பவளமணி பிரகாசம் திருத்தமான வட்ட முகமொன்றை வானத்திரையில் வரைந்து விட்டு வெள்ளை வண்ணம் குழைத்துப் பூசி ரசித்த ஓவியனும் திருட்டி கழிந்திட ஒத்தையாய் கருப்பில் ஒரு பொட்டு வைத்திட மறந்ததால் பதறினான் பிடித்திட்ட தூரிகையை…
பா. சத்தியமோகன் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை மிக லேசானது மிக மிக லேசானது ஆதலால் எடையற்றது எனவே தூக்கவே முடியாத கனம் உடையது பார்க்கவும் முடியாது சொல்லுங்கள் வாழ்க்கை லேசானது ஆதலால் பிறருக்குக் காட்டவும்…
இளந்திரையன் - சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறேன் என்னைப் பற்றியும் என் வேர் பற்றியும் யாரும் கவனிக்கவில்லை அவரவர்க்கு அவரவர் அவசரம் யாருக்கும் நேரமில்லை மண்ணின் வாசனை மனங்களின் நேசம் மலர்களின் வாசம் மலரும்…
ராமலக்ஷ்மி சிவகாசி சீமையிலிருந்து சிறப்பான செய்தி ஒன்று! சித்திரங்கள் தீட்ட வேண்டிய சின்னஞ்சிறு கைகள் சிதறி வெடிக்கும் மருந்துகளை செய்து வந்த அவலங்கள் முடிவுக்கு வந்ததென்று முத்தாய்ப்பாய் செய்தியொன்று-அம் முத்துக்களின் முன்னேற்றத்துக்கு முகவுரையாய் வந்ததின்று!…
நாகரத்தினம் கிருஷ்ணா இரத்தத்தின் இரத்தங்களும் இரசவாத நடனமிட கச்சைகள் கட்டிடுவர் கலங்காதிரு மனமே! காவிக்குப் பல்லிளித்து கருத்துக்கு முகம் சுளிக்கும் பாவிகள் சாதகத்தை படியாதிரு மனமே! உள்ளத்தில் சிறுமைகளை உரமிட்டு வளர்த்தவர்கள் கள்ளத்தால் கதையளப்பர்…
இரா.முருகன் 'ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ' தொகுப்பு - 1 வெளியீடு மார்ச் 2000 - இலிருந்து... நாள் விடியும்போது ஒலிபெருக்கி எழுப்பச் சேவல் அடித்தனர் விருந்து சமைக்க. பூப்பு நீராடப்…
ஆதர்ஷ் ராவ் பந்தல் நட்டு மைக்செட் கட்டி போஸ்டர் ஒட்டி சீரியல் லாம்ப் மாட்டி சில்லறை சேர்த்து பீடிக் கட்டோடு படம் பார்ப்பான் பத்துவயது செந்தில் உயிர் உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கும் வசவுகள் வாயில்…
புதியமாதவி, மும்பை 400 042 வானவில்லின் பாலங்கள் உடை. மழைமகள் கருக்குடம் திற ஆண்-பெண் கணவன் - மனைவி ஆதாம் - ஏவாள் சட்டைகள் எறி உயிர் உடல் ஆன்மா வேடங்கள் களை நட…
கரு.திருவரசு பார்வையிலோர் ஓவியமும் பவளவிதழ் சிரிக்கின்ற பான்மையிலோர் காவியமும் பதுமையென இயிஇருக்கின்ற சீர்மையிலோர் சிற்பமதும் செய்திடுவேன்! அவையெல்லாம் சிந்திடுமோ மழலைமொழி சிறுகுழந்தாய் உனைப்போலே! தடுமாறும் நடைகண்டு தரமான நாட்டியமும் தடதடெனத் தளிர்க்கைகள் தட்டுவதில் தாளங்களும்…
பொன்னி வளவன் பெண்ணே! பல்லவன் பேருந்தில் கருப்பு மை தீட்டிய உன் கயல் விழிகள் பேசிய காதல் மொழிகளில் கனநேரம் மயங்கி நின்ற நான்... பயணச்சீட்டு எடுப்பதற்காக பாக்கெட்டில் கை வைத்தவுடன் பதறிப்போனேன் பணம்…