என்னுள் நீயானாய் சக்தி ஓம்

This entry is part of 32 in the series 20030710_Issue

பக்தியுடன் கோமதிநடராஜன்


மழலையின் சிாிப்பில் மலர்ந்தாய் சக்தி ஓம்
மலாின் மென்மையில் பரவினாய் சக்தி ஓம்
பாலின் வெண்மையில் படர்ந்தாய் சக்தி ஓம்
தமிழின் இனிமையில் கலந்தாய் சக்தி ஓம்
ஆதவனின் ஒளியில் பயணித்தாய் சக்தி ஓம்
நிலவின் குளிர்ச்சியில் குடியேறினாய் சக்தி ஓம்
வெற்றிக்கு வழி காட்டினாய் சக்தி ஓம்
பற்றுக்கு வேலி கட்டினாய் சக்தி ஓம்
பாடலுக்கு ராகமாய் இணைந்தாய் சக்தி ஓம்
ஆடலுக்கு ஜதியாய் சேர்ந்தாய் சக்தி ஓம்
விரலுக்குள் கோலாய் நின்றாய் சக்தி ஓம்
ஏட்டில் எழுத்தாய் வடிந்தாய் சக்தி ஓம்
எழுத்தில் அர்த்தமாய் இணைந்தாய் சக்தி ஓம்
ஆழ்கடல் முத்துக்கு ஒளியானாய் சக்தி ஓம்
ஏழ்கடல் அலைகளில் வீற்றிருப்பாய் சக்தி ஓம்
இதயத்து மணையில் இருப்பாய் சக்தி ஓம்
இமயத்துப் பனியில் கலந்தாய் சக்தி ஓம்
கள்ளமில்லா உள்ளத்தில் கலந்திடுவாய் சக்தி ஓம்
பழுதற்ற எண்ணத்தில் இடம் பிடிப்பாய் சக்தி ஓம்
நாவில் தேனாய் இனித்தாய் சக்தி ஓம்
கண்ணில் ஒளியாய் மிளிர்ந்தாய் சக்தி ஓம்
இதயத்தில் ஜீவனாய் திகழ்ந்தாய் சக்தி ஓம்
மெய்யில் உயிராய் ஒன்றினாய் சக்தி ஓம்
அகத்தில் அழகாய் அமர்ந்தாய் சக்தி ஓம்
என்னுள் நீயானாய் சக்தி ஓம்
என்றென்றும் காத்திடுவாய் சக்தி ஓம்
ஐயம் மறைந்தது சக்தி ஓம்
அன்புடன் அரவணைப்பாய் சக்தி ஓம்
பயம் அகன்றது சக்தி ஓம்
பத்திரமாய் பார்த்துக் கொள்வாய் சக்தி ஓம்
சகலமும் நீயென அறிந்தேன் சக்தி ஓம்
ஆயுளுக்கும் அருகிலிருப்பாய் சக்தி ஓம்

ngomathi@rediffmail.co

Series Navigation