நிலாக்காலக் கனவுகள்

This entry is part of 25 in the series 20050812_Issue

இளவழகன்


மரிக்காத உறவுகள்..
நிலவில் தலைவைத்து
அலைகளில் காலை நீட்டி..
நட்புக்காக ஏங்கித்
தவம் இருக்கும் கனவுகள்..

விண்மீன்கள்
விரகதாபத்துடன்..
மானுட வீணையின்
நரம்புகளில் மோகன இராகம்..

கெளரவத் தேவதையின்
காதலை அகற்றி வைத்துவிட்டு..
ஓரமாய் நான்
அமர்ந்து..
புற்களின் மொழியில்
முணுமுணுப்பேன்…!

என் நெஞ்சைத்தொட்ட..
அந்தப் பிஞ்சு இராகங்களை..
அவை கேட்டு
தலையசைத்தால் அது போதும்..

அந்த நிம்மதியில்
என் உயிர்..
மெல்ல மெல்ல ஆவியாகும்…!

– இளவழகன், குவைத்

elavan_asi@rediffmail.com

Series Navigation