பைத்தியக்காரி

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


வாழ்க்கையென்பது முகாரியல்ல பூபாளம்
வாழ்ந்துபார் புரியும்

எண்ண சிசுக்களுக்குக் கள்ளிப்பால்!
இதயத்தைப் பிழிந்து.. ஒப்பாரி!
பைத்தியக்காரி!
நரிக்கதையின் ஞானம் வேண்டும்
இலவு காத்த கிளிக்கதைகளெதற்கு ?

மனதிற் பகலைக் கொண்டுவா! – சிரி
உனக்குள் சூரியன் உதித்திடும்

அகலிகை, சகுந்தலை அந்தப்புரங்களில்
இந்திரனும் துஷ்யந்தனும்
இருந்தே தொலைப்பார்கள்
எரிக்கப்பட வேண்டிவர்கள்
கோவலர்களன்றி மதுரைகளல்ல

கலியுகச் சீதைகளுக்குக் கவனம்தேவை!
நிலம் பார்த்துச் சூடும் மாலைகளால்
அனேக சுயம்வரங்களில் ஆட்பிழை
தவறுதலாக தசரத புருஷர்கள்.

அழுதுத்
துர்த்தேவதையாய் கர்ஜிப்பதைவிட
ஆனந்தித்து
அம்பிகையாய் தமிழ்ப் பாலித்திடு

நம்பிக்கைக்கு ஞானஸ்நானம் செய்
அதுதான் வாழ்க்கை!

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா