‘சுனாமி ‘

This entry is part of 57 in the series 20050106_Issue

பா.ஸ்ரீராம்


உன்
மடியின் ஓரம்
வாழ்ந்த உயிர்கள்
உன்
பிடியில் சிக்கி
பிணங்களாக…

கடலுக்குள் போனவணை
காணவில்லை…
கண்ணிமைக்கும் நேரத்திலே
ஊருமில்லை…
யார் யார் எங்கே
என்றும் தெரியவில்லை…
யாருக்கும் எதுவுமே புரியவில்லை…

உறவினை எல்லாம்
அலை இழுக்க…
உயிர் மட்டும் இங்கே
தனித்திருக்க…
மனம்படும் பாட்டை
யாரறிவார் ?
படைத்தவன் ஒருவன்
தானறிவான்…

இயற்கையின் சீற்றம்
இன்று..
எங்களின் மாற்றம்..
நாளை..
வாழ்க்கையின் ஓட்டம்
தடுமாற்றம்…!!!

‘சுனாமி ‘ வந்து போனதுமே
அனாதை ஆனவர்கள்
அதிகம் பேர்…
இறைவா நீ
இருப்பது உண்மை என்றால் -இனி
பிறவா வரத்தினை அளித்திடுவாய்..
இல்லையென்றால் இப்படி
இயற்கை அழிவினை
தவிர்த்திடுவாய்….

பா.ஸ்ரீராம்
Hanil Lear
srirambalamohan@yahoo.co.in

Series Navigation