திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040617_Issue

அரசியலும் சமூகமும்

பாசமா ? பாசிசமா ?

ஞாநி தமிழ்நாட்டில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி பெற்ற அமோக வெற்றிக்குக் காரணம் ஜெயலலிதாவின் அலட்சிய, அராஜக, மக்கள் விரோத ஆட்சிதான் என்பதில் இப்போது யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அ.தி.மு.க- பி.ஜே.பி அணிக்கு 34.9…

விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்

டக்ளஸ் ஜே அமி (குறிப்பு: இந்தியாவுக்கு தகுந்தாற்போல சில வரிகள் மாற்றப்பட்டுள்ளன) விகிதாச்சார முறை பற்றிய எந்த ஒரு ஆராய்ச்சியும் அதன் அரசியல் ஆதாயங்கள் மற்றும் அதன் அரசியல் பாதிப்புகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டே…

சித்திரவதை

ஞாநி இராக்கின் அபு க்ராய்ப் சிறையில் இராக்கி கைதிகளை அமெரிக்க ராணுவத்தினர் சிலர் இழிவுபடுத்தியும் சித்திரவதை செய்தும் வந்துள்ள காட்சிகளைக் கண்ட எந்த நேர்மையான மனமும் அமெரிக்க அரசை சபிக்கும். இராக்கியர்களை நிர்வாணப்படுத்தியும் ஓரின…

டயரி

ஞாநி ஒரு மனிதர்.. .. .. பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வி.பி.சிங்கை சந்தித்தேன். கலைஞரின் முத்து விழாவில் பேசுவதற்காக சென்னை வந்திருந்தார். 1987ல் அவர் ஜன் மோர்ச்சா தொடங்கியதிலிருந்து தேசிய முன்னணி உருவாகி…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)

ஆசாரகீனன் இனி, தனி நபர் சுய முன்னேற்ற வேட்கைகள், பொது நல நோக்கு என்ற வேடத்தில் வெளிப்பட்டு இந்தியாவை ஒரு கலக்கு கலக்கியது பற்றி ஒரு குறிப்பு. காலனியத்தில் இருந்து விடுபட்ட இந்தியா அதன்…

வாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச

மத்தளராயன் கட்சி இங்கே தோற்றுப் போனால் என்ன, நம்மாளுங்க அங்கே பதவியேற்கறதைப் பார்க்க வேணாமா ? அதே அதே என்று இடுப்பில் முண்டு இறுக்கிக் கொண்டு ஒரே குரலில் சொன்னார்கள் வடக்கன் கேரளத்தில் ஒரு…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9

பி.கே.சிவகுமார் கறை படிந்தவர்கள் அமைச்சர்கள் ஆகலாமா ? கறை படிந்த அமைச்சர்களை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று கூறி பா.ஜ.க.வும் கூட்டணி கட்சிகளும் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்த செய்திகள் கடந்த வாரங்களில் வெளிவந்தன. ஊழல்…

மிராண்டாவைப் பார்த்து மிரண்டவர்கள்

அசுரன் நம் நாட்டில் அவ்வப்போது செய்தித்தாள்களில் மக்களுக்குப் பலனுள்ளதான அதேவேளை சுவாரசியமானதான செய்திகள் இடம்பெறும். கடந்த சூன் 12ஆம் நாள் இத்தகைய செய்தியொன்றைப் படிக்க நேர்ந்தது. சென்னை புரசைவாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்…

அறிவிப்புகள்

கடிதம் ஜூன் 17,2004

கிருஷ்ணமூர்த்தி கதிரவன் ரா.சு.சங்கம் பற்றிய.... ரா.சு.சங்கமும் கோட்சேவும் நாதுராம் கோட்சே என்ற கொலைஞர், ரா.சு.ச அங்கத்தினன் என்பது நாடறிந்த உண்மை. இந்த உண்மை, அண்மைக் காலங்களில் சில ஊடகங்களில் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகிறது. இது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செல்பேசிகளைத் தெரிந்து கொள்வோம்!

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி செல்பேசிகள், வழக்கமான தொலைபேசிகளினும் வேறுபட்ட கருவி. செல்பேசி ஒரு குட்டி இருவழி தொடர்பாடும் ரேடியோ! செல்பேசிகள், நாம் பேசும் குரல் சமிக்கைகளை ரேடியோ அலைகளாக மாற்றி அமைக்கின்றன. ரேடியோ அலைகள்…

மின்மினி பூச்சிகள்

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான் மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். Fly என்பது ஈக்கள் வகையைக் குறிக்கும். அவை Diptera என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால் மின்மினி பூச்சிகள் ஆங்கிலத்தில் Firefly எனப்பட்ட போதிலும், உண்மையில்…

திரைகடல் நாடியும் தேடு மின்சக்தி! [Energy from The Ocean Waves, Tides & Thermal Power]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா நீலத் திரைக்கடல் வெள்ளத்திலே, எழும் நித்தம் பரிதியின் வெப்பத்திலே காலங்கள் மாறிச் சக்திவரும்! அதைக் கைப்பற்ற ஞாலம் கற்றுவரும் முன்னுரை: பிரபஞ்சத்தில் ஒன்றான பால்மய காலக்ஸியில்…

இலக்கிய கட்டுரைகள்

மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4

சோதிப் பிரகாசம் கலை மனோ லயம் ஏப்ரல், 2004 புதிய கோடாங்கியில் குடியரசு எழுதிய கட்டுரை ஒன்று வெளி வந்து இருந்தது---- 'பலியர்களுடன் உரையாடல் ' என்னும் தலைப்பில்! 'பலியர் ' என்னும் மலை…

நிழல் யுத்தம் பற்றி

அஜீவன் இலங்கைத் தமிழ் வசனங்கள் புரியவில்லை , நிழல் யுத்தம்.... நிழல் யுத்தம் என்று அஜீவன் இயக்கத்தில் ஒரு படம் திரையிடப்பட்டது. அற்புதமான ஒளிப்பதிவு..பல காட்சிகளில் 'லைட்டிங் ' பிரமாதமாய் இருந்தது. ஆனால் படத்தொகுப்பு…

தமிழுக்குப் பெருமை

அக்னிப்புத்திரன், சிங்கப்பூர் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்காலம் அவர்கள் தன் உரையின் துவக்கத்தில் தமிழில் கவிதை பாடியுள்ளார். இதைப்பார்த்த எனக்கு உண்மையில் என்னையும் அறியாமல் என் உள்ளத்தில் பெருமித…

என் பொழுதுகளில் இதுவும்..

சுமதி ரூபன் , கனடா நான் அங்கு சென்றபோது எல்லோருமே இருந்தார்கள்.. சிறிது தாமதமாகிவிட்டது என்ற படியே இணைந்து கொண்டேன். 'என்ன குடிக்கின்றீர்கள் ? ' தண்ணீர் தொடக்கம் தண்ணி வகைகள் சிற்றுண்டிகள் பரவிக்கிடந்தன.…

வெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா

வெங்கட்ரமணன் கடந்த ஜுன் 10ம் தேதியன்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனுக்கு இயல்விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் பிரிவும், டொராண்டோவின் 'இலக்கியத் தோட்டம் ' அமைப்பும் இணைந்து…

கதைகள்

நெய்தல் நிலத்துக்காாி!

நாவாந்துறை டானியல்ஜீவா- கொழும்பில் நான் தங்கியிருந்த காலத்தில் ஒரு சிங்கள வீட்டில் தான் நானும் வரதனும் ரமேசும் சாப்பாடு எடுத்து சாப்பிடுவது வழக்கம். இன ஐக்கியத்தை ஏற்படுத்தவது அல்ல எங்கள் நோக்கம். அல்லது சாப்பாடு…

பிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)

அ.முஹம்மது இஸ்மாயில் 8. கார் போய் ரொம்ப நேரமாகியும் தேவிகாவுக்கு அந்த இடத்தை விட்டு நகர மனமில்லை. பூட்டியிருந்த வீட்டை திரும்பி பார்த்தாள். சிறு வய்து முதல் அந்த வீடு பூட்டியிருந்து அவள் பார்த்ததேயில்லை.…

அஞ்சலைப் பாட்டி

பனசை நடராஜன் நந்தகுமார் நின்றுக் கையசைக்கும் இடத்தைத் தவிர மற்ற எல்லாத் திசைகளிலும் திரும்பி திரும்பிப் பார்த்தாள் அஞ்சலைப் பாட்டி. சிங்கப்பூர் விமான நிலையத்தை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவளை பெட்டிகளை தள்ளிக் கொண்டு…

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24

நாகரத்தினம் கிருஷ்ணா 'வரமளித்த யாமழிப்பது முறையன்று வரத்தால் பெருமை பெற்றுள சூரனை அடுவது பிறர்க்கும் அரிதெனப் பரன் உன்னியே தன்னுருவாகும் ஒரு மகற்கொடு முடித்தும் என்றுன்னினான் உளத்தில் ' -கச்சியப்ப சிவாச்சாரியார் (கந்த புராணம்)…

சாயம்

இரா முருகன் உட்கார்த்தின மாதிரி அமர்த்திப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். ஆம்புலன்ஸில் படுக்க வைக்கும்போது தான் முகத்தைப் பார்த்தேன். வெள்ளைக்காரன். வயது நாற்பதுக்கு அந்தப் பக்கம். அது ஐம்பதா அறுபதா என்று முகத்தை வைத்துச்…

தென்னையும் பனையும்

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு சத்தியனின் குடும்பத்திற்கு விசா கிடைத்து விட்டதால் முழுக்குடும்பத்தினருமே மகிழ்ச்சியில் ஆரவாாித்தனர். சத்தியனின் மனைவி சுமதியின் கால்கள் நிலத்தில் பாவவில்லை. விசா வந்த நாளில் இருந்து இரண்டு பிள்ளைகளின்…

வெற்றுக் காகிதங்கள்

நாவாந்துறைடானியல்அன்ரனி உள்ளே வந்தான். வீடு முழுவதும் ஒரே இருள். பொிய அறையின் வாசல் நிலைப்படிக்கு மேலாக தொிந்த வெளிக்கூடாக உள்ளே எாிந்து கொண்டிருந்த 'அாிக்கன் லாம்பின் ' மெல்லிய வெளிச்சம் மாத்திரம் மங்கலாக வெளி…

மஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்

தமிழில் : நாகூர் ரூமி ஒரு நாள் இரவு, அரபி ஒருவனின் மனைவி தன் கணவனிடம் எல்லை மீறி உரையாடினாள். 'இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக உள்ளது. நாம்தான் சந்தோஷமாக இல்லை. நமக்கு உண்பதற்கு…

தனக்கென்று வரும் போது..!

சந்திரவதனா ,யேர்மனி 1 ஸ்ருட்காட் விமானநிலையம் வழமை போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அமெரிக்கன் எயர்லைன்ஸ்க்குரிய கவுண்டரை நோக்கி விரைந்து கொண்டிருந்த நர்மதாவுக்கோ இழுத்துக் கொண்டும் இடையிடையே தூக்கிக் கொண்டும் வந்த சூட்கேசை விட…

மலை (நாடகம்)

கணேசன் முதலாமவன்: விரல்களைத் வருடி உள்ளங்கையை துடைத்துக் கொண்டிருக்கையில் வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு அடுத்துள்ள பள்ளத்தாக்கில் விழுந்தாள். அவளைத்தொடர்ந்து ஓடிய அவனும் .... பள்ளத்தில் விழுந்தான். அவர்கள் அமர்ந்திருந்த மலை மேடு பொட்டல் நிளம் போல்…

கவிதைகள்

தீர்மானம்

தீபம் கோபி, சிங்கப்பூர் பருவ வயதில் பற்றவைத்த நெருப்பு தினம் புகைத்து.. புகைந்து.. புறையோடி.. புற்றுநோய் ஆகுமுன்பே.., மகிழ்ச்சி, துயரமென ஏதேதோ காரணம் சொல்லி திகட்டாமல் அருந்திய ஆல்கஹால் கரைசலில் குடலரித்து வெந்து -வெறுங்…

அப்பாவுக்கு…!!!

சாந்தி மனோகரன் பூக்களின் வாசனை செடியறியாது... செடியது இல்லாமல் பூக்களே கிடையாது... தன்னலமற்ற பூஞ்செடி நீ...! முள்ளும் காயமும் உன்னுள்ளே இரூக்கும்-பிள்ளை பூக்களின் சிரிப்பில் உன் உயிர் சிரிக்கும்... shanthi_yem@yahoo.com

தமிழவன் கவிதைகள்-பத்து

தமிழவன் நானும் பட்டாம் பூச்சியும். எதிர்பார்த்து நின்றோம் புதிதாய் பூத்த முருங்கைமரம். சுள்ளென்ற வெயில் இடையே காற்றும். வேலிகள் மட்டும் வீடுதோறும். காம்பவுண்டுகள் வராத காலம் பஸ்ஸும். அம்மணமாய் நான் அலையும் பாலகன். வில்வண்டி…

அன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி

புகாரி எப்போதும் இல்லாத அளவில் இப்போதெல்லாம் வெளிநாட்டுப் பயணங்கள். வளைகுடா இழுக்கிறது. அமெரிக்கா அழைக்கிறது. சிலருக்கு ஆசை துரத்துகிறது; பலருக்கோ ஏழ்மை விரட்டுகிறது. இம்மாதிரிப் பயணங்களால் வாழ்வில் பிரிவுத்துயர் பெருகிப் பெருகி திட்டமிட்ட விபத்துகளில்…

உடன் பிறப்பு…

பனசை நடராஜன், சிங்கப்பூர் பிள்ளைப் பேறே தொல்லை என்றெண்ணியதால்.... அரிதாகப் பெற்றுக் கொண்டாலும் ஒன்றோடு நின்றதால்.. அக்கா, தங்கை, அண்ணன், தம்பி எல்லாம் அறியாத வார்த்தைகளாகி... அடையமுடியாத பேராசையானது இன்றைய குழந்தைக்கு! - -…

கடலைக்கொல்லை

பட்டுக்கோட்டை தமிழ்மதி மண்ணில் கோடிலுத்த பின்னே புள்ளி வைக்கும் கோலம். ஒரு கோட்டை மறுகோடு மூட கோட்டில் விழுந்த புள்ளிகளெல்லாம் மறையும் மறுபடி தெரியும் கோலமாய் விரியும். இந்தக் கோடுகளாவது இந்தப் புள்ளிகளாலென்று கோடு…

குழந்தை மனது

பனசை நடராஜன், சிங்கப்பூர் 'அப்பா சூரியனுக்கு அன்றாடம் இரவு வேலை! எப்போது போவாரென்று இரவு வரக் காத்திருந்து 'ஆகாயப் புல்வெளியில் ' அம்மா நிலாவையும் அழைத்து வந்து விளையாடும் நட்சத்திரப் பிள்ளைகள்! விரைந்தோடும் நிலவைச்சுற்றி…

கவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் ?

சத்தி சக்திதாசன் வீதியெல்லாம் அழுகுரல் விதியென்றொரு ஓலம் நாதியற்ற குழந்தைகள் நசுங்கும் காட்சிகள் நாட்டின் மீதொரு குண்டு மழை பொழியும் சோகம் ஜயகோ மறைந்தது அங்கே மனிதம் தான் போரென்றோர் கோரம் ஏன் தோழனே…

உறங்கட்டும் காதல்

புதியமாதவி, மும்பை. எனக்குத் தெரியும் நீ என்னைக் காதலிக்கின்றாய் காதல் என்பது கட்டி அணைப்பதும் கண்களால் அளப்பதும் கனவு காண்பதும் கவிதை எழுதுவதும் அல்ல அல்ல காதல்.. நீ என்னிடம் கொண்ட காதல் உன்…

நகைச்சுவை

பஞ்சத்தின் உண்மை பேசும் புல்லர்களை பொசுக்கிட பொங்கி எழு தோழா, புறப்படு

தோழர் சொதப்பப்பா ** தமிழ்நாட்டுக்கு ஏற்றாற்போல இடதுசாரிகள் அரசியல் செய்யவேண்டுமாமே ? இதோ ஒரு முயற்சி ** டெலிகிராஃபில் ஒரு பொய்ச்செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலோ மற்றொரு பொய்ச்செய்தி டெலிகிராஃபில் இன்னொரு பொய்ச்செய்தி வெப்…

சேதி கேட்டோ..

குண்டலகேசி முன்னாள் அமெரிக்க (ரிபப்லிகன்) ஜனாதிபதியாக இருந்த ரொனால்ட் ரீகன் காலமானார். அமெரிக்காவிற்கும் சோவியத்திற்கும் இடையே இருந்த பனிப்போர் முடிவடைந்ததற்கு இவர் தான் காரணம் என்று ஒரு புறம் தம்பட்டம் அடிக்கின்றனர். இதை விட…

ஆட்டோகிராஃப் ‘தலை சாய்ந்து போனால் என்ன செய்யலாம் ‘

சித்ரா ரமேஷ்,சிங்கப்பூர் திருநெல்வேலிக்கு அல்வா,மதுரை மல்லிகை,கோவை நேந்திரங்காய் சிப்ஸ், இன்னும் திருச்சி, சென்னை எந்த ஊருக்குப் போனாலும் எதாவது ஒன்று பெயர் பெற்றதாக இருப்பதை போல எங்க ஊருக்கு முந்திரிப் பருப்பு. அப்புறம் பலாப்பழம்,…