வேண்டும் சரித்திரம்

This entry is part of 32 in the series 20090305_Issue

புதியமாதவிவீரவணக்கம் சொல்ல
அச்சமாக இருக்கிறது.
என்னை மன்னித்துவிடுங்கள்.

கட்சிவாரியாக தீக்குளிப்புகள்
வீரவணக்கங்கள்
கூட்டங்கள் தலைவர்கள்
வீரவசனங்கள்
அறிக்கைகள்
அறிக்கைகளுக்கு எதிர் அறிக்கைகள்
கதவடைப்புகள்
கண்டனக்கூட்டங்கள்
கவிதையின் இடிமின்னல்
போதும் போதும்..

முத்துக்குமரன்களை ஈன்ற
அன்னையின் கருவறை சத்தியமாய்
எனக்கு வேண்டும்
என் மண்ணில்
ஒரே ஒரு மண்டெலோவின்
மனித சரித்திரம்..


Series Navigation