திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050120_Issue

அரசியலும் சமூகமும்

பேரழிவுச் சீரமைப்பு -உளவியல் கண்ணோட்டம்-2

ஸ்ரீமங்கை இிரு வாரங்களுக்கு முன்பு இவ்விணையத்தில் பேரழிவுச் சீரமைப்பில் உளவியல் கண்ணோட்டம் குறித்து எழுதியிருந்தேன். இது குறித்து தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். பல நண்பர்கள் மின்மடல் மூலம் தொடர்பு கொண்டு சீரமைப்புப்…

நிஜமான போகி

ஜெ. ரஜினி ராம்கி போகிப் பண்டிகை. பதினோரு மணி என்பதையே மறக்கடிக்கும் மார்கழி மாதத்து மிதமான வெப்பம். இணைய நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த தரைவிரிப்புகளை ஏற்றிக்கொண்டு கரூரிலிருந்து திருப்பாராய்த்துறை தாண்டி திருச்சி மெயின் ரோட்டில்…

வீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம்

ம.எட்வின் பிரகாஷ் ஞாயிற்றுக் கிழமை வழக்கம் போல் எங்கள் ஊர் மாதா கோவிலுக்கு சென்று விட்டு நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வீடு திரும்பிய பின்பு காலை செய்தித் தாள்களில் மூழ்கியிருந்தேன். தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது.…

வாய் மூடிப்போன நடுநிலையாளர்கள்

ராஜ்குமார் சங்கரமடப் பிரச்சனையின் பரிமாணங்கள் பல்வேறு விதமாக மாறி, தற்பொழுது மிகவும் சிக்கலான நிலைமையை அடைந்து விட்டது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நியாயமானதுதான் என நினைத்தவர்கள் கூட தற்போது இதன் பின்புலத்தில் இருக்கும் உண்மை சாமான்யர்களின்…

அஞ்சலி: சீன கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவ் ஜியாங்

ஆசாரகீனன் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் ஜாவ் ஜியாங் (Zhao Ziyang). இவர் 1989-ஆம் வருடம் சீனாவில் நடந்த ஜனநாயக ஆதரவு மாணவர் புரட்சியை ஆதரித்த காரணத்துக்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு, ஜனவரி…

சொன்னார்கள் சொன்னார்கள் – ஜனவரி 20 ,2005

பி.கே. சிவகுமார் என்னதான் முந்தைய தே.ஜ.கூ ஆட்சியில் பொருளாதாரம் நற்கதியிலிருந்ததாக மீடியாக்கள் மொழிந்தாலும் அத்தனையும் 'சமைத்துப் பார் ' புத்தகத்தில் இருக்கும் மேட்டர் மாதிரிதான். இந்தப் புத்தகத்தில் உள்ள பண்டங்களைக் காசு கொடுத்து வாங்கும்…

அறிவிப்புகள்

கடிதம் ஜனவரி 20,2005 – செருப்பு: குறும்படம்.

கோவிந்த் குறும்படம் என்ற பெயரில் பல குறும்புப் படங்கள் பார்த்த நிலையில், குறும்படம் என்றாலே ஒரு அலர்ஜி இருந்ததுண்டு. ஆனால், மனதை அடித்துப் போட்ட மாதிரி உணர்வை படம் பார்த்தவுடன் தந்தது, ஒரு குறும்படம்-…

கடிதம் ஜனவரி 20,2005 – நேச குமார் தெளிவுபெறவேண்டும்

ஹமீத் ஜாஃபர் 'நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்ற அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் ' (அல் குர்ஆன்; 3:103) யாரையும் மிரட்டவேண்டும் என்ற எண்ணம் நமக்கில்லை, மாறாக நாம் அனைவரும் சகோதரர்களாக வாழவேண்டும், சமத்துவமும்…

கடிதம் ஜனவரி 20 ,2005

விசிதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு வணக்கம். திரு.ஞாநி அவர்கள் கட்டுரை மீது நான் விமர்சனம் வைத்தது உண்மை.அதை கருத்து குறித்த விவாதமாகவே நான் கருதினேன், இப்போதும் அவ்வாறே கருதுகிறேன். அவர் எழுதியதன் மீது எனக்கு…

கடிதம் ஜனவரி 20,2005 – ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரால் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிர்ப்பு… பணிந்தது இரான்

ஆசாரகீனன் தீவிர இஸ்லாமிய சட்டங்களைக் கடைபிடிக்கும் இரான், நைஜீரியா போன்ற அரசாங்கள், முறை தவறிய உறவு வைத்துக் கொள்வதாகக் குற்றம் சாட்டப்படும் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வது போன்ற கொடும் தண்டனைகளை வழங்குவது பற்றியும்,…

கடிதம் ஜனவரி 20,2005 – திருமாவளவனும் தமிழ்த்திரையுலகும்

வரதன் தமிழ்த் திரையில் பெண்களைச் சித்தரிக்கும் முறையும், குறிப்பிட்ட ஜாதிகளை உயர்த்தியோ அல்லது குத்தியோ காட்சியமைப்புகளும், அதிகமாகிப்போயிருப்பது எனும் குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருக்க மறுபுறம் தமிழ்ப் படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும்…

அவரவர் உடை அவரவர் விருப்பமே!

ஜோதிர்லதா கிரிஜா “ஆண்களைப் பற்றிய அச்சத்துடன் தங்கள் உடைகளைத் தேர்வு செய்யவேண்டும் என்கிறாரா ?” என்று திரு சோதிப்பிரகாசம் வினவுகிறார். அச்சம் என்னும் உணர்வு இல்லாத பெண்களுக்கும் கூட ஓர் ஆணின் விகாரமான பார்வை…

கடிதம் ஜனவரி 20,2005

அருளடியான் அன்புள்ள திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, திண்ணையின் மீதான எழுத்தாளர் ஞாநியின் விமர்சனத்துக்கு, 'கட்டுரைகளின் கருத்துக்கள் அதனை எழுதியவர்களின் சொந்தக் கருத்துக்களே தவிர திண்ணையின் கருத்தாக இருக்க அவசியமில்லை ' என்றே பதில் சொல்வீர்கள்…

ஓவியர்களின் உலகம் அழைக்கிறது – ஜனவரி 25 ,2005

அறிவிப்பு அதிசயமும் அன்பும் கொண்டு இந்த உலகினை ஒருசில சமயங்களில்தான் நம்மால் கவனிக்க முடியும். ஓவியங்களின் வாழ்க்கையும் ஓவியர்களின் வாழ்க்கையும் ஒருவிதத்தில் அப்படிப்பட்டதாகத் தோன்றுகிறது. தேசிய அளவில் புகழ்பெற்ற ஓவியக்கண்காட்சியில் ப்ங்கு பெற்றவரும், மலேசியா…

ஜனவரி 30,2005 – ராஜராஜேஸ்வரம் நிகழ்ச்சி

லலிதா ராம் அன்புள்ள நண்பர்களுக்கு, சென்ற வாரம் திண்ணையில் அனுப்பிய அழைப்பிதழ் தொடர்பாக http://www.thinnai.com/le01130515.html ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போய்விட்டது. (நிகழ்ச்சி நிரலில் விஷயம் பொதிந்திருப்பினும், explicit-ஆக குறிப்பிடவில்லை). தமிழகத்தின் முதுபெரும் வரலாற்றாய்வாளர்களான…

அறிவியலும் ஒரு போலி அறிவுஜீவியின் நியோ-மனுவாதமும்

அரவிந்தன் நீலகண்டன் சார்லஸ் டார்வினுக்கு முன்னதாக பெரும் ஏற்புடையதாக விளங்கிய பரிணாம வாதம் லமார்க் எனும் பிரெஞ்சு நாட்டு உயிரியலாளருடையதாகும். லமார்க்கின் பரிணாம சித்தாந்தத்தின் படி ஒரு உயிரினத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சம், உதாரணமாக,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கண்டு கொண்டேன் !

பி.டி. ஸ்மித் தமிழில் : ராமன் ராஜா (John Waller எழுதிய Leaps in the Dark: The making of Scientific Reputations புத்தகம் பற்றி கார்டியன் இதழில் வந்த மதிப்புரை) பெர்டோல்ட்…

சனிக்கோளின் துணைக்கோளில் தடம் வைத்த ஈரோப்பியன் விண்ணுளவி ஹியூஜென் [ESA Probe Huygens Lands on Saturn ‘s Moon Titan] (Jan 14 2005

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா பூதள விண்வெளித் தீரர்கள் முன்னாள் சீதள நிலவில் பாதங்கள் வைத்தார்! முடுக்கும் பேராற்றல் ஈர்ப்பின் கவண்வீச்சில் தாவி காஸ்ஸினி விண்கப்பல் வியாழக்கோள் தாண்டி சனிக்கோள் சரண்…

இயற்பியல்::2005 புதிய இணையதளம்

வெங்கட்ரமணன். http://iyarpiyal.org 2005 ஆம் ஆண்டை இயற்பியல் ஆண்டாக அறிவிக்கலாம் என்று ஐரோப்பிய இயற்பியல் சமூகம் கூறியது, தொடர்ந்து அமெரிக்க இயற்பியல் சமூகமும் (American Physical Society) அமெரிக்க இயற்பியல் கழகமும் (American Institute…

இலக்கிய கட்டுரைகள்

காஞ்சி மடம் – க.நா.சு – பிலோ இருதயநாத் – மாலதி சந்தூரின் தெலுங்கு மிட்டாய் – வலம் போன நரி (அல்லது – மஞ்சரி 1955 தொகுப்பு)

இரா முருகன் ____ சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய இன்னொரு பழைய புத்தகம் 1955-ம் ஆண்டு 'மஞ்சரி ' இதழ்கள் தொகுப்பு. 1955 ஆவடியில் காங்கிரஸ் மாநாடு நடந்த ஆண்டு. மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ்…

மதம் அலுத்துப் போனது – மாதவிக்குட்டியின் கட்டுரை

தமிழில் : இரா முருகன் (கடந்த வாரம் மாத்ருபூமி ஞாயிறு மலரில், மலையாள எழுத்தாளர் மாதவிக் குட்டி - சுரையா - கமலாதாஸ் எழுதிய ஒரு கட்டுரை முழுப் பக்கத்துக்கு வந்துள்ளது. 'மதம் மடுத்து…

பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் கால்வினோ கதைகள்

மாலதி United writers Dec 2003 பதிப்பு [நூலில் உள்ள 18 கதைகளுக்குள் 15 கதைகள் பற்றிய என் குறிப்புகள் கீழே. புதிய கோடாங்கியில் ஏற்கனவே வெளியாகியது-மாலதி சதாரா] சமூக தனித்துவக் கட்டமைப்புகளில் விஷமேறிப்…

வெங்கட்ரமணனின் குவாண்டம் கனி

அ.முத்துலிங்கம் தமிழ் நாட்டில் இருந்து வந்த பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒருமுறை என்னிடம் சொன்னார் 'எனக்கு விஞ்ஞான அறிவு இல்லை. பள்ளிக்கூடத்தில் படித்து பட்டம் வாங்கியதும் கிடையாது. ஆனாலும் ஐஸாக் அஸ’மோவின் வேதியியல் கட்டுரை…

புத்தக விழாவில் ‘பிடித்தவை ‘

இரா முருகன் அசோகமித்திரன் தினமணி சிவகுமார் காலச்சுவடு கண்ணன் கிழக்கு பதிப்பகம் பத்ரி நெடுமாறன் பா ராகவன் பாவண்ணன் எஸ் ராமகிருஷ்ணன் சுந்தர ராமசாமி தமிழினி வசந்த குமார்

ஆறடி அறைகளின் குரல்கள்

பாவண்ணன் (மேன்ஷன் கவிதைகள் - பவுத்த அய்யனாரின் கவிதைகள் அறிமுகம்) பவுத்த அய்யனாரின் 45 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. தொகுப்பின் தலைப்பு மேன்ஷன் கவிதைகள் என்று வரம்பிட்டுக்கொண்டிருந்தாலும் உண்மையில் பாதிக்கும் குறைவானவே மேன்ஷன் அனுபவமுள்ள…

தியாகத்தின் கதை – போர்க்குதிரை – நுால் அறிமுகம்

பாவண்ணன் ஏராளமான தொன்மக்கதைகளால் நிரம்பியிருப்பது மனிதமனம். அத்தொன்மங்களில் இடம்பெற்றவர்கள் அனைவரும் ஒருவகையில் நம் மதிப்புக்குரியவர்கள். நம்மால் மேற்கொள்ளமுடியாத அளவுக்கு வீரசாகசங்களில் ஈடுபட்டவர்கள். நம்மால் நினைத்தப்பார்க்கமுடியாத அளவுக்கு தியாகங்களைச் செய்தவர்கள். நம்மால் நம்பவே முடியாத அளவுக்கு…

நெரூதா அனுபவம்

சுகுமாரன் (பாப்லோ நெரூதாவின் 100 கவிதைகள் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. நூலுக்கு எழுதிய முன்னுரையை திண்ணை வாசகர்களின் பார்வைக்கு முன்வைக்க விரும்புகிறேன். இதன் ஆரம்ப வடிவம் திண்ணையில்தான் ஒழுங்குபெற்றது என்பதையும் நினைவு கூர்கிறேன்.…

கதைகள்

தினம் ஒரு பூண்டு

ஆபிதீன் சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திலிருந்த மரத்தின் கிளையில் தாவிக்கொண்டிருந்த ஒன்றை அது ஒரு குரங்குதானென்று கண்டுபிடித்து என் மனைவியிடம் சொல்லுமுன்னரே அவள் , 'ஹை...ஆம்புளெ கொரங்கு ' என்று பரவசமாக என்னிடம் சொன்னாள்…

இப்படிக்கு இணையம்….

பாலு மணிமாறன் எதேட்சையாக இணையத்தில் சந்தித்துக் கொண்ட ஒரு சிங்கப்பூர் தமிழ் இளைஞனும், இன்னொரு தேச தமிழ் பெண்ணும் பேசித் தொடங்கினார்கள். பேசித் தொடர்ந்தார்கள். இனி - அவர்கள் பேசியது! 'ஹாய்...டு யு லைக்…

த ளி ர் ச் ச ரு கு

எஸ். ஷங்கரநாராயணன் ---- காலையில் சிறிது ஆசாரக்கடன்கள், நியம நிஷ்டைகள் என வைத்துக் கொண்டிருந்தாள் மகாலெட்சுமி. வயசின் லெட்சணங்கள் நன்றாய்த்தான் இருக்கிறது. எளிய வாழ்க்கை கிராமத்தில். எளிய உணவு. பழகிய ஜனங்கள். தனிமை பாவனை…

து ை ண – குறுநாவல் – 1

ம.ந.ராமசாமி ---- மு ன் னு ை ர புதிய வானத்தின் கீழே... /ஞானவள்ளல் சிலைகள் அறியுமோ கற்பூர வாசனை /ஞானக் கோமாளி, கவிதைத் தொகுதியில் எஸ். ஷ./ அன்பு நண்பர் ம.ந.ரா.வின் முதல்…

நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -55

நாகரத்தினம் கிருஷ்ணா மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டார் புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே -இராமலிங்க அடிகளார் ---- நண்பனே! மனித உடம்பு மாயையினின்று தோன்றியது. உடல் காரணமாகவே…

வேட்கை

சுமதி ரூபன் 1 காற்றின் ஓலம் அதன் வேகத்தைக் காட்டிக்கொண்டிருந்தது.. வெள்ளைப் புழுதியாய் பனிமணல் அலைந்து பறந்து ரோட்டில் கோலம் போட அதில் உருவங்கள் தேடித் தேடி நேரத்தைக் கொண்டுகொண்டிருந்தாள் வசந்தமலர்.. .வேலை முடியும்…

கவிதைகள்

மறுபடியும்

பவளமணி பிரகாசம் துட்டுள்ள சீமாட்டி கேட்டுப் பெற்றனள் செத்துப் போய்விட்ட செல்லப் பூனையின் அசலான நகலின் அன்போடு போற்றிட ஐயகோ! இது என்ன சோதனை! ஐயங்கள் செய்யுதே வாதனை! மாண்ட உறவினை, மனைவியை, மகனை…

முகம்

ம.நவீன் ஐந்தாவது முறையாக கழட்டி வைத்து மற்றதை எடுத்து மாட்டியபோது அலமாரிக்குள் இருந்து சிரித்தது இன்றைய இரண்டாவது முகம்! அதிகமாக அடுத்தவர்களிடம் பல் இளித்த களைப்பில் இன்னும் உரக்கத்தில் இருந்தபடியால் முதல் முகத்துக்கு தொந்தரவில்லாமல்…

கவிதைகள்

வா.மணிகண்டன். 1. பிரிதல் நிமித்தம் கண்ணீர்த்துளி கசிகின்ற கணத்தில் நிகழ்ந்துவிடுகிறது. மெளனமான இடம்பெயர்வொன்று. 2. நிகழ்வு எவருடைய நிழலும் வருடியிராத இந்தப்புள்ளியில்தான் எரிமலையின் சிதறலொன்று கடந்து சென்றது. வண்ணத்துப்பூச்சியின் மெல்லிய சிறகடிப்பை. ---- kvmanikandan1@yahoo.co.in

என் பொங்கல்

செல்வநாயகி **** அடுத்த ஊர் சூளையில் வெந்துவந்த சுண்ணாம்புக்கற்கள் ஊறித் தெளிந்த பாலில் குளித்தெழுந்த ஓட்டு வீடுகள் பூளைப்பூவின் வெண்மை வேப்பிலைப் பசுமை ஆவாரம்பூ மஞ்சள் மூன்றும் கலந்த சுகந்தம் காப்புக்கட்டிய இடம்சுற்றி விளைந்த…

பெரியபுராணம்- 27 -16. கண்ணப்ப நாயனார் புராணம்

பா. சத்தியமோகன் 650. அடையாதவரின் திரிபுரங்கள் அழித்த காளை ஊர்தி உடைய வேதவாய்மைக் காவலர் திருக்காளத்தி கண்ணப்பரின் திருநாடு யாதெனில் நாவலர் புகழ்ந்து போற்றும் நல்வளம் பெருகி நின்ற பூஞ்சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு.…

கவிக்கட்டு 45 – என்னை என்ன செய்யப்போகிறாய் ?

சத்தி சக்திதாசன் கண்களைச் சிமிட்டாதே காதலில் துடிக்கிறேன் கைகளை அசைக்காதே காற்றுன்னைத் தீண்டிடும் கன்னித்திருமகளே ! கனிவாய் மொழிந்திடுவாய் என்னை என்ன செய்யப்போகிறாய் ? வேகமாய் நடக்காதே வேகுதென் நெஞ்சமே வெய்யிலில் வாடாதே வெந்தணலாய்…

உதிரிப்பூக்கள்

கி. சீராளன் (1) உதிரும் போதும் அழகு பூக்கள் மட்டுமே. .... (2) இறுதி ஊர்வலத்தில் பூக்கள் உயிரோடு. .... (3) வெளியே மழை மனதில் சாரல் உயிர் துளிர்ப்பு. .... (4) விஞ்ஞானத்தின்…

அலைகளை மன்னிக்கலாம்

நாகூர் ரூமி ==== ஊருக்குள்ளே அவசரமாய் வந்து கடல் போனபோது நொந்து போயின உடல்கள் வெந்து போயின உயிர்கள். அடையாளங்கள் அனைத்தும் அழிந்து போனபின் சேர்ந்து கொண்டன சடலங்கள் ஒரே குழிக்குள் சகோதரத்துவத்துடன். மரங்களும்…

கவிதைகள்

இளைய அப்துல்லாஹ் அவன் அந்தி கரையாப்பொழுதுகளில் அவளோடுறைந்திருந்து விட்டு அப்படி ஆகுமென்றென நான் நினைத்திருக்கவில்லை அழகிய வானத்தையும் இளம் தெனறலை விடவும் அவள் அணைப்பும் அவள் அருகும் அழகாகவே இருந்தன் இருந்தாள். வெறிகொண்ட முத்தத்தால்…

இவ்வாண்டு படைத்த கடற்பொங்கல்!

சி. ஜெயபாரதன் மக்கள் மீது அக்கறை மிக்க முக்காலம் காக்கும் மூதாட்டி அன்னை இவ்வாண்டு சக்கரைப் பொங்கலை ஏனிங்கு சமைத்திட வில்லை ? கொஞ்சு மொழி பேசி இக்கரை வாழும் பிஞ்சு உடல்களை அள்ளி…