திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020113_Issue

அரசியலும் சமூகமும்

கயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்

முடாஸர் ரிஜ்வி (இந்திய பாகிஸ்தான் எல்லையில் வாகா என்ற இடத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் சாலை மீது இந்தியப் போர்வீரர்களும் பாகிஸ்தானியப் போர்வீரர்களும் கண்காணிக்கும் சாவடி ஒன்று உள்ளது. இந்த இடத்தில் வெகுகாலம் இந்திய…

மொழிச்சிலை அமைப்பு! மொழித்தாய் வாழ்த்து!- போலித் தமிழர்கள்

சி. ஜெயபாரதன் [முன்னுரை: மேதைகளுக்குச் சிலை வைப்பது பற்றியும், மொழித்தாய் வணக்கம், மொழிச்சிலை எடுப்புப் பற்றியும் தமிழ் இணையத் தளங்களில் சில வாரங்களாக, வாக்கு வாதங்கள் வளர்ந்து வருகின்றன. 'வையகத் தமிழ் வாழ்த்துக் '…

உரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்

சுந்தர ராமசாமி தன் 'தமிழகத்தில் கல்வி : வே. வசந்தி தேவியுடன் உரையாடல் ' என்ற புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை கற்றுக்கொள்ளும் ஆற்றல்தான், மனிதனை விலங்குகளிலிருந்தும் தாவரங்களிலிருந்தும் பிரித்துக்காட்டும் முக்கியக் குணம். மனித நாகரிகத்தின்…

இந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)

மஞ்சுளா நவநீதன் ஐந்தாவது வகுப்பில் அரசுத் தேர்வு இல்லை இப்போதைக்கு ஐந்தாவத் வகுப்பில் அரசுத் தேர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. இப்போதைக்கு என்ற சொல்தான் கொஞ்சம் தடுமாற்றத்தை அளிக்கிறது.…

விநோத உணர்வுகள்

பாரி பூபாலன் தெரு முனையில் ஒரே கூட்டமாயிருந்தது. கூட நடந்து வந்த தோழனும் நானும் ஆர்வமாய் கூட்டத்தின் காரணத்தை அறிய முயன்றோம். விசாரித்துப் பார்த்தால், யாரோ ஒரு அசலூர்க்காரனை எல்லோருமாய்ச் சேர்ந்து அடித்துக் கொண்டிருப்பதாய்க்…

மெக்காவில் துருக்கிய கோட்டை இடிக்கப்பட்டதற்கு துருக்கிய அரசு பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறது.

பிபிஸி சென்ற வாரம் சவூதி அரேபிய அரசாங்கம், மெக்கா நகரத்தின் மீது இருந்த பழம்பெரும் கோட்டை ஒன்றை இடித்துத் தள்ளினார்கள். அந்த இடத்தில் வீடுகள் கட்டப்போவதாக அறிவித்தார்கள். இந்த பழம்பெரும் கோட்டை மெக்காவின் பெரிய…

மதத்தின் வழிதவறிய ஏவுகணைகள்

ரிச்சர்ட் டாக்கின்ஸ் (உலகத்தை மதத்தால் நிரப்புவது என்பது, அதுவும் ஆப்ரஹாமிய மதங்களால் நிரப்புவது ( ஆபிரகாம் யூதமதம், கிருஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் இவற்றின் ஆதி கர்த்தா - மொ பெ) என்பது தெருக்களெங்கும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ்

சி. ஜெயபாரதன், கனடா 1987 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி, 'கனடாவின் அணுவியல் விஞ்ஞானப் பிதா ' எனப் பெயர் பெற்ற, W.B. லூயிஸ், அண்டாரியோவில் உள்ள டாப் ரிவர் [Deep…

காந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏம்ஸ் (அயோவா , அமெரிக்கா) பரிசோதனைச்சாலையில் உள்ள அறிவியலாளர்கள் உலகத்தின் முதலாவது காந்த குளிர்சாதனப்பெட்டியை உருவாக்கியிருக்கிறார்கள். இது எதிர்காலத்தில் மிகவும் விலைகுறைந்ததாகவும், உபயோகிக்கும்போது குறைந்த சக்தியை உறிஞ்சுவதாகவும், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று கருதுகிறார்கள்.…

இலக்கிய கட்டுரைகள்

கொரில்லாவின் பூர்வகுடி வரலாறு -நிகழ்வும் புனைவும் குறித்து

யமுனா ராஜேந்திரன் படைப்புக்கும் படைப்பாளிக்கும் இருக்கும் உறவு தொடர்பான விஷயங்கள் நிரந்தரமாகத் தொடரும் விவாதங்களில் ஒன்றுதான். ஆசிரியன் செத்துவிட்டான் என்று முழங்குகிறவரும் கூட தனது நாவல் பற்றிய விமர்சனங்களுக்குப் பதறியடித்துக் கொண்டு விளக்கம் சொல்வதை…

பரிவும் பதற்றமும் (ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் )

பாவண்ணன் படிப்பவர்கள் மனத்தில் பெரும் வீச்சுடன் அனுபவம் விரிவு கொள்ள வாய்ப்பளிப்பவையாக உள்ளவை சிறுகதைகள். சிறுகதைகள் வழியாக வாசகன் மனத்தில் தாவி விழுவது ஒரே ஒரு பொறிதான். அப்பொறியின் ஒளியையெற்று அவனுடைய மனஉலகம் தகதகக்கத்…

கதைகள்

காற்றின் அனுமதி

வண்ணதாசன் 'அப்பா, நானும் வாக்கிங் வரட்டுமா ' - என்று தினகரி கேட்கவும் 'ஓ. எஸ் ' என்று கூட்டிக்கொண்டு புறப்பட்டாயிற்று. நடக்கிறதுக்கு என்ன காசா, பணமா. அதே சட்டை, அதே வேட்டி, அதே…

கலைகள்

கோடுபலே (வறுத்த அரிசி வளை)

கர்னாடகா சமையல் 4 பேருக்கு தேவையான பொருட்கள் 2 கோப்பை அரிசி 4 மேஜைக்கரண்டி வெண்ணெய் மெதுவான மாவுபிசைய தேவையான அளவு பால் உப்பு ருசிக்கேற்றபடி ஆழ்ந்து பொறிக்க எண்ணெய் செய்முறை 1) அரிசியைக்…

நிப்பிட்டு (அரிசி, கருப்பு உளுந்தம்பருப்பு சிப்ஸ்)

கர்னாடகா சமையல் நான்கு பேருக்கு 2 கோப்பை அரிசி 4 தேக்கரண்டி உடைத்த தோலெடுத்த கருப்பு உளுந்தம்பருப்பு 2 மேஜைக்கரண்டி வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி ஜீரகம் 8 கறி வேப்பிலை 1 மேஜைக்கரண்டி முந்திரிப்பருப்பு…

கவிதைகள்

தைமகளே! காக்க வருக,வருகவே!

(கவிமாமணி வேதம்) மார்கழிப் போதினில், நூலுக்கு முன்னுரை ..மாதிரி மாமழை கொட்டினையோ ?-தை சோர்ந்துபோய் வந்திடில் பாட்டு வராதெனச் ..சூக்கும நாட்டியம் காட்டினையோ ?-(ஒரு)- தைமகள் விண்ணில்நீ வான்மகள் கைபற்றித், ..தங்கத் தமிழிசை பாடினையோ…

இரவு வான்!

வ.ந.கிாிதரன் விாிந்து,பரந்து, இருண்டு இரவு வான் முடிவிலியாய் முடிவற்றுத் தொியும். விாியும்.புாியுமா ? பார்வைப் புலனின் புலப்படுத்துதல் இரவு வானின் இருப்பின் உண்மையையா ? இருண்டிருக்கும் இந்த வான் இயம்புவதிலேதும் இரகசியம் தானுண்டோ ?…

அடிமை விடியல்

மனஹரன், மலேசியா இன்னும் என்ன மெளனம் ? புதிய விடியலின் வருகையால் புன்னகைத்ததுபோதும் பூகம்பமாய் புறப்படப்போவது எப்போது ? உன் கரங்களுக்கா விலங்குகள்! ? அடிமைப்பண்ணைக்குள் அல்லல்பட்டது இதற்காகதானா ? அவசியம் இல்லாமல் ஆத்திரம்…

பூமியெல்லாம் பூ

அலமேலு மணி. புதுப்பானை வேகவைத்து பசுமஞ்சள் சரத்தைக்கட்டி புத்தரிசி குடத்திலிட்டு புதுப்பொங்கல் படைத்து விட்டோம். குடத்திலிட்ட குறுணி அரிசி கும்பிப்பசி தீர்த்திடணும். குனிஞ்சு நிமிந்த உழவன் கையில் செல்வமெல்லாம் கொழித்திடணும். கடலு கிழித்து மேலவந்து…

கன்னிகைத் தைக்கோர் கண்ணூறு!

பசுபதி நெய்மணம் வீசிடும் பொங்கலில் கல்லின் . . நெருடல் சுவையைக் கெடுப்பதுபோல் தைமகள் வீசும் எழில்தனில் முள்ளெனத் . . தைக்கும் குறையொன்று கண்டதுண்டோ ? (1) பொங்கலைத் தந்த தைத் திங்கள்…