இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 3

This entry is part of 18 in the series 20010513_Issue

விஜயா தேஷ்பாண்டே


சீனக் கண்மருத்துவத்தில் இந்தியப் பாதிப்பால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. சுஸ்ருதர் கண் நோய்களைப் பல வழிகளில் பிரித்தார். அதில் ஒன்று கண்ணின் உள்ளீடு பற்றியது. இது அந்தக் காலத்தில் புரட்சிகரமான ஒன்று. ஏனெனில் பிற மருத்துவங்கள் நோயின் அறிகுறிகள் கொண்டே நோயைக் கணிக்க முற்பட்டன. உடல் பாகங்களை ஆய்வதை அடிப்படையாய்க் கொண்ட பார்வை நோய்ப் பகுப்பு முறைகளில் புதிய கருத்துகளைக் கொண்டு வந்தது. மருந்துகளும் இப்போது இந்திய அறுவை சிகிச்சையும், சீன மருத்துவமும் இணைந்ததாய் இருந்தது. ‘அமாலிகா ‘ என்ற மருந்து ‘அன் மோ லே ‘ என்று அழைக்கப் பட்டது.

தங்க ஊசி கொண்டு கண்ணின் புரையை அகற்றும் முறை அற்புதம் என்று உணரப் பட்டது. அறுவை சிக்கிச்சை முறை மட்டுமல்லாமல், எந்த நேரத்தில் செய்வது நல்லது, எந்த இடத்தில் வைத்துச் செய்ய வேண்டும், அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் என்ன முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், எப்படிப் பட்டிகள் அணிய வேண்டும், உணவு என்ன உட்கொள்ளலாம், நோயாளியின் நடமாட்டம் பற்றி பல விஷயங்கள் தெரிவிக்கப் பட்டன.

ஏழாவது நூற்றாண்டிலிருந்து பதினாலாவது நூற்றாண்டு வரையில் ஒரு சில மருத்துவக் கருத்துகள் மட்டுமே வளர்ச்சி பெற்ற சீனாவில், இந்திய பாதிப்பினால் பெரிதும் மருத்துவ வளர்ச்சி பெற்றது. யுவான், மிங் , சிங் முதலிய அரச குடும்பத்தினர் ஆட்சியின் போது னல மருத்துவ நூல்கள் வெளியிடப் பட்டன.

விஞ்ஞான வளர்ச்சி என்பது எப்படி நாடுகள் தாண்டி பரவின என்பதற்கும் இந்த அறிவுப் பரிமாற்றம் சரியான உதாரணம் என்று சொல்ல வேண்டும்.

(நன்றி : எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி)

இவர் சீனத்தின் தாவோயிசம் மட்டுமல்லாமல், பெளத்தக் கோட்பாட்டிலும் தேர்ந்தவர். ‘புதிய விமல்கீர்த்தி ‘ என்ற அடைமொழி கொடுத்து இவர் அழைக்கப் பட்டார். அவர் மருந்துச் சீட்டுப் புத்தகங்கள் உடல் உறுப்புகளின் பாகங்களின் பெயர்கள், அறுவை கு வெளீவந்த பல சீன மருத்துவக் கையேடுகளில் நாகர்ஜ்உனரின் கண் மருத்துவம் குறிப்பிடப் பட்டுள்ளது. நான்கு-ஐந்து நூற்றாண்டுகளில் வெளி வந்த பல சீன ஏடுகளில் இந்திய மருத்துவம் குறிப்பிடப் பட்டுள்ளது. 752-கி பியில் கண் மருத்துவ ஏடு வெளிவந்தது. பிறகு 8-ம் நூற்றாண்டின் நடுவில் ‘போதிசஹ்ட்துவர் நாகார்ஜ்உனரின் கண் மருத்துவ நூல் ‘ வெளி வந்தது. 12-ம் நூற்றாண்டில் மீண்டும் நாகார்ஜ்உனரின் முழுமையான நூல் வெளி வந்தது.

முற்றும்

Series Navigation