் சமூகமும்

பாகிஸ்தானின் அவமானச்சின்னம் – 1971

செல்வன் "இனிமேல் வரும் ஒவ்வொரு பாகிஸ்தானிய அரசும் அதற்கு முந்தைய அரசை விட மோசமானதாகவே இருக்கும்" என்று தனது மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்பு கணித்தார் ஜின்னா.அவரது வாக்கை மெய்யாக்க பாகிஸ்தானிய அரசுகள் தவறவே…

தமிழ் வாழ்க ! “தமிழறிஞர்” ஒழிக !!

மஞ்சுளா நவநீதன்கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ்கூறு நல்லுலகில் எழுந்த ஒரு புதிய உயிரினம் "தமிழறிஞர்" என்ற உயிரினம் ஆகும். இவர்கள் மக்களே போல்வர். ஆனால்? தமிழறிஞர்கள் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் இவர்களுக்கு…

இருளர் வாழ்வில் இசையும் கூத்தும்

மலர் மன்னன் (2006 ஜூன் 17 அன்று சென்னை மீனாட்சி கல்லூரியில் அகில பாரத பாரதிய வரலாற்றுத் தொகுப்புப் பேரவையின் தமிழ் நாடு கிளை ஏற்பாடு செய்த தமிழக வனவாசிகள் பற்றிய கருத்தரங்கில் உரையாக…

கோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -1

ரவி ஸ்ரீநிவாஸ் சமீபத்தில் எழுந்துள்ள சில சர்ச்சைகள் குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெறுகின்றன.ஆனால் விவாதிக்கும்/எழுதும் பலர் அடிப்படைகளைக் கூடப் புரிந்துகொள்வதில்லை. மேலும் இப்பிரச்சினைகளை பெண்ணியம்,சமத்துவம் போன்றவற்றைக் கொண்டு அலசி ஆராயும் போது வேறு பரிமாணங்கள்…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 9. தொழில் நுட்பம்

குமரிமைந்தன் மேற்சாதியினர் தொழில்களைச் செய்வதிலிருந்து விடுபட்டவர்கள். இறக்குமதியான இன்றைய தொழில்நுட்பம் தவிர அவர்களுக்கென்று சொந்தத் தொழில் நுட்பம் எதுவும் கிடையாது. ஆனால் தரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கீழ்ச்சாதியினர் அனைவருக்கும் ஏதோவொரு தொழில் நுட்பத்தில் தேர்ச்சி…

எண்ணச் சிதறல்கள் – குமுதத்தில் சாரு நிவேதிதா, கலகம், கள்வனின் காதலி, டாக்ஸி நெ.9211, கோபம் கொள்ளும் ஐயப்பன்

நேச குமார் சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் குமுதத்தில் வெளிவரத்துவங்கியுள்ளன. கடந்த சில இதழ்களைப் புரட்டிப் பார்த்தேன். ஒரு நட்சத்திர ஓட்டலில் உயர்வகை மதுவை வெளியில் விற்பதைவிட ஐந்து ரூபாய் குறைத்து விற்கிறார்கள் -…

குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்!

இப்னு பஷீர் ஜூலை 11 - மும்பையில் வெடித்த 6 அல்லது 7 குண்டுகள் ஒட்டு மொத்த இந்தியாவையும் கிடுகிடுக்க வைத்தன . அநியாயக்காரர்கள்! அரக்கர்கள்! அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த கொடூரர்கள்! கோழைகள்!…

மவ்லிதுகளின் பண்பாட்டு அரசியல்

ஹெச்.ஜி.ரசூல் 1) மவ்லிது எனும் கவிதை பாடுதல் இஸ்லாத்திற்கு எதிரானது என்று எவரேனும் சொல்வாரெனில் அந்த வாக்கியங்களை முறித்து குப்பைக் கூடையில் வீசி எறிந்து விட்டு வரலாறு தன் பயணத்தை மீண்டும் கவிதை பாடுதலோடு…

மத்தியக்கிழக்குப் போரும் இந்தியாவும்

சின்னக்கருப்பன் அமைதிக்காக போர் என்று எதுவும் இல்லை. போர் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கிறது. ஒரு எல்லையை தாண்டும்போது அது வன்முறையாக வெடிக்கிறது. போர் ஆரம்பம் என்பது அறிவித்து வருவதில்லை. அடுத்தவன் இருப்பது நமக்கு ஆபத்து என்று…

சிதம்பரமும் தமிழும்

செல்வன் சிதம்பரம் கோயிலை வைத்து அரசியல் களைகட்டுகிறது.இவ்விஷயங்களை பொறுத்தவரைதிண்ணையில் வெளியான முகமூடியின் கட்டுரை பல விஷயங்களை அலசி காயப்போட்டுள்ளது. தமிழ் என்பது என்ன?சிவன் என்பது யார்? தமிழ் என்பது சிவபெருமான் உருவாக்கிய மொழி.சிவனின் டமருக்கில்…

அறிவிப்புகள்

ஆய்வும் மனச் சாய்வும்

S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன் பொய்களை விட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை என்ற எங்களுடைய கட்டுரைக்கு எதிர்வினையாக திரு. சதுரகிரி வேள் கடிதம் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். எங்களுடைய கட்டுரையே கற்பக விநாயகத்தின்…

நாஞ்சிலன்கள் மற்றும் வஹ்ஹாபிகளின் கருத்துக்கள்

எச்.முஜீப் ரஹ்மான்நாஞ்சிலன்கள் மற்றும் வஹ்ஹாபிகளின் ஆறாவது அறிவுக்கு,,,,,,, நாஞ்சிலன் எனது எதிர்வினையில் சொல்லப்பட்ட கருத்துக்களை இன்னும் விளங்காமல் பதில் சொல்லிக் கொண்டிருப்பது சத்தியமாக உள்நோக்கம் கொண்டது அல்ல என்று நம்புவோம்.எனக்கு தமிழ் இலக்கணம் தெரியாது…

கபா

சூபிமுகமது வர வர வகாபி நல்லதொரு ஜோக்காளராக மாறிவிட்டார். கபாவின் உள்ளே என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு காற்று இருக்கிறது என்ற அவரது பதில் வெகுஜோர். மகாமுஇபுராகீம் வார்த்தைக்கு நபி இபுராகீம் நின்ற இடம்,ஹஜ்ஜின்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, ஓஸோன் துளைகள், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-6

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகாலமும், சூழ்வளியும், கடல் மட்ட ஏற்றத் தணிவும் நீர், நிலவளத் தேய்வுகளும் சேர்ந்து, பயிர்கள் ஏதோ பசுமை மினுப்பில் தோன்றும்! யந்திர வாய்கள் புகைபிடித்து ஊதியதும், பச்சை…

இலக்கிய கட்டுரைகள்

கடித இலக்கியம் – 15

வே. சபாநாயகம் கடிதம் - 15 நாகராஜம்பட்டி 4-2-77 அன்புமிக்க சபா, வணக்கம். வழக்கமான நினைப்பு உண்டு. திடீரென்று கடிதம் மட்டும் இப்போது நினைத்துக் கொண்டு எழுதுகிறேன். எப்படி இருக்கிறீர்கள்? நன்றாக இருங்கள். வாழ்வதற்குப்…

அவர்கள் அவர்களாகவே…!

சந்திரவதனாஇது ஒரு நினைவுக்கோலம். எந்தவிதக் கற்பனையும் கலக்காத உண்மையின் வடிவம். பாதை திறந்த பின் எழுந்த தாயக தரிசன ஆசையில், இது அவசியந்தானா, என மனதின் ஒரு மூலையில் அச்சத்துடனான கேள்வி தொக்கி நிற்க..…

அனுபவங்களும் ஆற்றாமைகளும் – இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள்- பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம்

வளவ.துரையன் பட்ட அனுபவங்கள் பட்டென்று வெடித்துக் கிளம்புவதே படைப்பு. படைப்பாளனின் அனுபவத்தை படைப்பின் வழியே வாசகன் உணர்ந்து ஒன்றுவதே படைப்பின் வெற்றி. இதில் உள்ள பதினேழு படைப்புகளும் பாவண்ணன் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு தளங்களில்…

கதைகள்

இரு கலைஞர்கள்

ஜெயமோகன்ஜெ.கருணாகர் காலையில் தூங்கி எழ தாமதமாகும். இரவு வெகுநேரம்வரை , சிலநாட்களில் விடிகாலை நான்குமணிவரைக்கூட, அவரது 'மன்ற'த்தில் பேச்சு நீள்வதுண்டு. மாடிமீது தாழ்வாகக் கட்டப்பட்ட கூரைப்பந்தல் அது. நீளவாட்டில் பெஞ்சுகள் நடுவே நீளமான மேஜை.…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா – (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-11)

சி. ஜெயபாரதன், கனடாமேலங்கியை மாட்டு! எனக்கு மகுடத்தைச் சூட்டு! மேலோங்கி எழுகிற தெனக்குள் தெய்வீக வேட்கை! ... (கிளியோபாத்ரா) கடவுளுக் களிக்கும் சுவைத் தட்டு மடந்தை யவள் என்று நானறிவேன், உடல் மீது பிசாசு…

மீன்கூடைக் காரிகைகளும் பூக்கடைக்காரன் குடிசையும்

ம.ந.ராமசாமி காலையில் எழுந்ததும் கையில் பல் விளக்கும் பிரஷ்ஷ¤ம் அதன்மீது சிவப்புநிற பேஸ்ட்டுமாக, சோமசுந்தரம் தன் தினக்குறிப்பைப் புரட்டினார். 'விஜயா இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸில் கான்டீன் விவகாரம்' என்று அன்றைய தேதியில் குறிப்பிடப் பட்டிருந்தது. குறிப்பேட்டை…

ப ரி சு ச் சீ ட் டு

தமிழில்/எஸ். ஷங்கரநாராயணன் ** இவான் டிமிட்ரிச் கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற நடுத்தரன். இரவு உணவை முடித்துக் கொண்டு செய்தித்தாளை வாசிக்க சோபாவில் உட்கார்ந்தான். மேஜையை சுத்தம் செய்துகொண்டே பெண்டாட்டி 'இன்னிக்குப் பேப்பரைப்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 31

ஜோதிர்லதா கிரிஜா மறு நாள் மாலை ஆறு மணி யளவில் ஒரு பெண் பங்கஜத்தை ஸ்திரீ சேவா மண்டலியில் சந்திக்க வந்தாள். “என்னம்மா? என்ன சங்கதி? நீ யாரு?” என்று பங்கஜம் கேட்டதுதான் தாமதம்,…

கவிதைகள்

கீதாஞ்சலி (83) : என் கண்ணீர் முத்தாரம்..!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அன்னையே! சோகத்தில் சிந்துமென் கண்ணீர்த் துளிகளை எல்லாம் ஓர் முத்தாரமாய்க் கோர்த்துச் சூட்டுவேன், உன்னெழில் கழுத்தினில்! விண்மீன் பரல்கள் நடமிடும் ஒளிச் சலங்கைகள் ஒப்பனை செய்கின்றன உன் திருப்பதங்களை!…

ஆதமின் தோல்வி

ஹெச்.ஜி.ரசூல் தனது இடப்பக்க விலாஎலும்பை தேடிக் கொண்டிருந்த ஆதம் எதிரே நின்ற ஹவ்வாவைப் பார்த்து மூர்ச்சையாகி விழுந்தான் தன்னிடம் இல்லாத மார்பகங்கள் ஹவ்வாவிற்கு எப்படி முளைத்தன..? நிகழும் அதியசத்தை கண்ணுற்ற ஆதமின் நினைப்பு அலைக்கழிந்தது…

போர் நிறுத்தம்

சந்துஸ் எந்தக் கணத்திலும் சுடுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி முனையின் விளிம்பில் வந்தமரும் ஒரு வண்ணத்துப்பூச்சிக்கு ஓயாத, இரக்கமற்ற போரை நிறுத்தும் ஆற்றல் இருக்குது என நினைப்பது ஹவிசர்ஹ முற்றிப் போய் விட்டதன் தேர்ந்த…

தொடர்ந்து ஏய்க்கும் மாடும் விடாது மேய்க்கும் மூலனும்

தேவமைந்தன் முகாந்திரமற்ற வனாந்தரங்களில் - நாம் தொலைந்துபோனோம். கொட்டும் மழையில் வெட்டும் இடியில் ஊழிநடனமிடும் மின்னற்கொடிகளில் தொடுவானம் எச்சரிக்க,நாம் நடுங்கிக் கிடந்தோம். வானம் வெளுத்து அவ்வப்பொழுது நம்முள்ளே நம்பிக்கையூட்டியபொழுது, வழியெல்லாம் முட்புதர்கள் ஒடித்து முன்சென்றபொழுதெல்லாம்…

நகைச்சுவை

அற்புதங்களுக்கான இன்றைய தேவை அதிகரிப்பும், மறுப்பும், உண்மை தேடலும்

தேவமைந்தன் வறட்டுத்தனமானவையும் காட்டுத்தனமானவையுமான சூழ்நிகழ்வுகளுக்கு நடுவில் நாம் வாழ்க்கைச் சதுரங்கத்தில் பெரும்பாலும் முட்டாள்தனமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அற்புதங்களுக்கான தேவை நிகழுலகில் மிகுந்து வரும் அதே நேரம், விரக்தியும் வெறுப்பும் சகமனிதர்பால் மட்டுமல்ல, தனிமனிதனுக்குத்…

யோகா

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா “யோகாவில் மூழ்கிக் கிடந்தேன். தவ நிலையை அடைந்து விட்டேன். மோன நிலையில் இருந்த என்னை நிஷ்டையில் இருந்து கலைக்க ஊர்வசிகள், ரம்பைகள் ஆட கண் விழித்தேன்” என்றெல்லாம் எழுத ஆசை தான்.…