கீதாஞ்சலி (35) இதயத்தில் உனக்கோர் இடம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part of 25 in the series 20050812_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


இந்த உலகில்
அன்புடன் அரவணைத்து என்னை
ஆதரிப்பவர்
எல்லா விதத் தூண்டிலையும் விட்டு
பாதுகாப்பாக
எனைத்தம் குழுவில் பிடித்துப் போட
முனைந்து வருகிறார்!
ஆயினும்
எந்தன் மீது ஆழ்ந்த
நேயம் கொண்டுள்ள நீ
அவர்களின்
பாசத்தை விடப்
மேலாக இருப்பதால்,
எனக்கு நீ எப்போதும்
கொடுத்தி ருக்கிறாய்
விடுதலை!

ஏகாந்தத்
தனிமையில் இருக்கும் போது,
துணிந்து வந்து
தொல்லை கொடுப்பர்,
விடுதலையுடன்
நடமாடும் எனக்கு!
ஒருபோதும்
மறக்க வில்லை நானதை!
ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்துக்
கடந்து போகிறது! ஆயினும்
உன்னைக்
காண முடிய வில்லை நான்!
உள்ளம் துதிக்கும் போது,
உன்னை நான் விளிக்கா விடினும்,
இதயத்தில் உனக்கோர்
இருக்கை நான் அளிக்கா விடினும்,
உன் பரிவு
இன்னும் காத்திருக்கும்,
என் அன்பை
வேண்டி!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 7, 2005)]

Series Navigation