உருவமற்ற நிழல்கள்.

This entry is part of 30 in the series 20020512_Issue

எஸ். வைதேஹி.


உடல் முழுதும் அனல்
தலை பரவும் குருதி
நிஜம் மறுத்து
எனை பிரியும்
நிழல்கள்.

ரோட்டோர பாதை மடிப்பில்
வெய்யில் தொங்க
க்ஷமை மூடிய பிச்சைகாரனின்
என் காலடி படா நிழல்கள்

அம்மா சிரித்து பேசி
ஊஞ்சல் ஆடிய நினவின்
நடுவில்
கால் விரித்து முகம்
மலர்ந்த தூசியான நிழல்கள்

ரசம் அற்ற கண்ணாடி முன்
ஒட்டடை முகங்களின்
ஞாபகங்கள் மறந்து
பிரிந்து கூடி
கதறி அழும்
நம் நிழல்கள்.

************************* ********************* ******************

Series Navigation