காதல் நாற்பது (13) – காதலை அழைத்தது காதல் !

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



மார்பி லிருந்து பொங்கிப்
புருவம் வரை எழும்பும் உண்மைக் காதல்
பெருமை ஊட்டும் எனக்கு !
மகுடம் சூட்டும்
மாபெரும்
மாணிக்கக் கற்களால் !
ஆடவர் கண்களை ஈர்க்கும் !
எனது தகுதி யாவும்
உள்ளத்தின் உள்ளிருக்கும்
ஆத்ம மதிப்பை நிரூபித்துக் காட்டும்,
புற உலகுக்கு !
உன் கண்ணும் என் கண்ணும்
ஒன்றை ஒன்று
எதிர் நோக்கும் வேளை
நேசிப்பது எப்படி யென
நீ மாதிரி காட்டாமல் நான்
நேசிக்கக் கூடாது
நின்னை மனப் பூர்வமாய் !
காதலை அழைத்தது காதல் !
பதிலின்றி இனிதெனக் காதலை
வெளிப் படுத்தக் கூடாது
எனக்குரிய தென்று !
உன் ஆத்மா
வலுவின்றி மயங்கி யுள்ள
என் ஆத்மாவை
இழுத்துக் கொண்டு போய்
பொன்னா சனத்தில் வைக்கும்
உன்னருகே !
உன்னை மட்டும் நேசிக்கும் நான்
உந்தன் பக்கத்திலே !
அந்தோ ஆத்மாவே ! பணிவு
அவசியம் வேண்டும்
நமக்கு !

********************

Poem -11
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

Indeed this very love which is my boast,
And which, when rising up from breast to brow,
Doth crown me with a ruby large enow
To draw men’s eyes and prove the inner cost,–
This love even, all my worth, to the uttermost,
I should not love withal, unless that thou
Hadst set me an example, shown me how,
When first thine earnest eyes with mine were crossed,
And love called love. And thus, I cannot speak
Of love even, as a good thing of my own:
Thy soul hath snatched up mine all faint and weak,
And placed it by thee on a golden throne,
And that I love (O soul, we must be meek!)
Is by thee only, whom I love alone.

**********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 13, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா