திண்ணையும், திராவிடியத்தின் சீரழிவும், மஞ்சுளாவும், மஞசள் காவியும்

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

லியோன்


இங்கே நான் படித்த பிற்போக்கு கருத்தியலை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் கட்டுரைகளுக்கான

எனது எதிர்க் கருத்தை குறிப்பிட அனுமதியுங்கள்.

அன்று ஒரு சிறு அமைப்புகளாக இருந்த, விஸ்வ இந்து பரிசத் மற்றும் விஜேபி, ஆர் எஸ எஸ் ஆகியவை இன்று மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் அளவில் எப்படிப் பலம்பெற்றன ? அல்லது, ஒற்றைக் கட்சியாக ஆட்சி நடத்திவந்த காரங்கிரஸ் மதிப்பிழந்துபோனதுடன்,ஏன் சிதறுண்டுபோனது ? இந்த மாற்றங்கள் ஒரு அகவய காரணிகளின் வெளிப்பாடா ? அதாவது, இன்று இந்தியாவில் 50 வருடங்களின் பின்னர் நடந்தேறிய சம்பவங்களின் மூலங்கள் தனிமனிதர்களின் அல்லது தலைவர்களின் பிழையான/சரியான கொள்கைகளால் ஏற்பட்ட தோல்வியும்,வெற்றியுமா ? அப்படியானால் இந்துத்துவ விஜேபி மற்றும் ஏனைய தீவிர வலதுசாரி பாசிச அமைப்புகளின் திடார் வளர்ச்சியின் மூலங்கள் என்ன ? இந்த இயக்கங்கள் யாரை, எதைப் பிரதிநித்துவப்படுத்துகின்றன ?

ஓசோமா மற்றும் தலீபான் ஆட்சியாளர்களுக்கும்,5000 இக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை அநாகரீகமான முறையில் கொன்ற ஓசோமா பின்லாடனின் பயங்கரவாதச் செயல்களுக்கும் அவரது மத அடிப்படைவாத மற்றும் மத்தியகாலத்திற்கு முந்திய காட்டுமிராண்டித் தனத்தை நடைமுறைக்கிட இருக்கும் கொள்கைகளுக்கும், இந்துத்துவ ஆர் எஸ் எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிசத்துக்கும்,பயங்கரவாதிகள் விமானத்தின் மூலம் தாக்குதல் ஒன்றை செய்விருக்கிறார்கள் என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததும், 5000 அப்பாவி மக்களை நனவானமுறையில் அந்த தாக்குதலுக்கு பலிகொடுத்துவிட்டு, உலகின் ஏழ்மையான நாட்டின் மீதும் அப்பாவி மக்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை செய்யும் அமெரிக்க அதி வலதுசாரி குடியரசுவாத தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் இடையிலான வித்தியாசங்கள் என்ன ?

இவர்களுக்கிடையிலான வித்தியாசம் என்பது மூன்று வித்தியாசமான பிற்போக்கு சமூக பின்னணியையும் கொண்டிருப்பது தான். ஆனால் அனைவரும் ஒரே தராசில் நிறுத்தப்படக்கூடியவர்களே ஆம்,அவர்கள் மனித சமூகத்திற்கு எதிரான,ஆபத்தான பிற்போக்கு கருத்தியலை கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல மொத்தத்தில் மனித சமூகத்தின் அபிவிருத்திக்கு எதிராக எழுந்துகொண்டிருக்கும் இலாபவெறிபிடித்த பெரும் முதளைகளின் மற்றும் தீவிர பிற்போக்கு ஒடுக்குமுறை ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளே இவர்கள் அனைவரும் என்பதாகவே பதில் இருக்கும்.

இன்றைக்கு இந்தியாவின், உலகப் பொருளாதார மற்றும் மக்கள் வாழ்க்கை தரம் மற்றும் சமூக துருவப்படுத்தல் எந்த மட்டத்தில் இருக்கிறது ? இதை ஒருவர் சிரத்தையாக விளங்கிக்கொள்ள முனைவாரானால், இன்றைய பெரும் பயங்கரச் செயல்களின் மூலங்களை புரிந்துகொள்வது இலகுவானதாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

தீவிர வலதுசாரிகளால் இன்று வழிநடத்தப்படும் ஜனநாயக விரோத அமெரிக்க ஏகாதிபத்திய அரசு இன்று உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கும், வெளியில் ‘பயங்கரவாதத்தின் மீதான யுத்தம் ‘ என்ற பெயரின் கீழ் கொடூரமான இராணுவ வாதத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பதற்கும் நேரடித்தொடர்பில்லையா ? ஏன் அமெரிக்கா மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவிலும் தனது இராணுவத்தை பலப்படுத்தி வருகிறது ? அத்துடன் ஏன் அது உலகின் ஒரு ஏழை நாட்டின் மீது முடிவுபெறாத யுத்தத்தை தொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கு ஒருவர் பட்டப்படிப்பை முடிக்கவேண்டும் என்பது அவசிமில்லை.(உண்மையில், நான் இன்னும் அதை முடிக்கவில்லை) அமெரிக்காவின் யுத்த முன்னெடுப்புகள் பூகோள மூலவளங்களுக்கும்,சந்தைகளுக்குமான போட்டியின் உச்சமாக இருக்கிறது என்பதை யாரும் நிராகரிக்க முடியுமா ?

இப்போது பிரச்சனைக்கு வருவோம்,இந்தியத் துணைக்கண்டத்தில்-பாகிஸ்தான் உள்ளடங்கலாக- 80 வீதத்திற்கு மேலான பரந்துபட்ட உழைக்கும் மக்கள் முகம் கொடுக்கும் நிலைமை என்ன ? ஆம், வாழ்வா, சாவா என்ற போராட்டத்திற்கு அன்றாடம் முகம் கொடுத்துவருகிறார்கள் ? அந்தப்போராட்டம் தான் என்ன ? முஸ்லீம் இந்து, தலித் என்ற அவர்களின் அடையாளங்களை பாதுகாப்பதற்கான இரத்தவெறிப்போராட்டமா ? புத்திஜீவிகளே, உங்கள் ஆன்மாக்களை திறந்து அதற்குள் நேருவின் அல்லது தாகூரின் புத்திஜீவித நேர்மை அல்லது மனிதமாவது இருக்கிறதா என பரிசோதித்துப்பாருங்கள்… பெரியார் என்றும் திராவிடம் என்றும்,தலித்தியம் என்றும் பம்மாத்து பேசிப் பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பதை விட வேற உருப்படியான எந்த ஆக்கங்களையோ, புத்திஜீவித பணிகளையோ செய்வதாக தெரியவில்லை. இந்தியத் துணைக்கண்ட மக்கள் முகம் கொடுக்கும் உண்மையான பிரச்சனை என்ன ? அது எப்போதாவது தீர்க்கப்பட்டதா ?

பசி,பட்டினி,நோய்,பிணி,தற்கொலை,வறுமை,கொலைகள்,வேலையின்மை தான் இன்றைய பரந்துபட்ட மக்களின் அன்றாட நிலைமையாகும். பாகிஸ்தானிய மற்றும் இந்திய பணக்கார வர்க்கம் முகம் கொடுக்கும் உயிராபத்தான பிரச்சனை இதுதான்…அவர்களின் நலன்களின் முக்கிய எதிரிகளாக அவர்கள் கருதுவது முழுச் செல்வத்தில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஏழை உழைக்கும் மக்களே. இவர்களை இன,மதரீதியில் துண்டாடுவதன் ஊடாக மட்டுமே தமது நலன்களை பாதுகாக்க முடியும் என்பதை இட்டு அவர்கள் (இந்து மற்றும் முஸ லீம் முதலாளித்துவம்) நனவாகவே அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள்.

சோவினிச விஜேபிக்கு இந்தக் கலவரத்தை தூண்டியதில் மபெரும் பங்குண்டு,அது இன்று ஆட்சிக்கு வந்து செய்தவைகளை பட்டியல் இட்டால், உழைக்கும் பரந்துபட்ட அப்பாவி மக்களின் வாழ்வின் சீரழிவின் எண்ணிக்கை கூடியிருப்பதை ஒருவர் காணும் அதே நேரம், மற்ற பக்கத்தில் இந்திய, வெளிநாட்டு முதலீட்டாளர்களின்,பெரும் தொழிற்துறை முதலாளிகளின் பைகளும் வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதையும் ஒருவர் காணலாம்.

இந்தக் கலவரம் நடந்துகொண்டிருந்த போதுதான், 2002-03 இன் பெரும் தொழிற்துறை முதலாளிகளின் நலன்களை பாதுகாக்கும் வரவுசெலவுத்திட்ட-பட்ஜெட்- அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவைகளெல்லாம் எதை அறிவுறுத்துகின்றன ? இதற்கும் இன,மத பிரிவினைகளையும், கலவரங்களையும் தூண்டிவிடுவதற்கும் எதுவித தொடர்பும் இல்லையா ? விஜேபி அரசாங்கத்தின் புதியபொருளாதார கொள்கைகளுக்கும், புதிய பிரிவினைவாத கலவரங்களுக்கும், கொலைகளுக்கும், அதனது ஜனநாயக விரோத தாக்குதல்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லையா ? இவையும் எழுப்பி ஆராய வேண்டிய கேள்விகளே. ‘ ‘அப படியே முஸ லீம கள செய திருந தாலும , முஸ லீம கள செய யவில லை, இந துக களே தூண டினார கள என று பேசவும எழுதவும பெரிய படையே இந தியாவில இருக கிறது. இது இன னும கோபத தைக கொழுந துவிட டு எரியவிடும . அட டகாசமான திட டம . ‘ ‘ ‘ ‘இதைப புரிந து கொண டு முதலில கலவரத தை நிறுத தப போவது விஷ வ இந து பரிசத துதான . பழிக குப பழி வெறிகொண டு அலையும குஜராத தின இந துக களும முஸ லீம களும அடுத தது நிறுத துவார கள . ஆனால இந தியப பத திரிக கையாளர களும , காங கிரஸ இடதுசாரிகளும நிறுத தப போவதில லை. ‘ ‘ என எழுதும மஞ சுளா,மஞ சள காவிக கு வக காலத து வாங குகிறாரா ? இந துத துவ வெறியர கள நிறுத திவிடுவார களாம ஆனால , அதன பின னர தான ‘பழிக குப பழி வெறிகொண டு அலையும குஜராத தின இந துக களும முஸ லீம களும ‘ நிறுத துவார கள என ற பிற்போக்கு வாதங்கள் மிக ஆபத்தானவை மட்டுமல்ல,ஜனநாயக விரோத பண்பையும் கொண்டிருக்கின்றன. உண்மையை ஆராயமால் இப்படி குறுக்கிக்கொள்வது எவ்வளவு இலகுவானது அல்லது எளிமையான சூத்திரம் பாருங்கள். அத்துடன் அது உண்மையை மறைப்பதுமாகவும் இருக்கிறது. சாதரண மக்கள் தான் மதவெறியர்கள் ஆனால் அதை அடிப்படையாக கொண்டு இயங்கும் அந்த பாசிச வடிவிலான இயக்கம் கருணை வாய்ந்தாம் என இவர் வாதிடுகிறாரா ? ஆம். இந்த வாதம் எவ்வளவு மோசடியானதும், நேர்மையற்றது என்பதையும் மேலும் பார்ப்போம்.

உண்மையில் சோவினிச விஜேபி தனது அரசில் இலாபங்களுக்காகவே கலவரத்தை தூண்டியதுடன் பாகிஸ்த்தான் தான் இதை செய்திருக்கிறது என சாட்டுசொன்னதன் மூலம் பாகிஸ்தான் மீதான எதிர்ப்பிற்கு எண்ணை ஊற்றும் அதேநேரம், இதற்கான தனது பொறுப்பை மறைத்துவிடப்பார்க்கிறது என்பது தான் இன்றைய நெருக்கடி நிலைமை அறிவுறுத்துகிறது மட்டுமல்ல உண்மையும் கூட. குஜராத் மாநில முதலைமைச்சர் வெளிப்படயாகவே முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்களை தூண்டுவதற்கான கருத்துப்பட பேசினார் என்பது உலகறிந்த விடயம்.

‘ ‘நீ பண ணிய கொலை வெறும எதிர வினை தான என று சப பைக கட டுக கட டி இன னமும அவனை கொலைகளுக குத தூண டி விடுவது : இதுதான யெச சுரி, ராஜ துரை மற றும இடது சாரி என று சொல லிக கொள பவர களின போக காய இருக கிறது. ‘ ‘ என பயங்கரவாததாக்குதலை நியாப்படுத்திய அவர்கள் போக்கை விமர்சித்து இருந்தீர்கள். ‘மார்க்சிஸ்ட்டுகள்,கம்யூனிஸ்ட்டுகள் ‘ என நீங்கள் குறிப்பிடும் இந்த ஸ்ராலினிஸ்டுகளும் ஏனைய குட்டிமுதலாளித்துவ இடதுகளும் அப்பாவி மக்கள் மீது நடத்திய காட்டுமிராண்டி பயங்கரவாத தாக்குதலினை வரவேற்றபோது பரந்துபட்ட மக்கள் மீது அக்கறையுள்ள நபர் போல் பாசாங்குடன் துள்ளிக்குதித்து விமர்சிக்கும் நீங்கள் ஆப்கான் அப்பாவி மக்கள் மீதான அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் காட்டுமிராண்டித்தனமான யுத்தத்தை இட்டும் எதுவுமே குறிப்பிடவில்லை. ஆக இதில் இருந்து என்ன தெரிகிறது, ராஜதுரை போன்றவர்களினை விட இன்னொரு கொடூரமான பலம்வாயந்த பிற்போக்கு முகாமில் நீங்களும் இருப்பதைதான் இது அம்பலப்படுத்துகிறது. இதுவரையும் ஒரு ஏழைநாட்டின் மீது ஒரு பலம் வாய்ந்த வல்லாதிக்க சக்திகள் நடாத்தும் யுத்தத்தை இட்டு எந்த ஒரு நேர்மையான கட்டுரைகளையும் நீங்கள் எழுதவுமில்லை,பிரசுரிக்கவும் இல்லை. ஆனால் இந்துத்து வானரங்களின் தாக்குதல் நடந்தவுடன் உடனடியாக அவர்களை பாதுகாக்க ஆயரானதுடன்,வெளிப்படையான முறையில் எந்த நேர்மையான பார்வையும் அற்று அவர்களை பேண முனைகிறீர்கள். உண்மையில் ராஜதுரை போன்ற மோசமான முறையில் சீரழிந்துபோன ஸ்ராலினிச புத்திஜீவிகள் அப்படி குறிப்பிட்டுவிட்டு, இன்னும் பல பயங்கரவாத கொலைகளை செய்யும்படி தூண்டினார்களா என்பது இன்னும் வெளிப்படையாகவிட்டாலும் இதோ, ‘குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி முஸ்லிம் விரோத வன்முறையைப் பகிரங்கமாக ஆதரித்ததுடன், ‘ஒவ்வொரு வினைக்கும் சமமான மற்றும் எதிரான வினை உண்டு ‘ என்று குறிப்பிட்டுக்கொண்டு அப்பாவி முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலை பற்றி குறிப்பிடுகையில், ‘ஆழமான ஆத்திரமூட்டலின் கீழ் தனிச்சிறப்பு மிக்க வகையில் கட்டுப்படுத்தலுக்காக ‘ இந்துத்துவவாதிகளை பாராட்டுகிறார். அதே நேரம் இந்த மதக் கலவரங்களால் பாகிஸ்தானுக்கு எதிரான யுத்த முனைப்பில் சர்வதேச ஆதரவை இழந்துவிடுவோமா என்ற பயமும் ஆட்சி செய்யும் சோவினிஸ்டுகள் மத்தியில் இருந்துகொண்டிருக்கிறது. என குறிப்பிடுகிறது ஒரு இணைய சோசலிச சஞ்சிகை.

எது எப்படியிருந்தபோதும் இதோ, வலதுசாரி நிலைப்பாட்டில் இருந்து நீங்கள் ராஜதுரை போன்றவர்களை தாக்கும் உங்கள் எச்சில் காய முதல் இந்துத்துவ வானரங்கள், ‘ஒவ்வொரு வினைக்கும் சமமான மற்றும் எதிரான வினை உண்டு ‘ என வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு காட்டுமிராண்டித்தனமான கலவரங்களை தூண்டிவிடும் காரணகர்த்தாக்களா இருக்கிறார்கள், பாருங்கள். எவ்வித நேர்மையான விமர்சனப் பார்வையும் அற்று வெளிப்படையாக இந்துத்துவ வானரங்களின் செயல்களை பாதுகாக்கும் அளவுக்கு செல்வதன் மூலம் நீங்கள் எதையும் சாதிக்கவில்லை மாறாக ராஜதுரை போன்றவர்களை விட மோசமான சீரழிவுக்கு சென்றதைத்தான் உங்கள் சொந்த நேர்மையற்ற வழியில் அம்பலப்படுத்துகிறீர்கள்.

உங்கள் எல்லோருக்கும் சிறு வேண்டுகோள், உங்கள் தனிமனித காழ்ப்புகளுக்காக அல்லது வேறு அமைப்பு,கட்சி அல்லது அதுசார்ந்த மனிதர்கள் மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக குறைந்தபட்சம் உங்கள் புத்திஜீவித நேர்மையை விற்றுவிடாதீர்கள். இது, இன்று உலகெங்கும் அரிதாகவே இருக்கிறது. புறநிலையாக ஒரு பிரச்சனையை அணுகுவதும்,ஆராய்வதும் பரந்துபட்ட உழைக்கும், ஏழை மக்களின் நலன்களின் இருந்து அரசியல் பிரச்சனைகளை அணுகுவதும் இன்று அற்றுப்போய்விட்டன. இன்னொரு கட்டுரையில் ‘ ‘அமெரிக காவிற கு எதிர ப பு என பதை அவர கள மூளையிலேயே வைத துத தைத துக கொண டுவிட ட கம யூனிஸ டுகளுக கு இப போதும அதே நிலைபாடு தான . ‘ என எழுதியிருந்தீர்கள். அத்துடன் ஒரு முக்கிய புள்ளி, நீங்கள் கம்யூனிஸ்ட்டுகள் என அடிக்கடி அழைத்து நொந்துகொள்ளும் இந்த ஸ்ராலினிஸ ட்டுகள் ரஷ்ய புரட்சிக்கு எதிராக வரலாற்றில் தோன்றியிருக்கவில்லையென்றால், இன்று இந்த நாற்றம் எடுக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்க மாட்டோம். உண்மையில்,உங்கள் எஜமான்களையும்,எஜமான்களின் எஜமான்களையும் காப்பாற்றி கரைசேர்த்தது இந்த ஸ்ராலினிஸ்ட்டுகளே. உலக ஏகாதிபத்திய அமைப்பும், இன்றைய பின்தங்கிய முதலாளித்துவ தேசங்களும் இன்றுவரை உயிர்தப்பி இருப்பதற்கான ஒரே காரணம், ‘மார்க்சிஸ்ட்டுகள்,கம்யூனிஸ்ட்டுகள் ‘ என நீங்கள் அடிக்கடி குறிப்பிடுட்டுத் தாக்கும் ஸ்ராலினிஸ்ட்டுகளே என்பதை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர்கள் உலகத்தின் உழைக்கும் மக்களின் போராட்டங்களை காட்டிகொடுத்து உங்கள் எஜமான்களை காப்பாற்றிய நன்றியுள்ள நாய்கள். உங்களுக்கு தெரியாது அவர்களின் மகத்துவம் ஆனால் உங்கள் எஜமான்களுக்கு தெரியும். ஸ்ராலினிசமும், ஸ்ராலினிஸ ட்டுகளும் மனித வரலாற்றின் அபிவிருத்தியை தடைசெய்த மாபெரும் குற்றவியல் பாத்திரத்தினை உலகெங்கும் வகித்துள்ளனர். இந்த வரலாறு உங்களுக்கு தெரியாது என நான் கருதவில்லை. இந்த வரலாறு உங்களுக்கு தெரிந்தும் இன்று இவர்களை ‘மார்க்சிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட் ‘ என தாக்குவது அந்த வார்த்தை மீதிருக்கும் வெறுப்பினாலே என்பது சொல்லத்தேவையில்லை.அத்துடன் ‘இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி ‘ சார்ந்தவர்களை நீங்கள் ‘மார்க்சிஸ்ட்,கம்யூனிஸ்ட் ‘ என அழைக்க வேண்டிய அவசியமே இல்லை,ஸ்ராலினிஸ்ட் என்பதே உண்மையானது. நீங்கள் இவர்கள் மீது தாக்குவது பரந்துபட்ட உழைக்கும் மக்களின் நலன்களின் அக்கறையின் பேரில் இருந்தல்ல என்பது மிகத்தெளிவானது. அது மிக வலதுசாரி நிலைப்பாட்டில் இருந்தாகும்.

சரி குறைந்தபட்டசம்,அன்று ஸ்ராலினிஸ்ட்டுகளுக்கு இல்லாதிருந்த, நேருவுக்கு இருந்த தாராளவாத புத்திஜீவித நேர்மையையாவது நீங்கள் கொண்டிருக்க வேண்டாமா ? நீங்கள் எழுந்து வந்த சமூக, கலாச்சாரத்தின் பின்னணி என்ன ? ‘ ‘ஸ்ராலினிச,மாவொயிச, தலித் மற்றும் பார்ப்பனிச சார்பும், எதிர்ப்பும், பெரியாரிசமும், திராவிடமும் ‘ ‘ தானா ? அவை இப்படியான வெறும் வார்த்தயாடிகளையும், வரலாற்றறிவற்ற குறுகிய பார்வை கொண்ட நபர்களை உருவாக்கியதைத் தவிர குறைந்த பட்சம் புத்திஜீவித கலாச்சார வளர்ச்சிக்கும், அறிவுஜீவிதத்திற்கு என்ன பங்களிப்பை செய்தன ? எதுவுமேயில்லை. அதற்கு ஒரு சிறந்த சாட்சியம் தான் நீங்கள்(என்பது இன்று உயிர் வாழும் அனைத்துவித போக்குளின் பிரதிநிகள்). இப்போது ஒருவர் குறிப்பிட முனையலாம்,பெரியாரிசம்(இந்த இயக்கத்தின் தன்மை பற்றி பின்னர் குறிப்பிடுகிறேன்) என்பது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய, கிளர்ச்சி பண்ணிய சீர்திருத்தவாத,நாத்தீக இயக்கம் என. என்றாலும் என்ன, உண்மையைச் சொன்னால்,ஸ்ராலினிசத்தின் உருவாக்கமும், நேருவின் சோசலிசமும் அன்றைய நிலைமைக்கு முன்னரே பிற்போக்கான மற்றும் காலவதியான ஒன்றாகிவிட்டபோது, இவை எம்மாத்திரம். நேருவை நான் மதிப்பது அவரது முதலாளித்து அரசியல் கொள்கைகளுக்காக அல்ல மாறாக அன்று அவருக்கிருந்த புத்திஜீவித நேர்மைக்காகவே.

இந்துத்துவம் என்பது ஒரு கற்பிதம் அல்லது வரலாற்றின் இன்று இருப்பதுபோல் ஒரு பெரிய தனித்த மதமாக எப்போதும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மை. அது பல கிளைகளாகவும், கிரக வழிபாட்டு முறைகளாவுமே இருந்துவந்துடன் மேற்கத்தைய மத ஆளுமைகளுக்கு முகம் கொடுத்த பின்னர் தான் இந்துத்துவ தத்துவஞானிகள் விழித்துக்கொண்டதுடன் வித்தியாசமான விக்கிரக வழிபாடுகளையும் ஒன்றாக்கி அனைத்தும் ஒரே மதம்தான் என்ற கருத்துப்பாட்டை உருவாக்கினார்கள். உதாரணமாக, தமிழர்கள் முருக வழிபாட்டினை மட்டுமே ஆதியில் கடைப்பிடித்தார்கள் என்ற உண்மையின் எச்சங்களை நாம் இன்றும் ஆங்காங்கே காணலாம். இந்தியாவில் இப்படி ஒவ்வொரு மக்கள் கூட்டமும் ஒவ்வொரு விக்கிரங்களையும், தேவதைகளையும், தத்துவஞானிகளையும் வழிபட்டு வந்திருக்கின்றனர். அது இன்று இருப்பது மாதிரி ஒரே மதம் என்ற வடிவத்தில் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். இதற்கு பலசான்றுகளே உண்டு. ‘இதுதான இடதுசாரிகளும , பாகிஸ தான அரசாங கமும , ஜவஹர லால நேருபல கலைக கழகத தாரும , நேரு வழி வரலாற றாசிரியர களான கேஎன பணிக கர , ரோமிலா தாப பர போன றோரும தொடர ந து பேசிவரும வாசகம . ‘ என குறிப பிட டிருந தீர கள . இதை ஏன் நீங்கள் மறுக்கிறீர்கள் ? ‘ ‘இந்துக்களின் ஜென்ம பூமியான இந்தியாவின் வரலாற்றை பொய்மைப்படுத்தியவர்கள் ‘ ‘ என இந்துத்துவ வெறியர்கள் தாக்கியதை ஒத்த முறையில் நீங்கள் நேரு பல்கலைகழகத்தின் நேர்மையான பேராசிரியர்களையும்,புத்திஜீவிகளையும் தாக்குகிறீர்கள் ? ஏன் ? அவர்கள் தமது புத்திஜீவிதத்தில் நேர்மையாக இருந்தார்கள் என்பதற்காகவா அல்லது குறிப்பிட்ட மட்டத்தில் தாராளவாத இடது சாரி புத்திஜீவிகளாக இருக்கிறார்கள் என்பதற்காகவா ? அவர்கள், ஆர்.எஸ்.எஸ் இக்கும் கிட்லருக்கும் இருந்த தொடர்பினை ‘சுதந்திரத்தை நோக்கி ‘ என்ற புத்தகத்தில் நிரூபித்ததாலா ?

இவர்களின் புறநிலை உண்மையை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று பார்வையை தாக்குவது அவர்கள் மீதான உங்கள் வெறுப்பு எதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை. விஸ்வ இந்து பரிசத் மற்றும் ஆர் எஸ் எஸ் இன் போன்ற இந்துத்துவ பாசிச இயக்கங்களின் கூற்றுக்களையே உங்கள் எழுத்துக்களின் உள்ளடக்கம் கோடிட்டு காட்டுகின்றன.

இந்து போன்ற தாராளவாத பத்திரிக்கைகளின் கூற்றினை மறுத்து, ‘ ‘இந்திய தந்தை ‘ ‘ என அழைக்கப்படும் காந்தியைக்கொன்றதும், இன்று பாரிய இரத்தக்களரியை சிருஷ்டிக்க இந்திய துணைக்கண்டத்தினை பயங்கரப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த அமைப்பிற்கு சார்பான நபர்களின்,சோவினிச விஜேபி அரசின் அதிகாரிகளின்,முன்னணித் தலைவர்களின் கூற்றினை நம்பும் உங்கள் அறிவும் நேர்மையும் எப்படிப் பட்டதாக இருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இந்தியாவின் பழமைவாத பிற்போக்கு அரசியல் கலாச்சாரத்தின் எச்சசொச்சங்களை ஞாபகப்படுத்துவதாகவும், அதற்கு ஆதரவு அளிப்பதாகவும் உங்கள் கூற்றுக்கள் இருக்கவில்லையா ?

‘ ‘இந்த இயக்கங்களை தடை செய்யவேண்டும் ‘ ‘ என எழுதியவர்களை நேர்மையான புத்திஜீவிபோல் பாசாங்குடன் தாக்குகிறீர்கள் ஆனால் இன்று நீங்கள் வழிமொழிந்த குறிப்பிட்ட இந்த நபர்களும், பத்திரிக்கையும் அன்று ஒரு பட இயக்குனரின் அடிப்படை ஜனநாயக உரிமையை இந்த பாசிச இயக்கங்களுடன் இணைந்து தாக்கியபோது ஏன் அதுபற்றி எதுவுமே எழுதவில்லை ? இந்தப்பத்திரிக்கை அவரின் மீது ஒரு பொய்யான அவதூற்றை எழுதியபோதும், இழிவான முறையில் அவரின் சிரத்தையான படைப்பின் உள்ளடக்கத்தை அவமதித்து அவரின் கலைத்துவ சுதந்திரத்தை தாக்கியபோதும் எங்கே போனது உங்கள் புத்திஜீவித நேர்மைகள் ?

ஓசோமோ பின்லாடனின் அல்கட்டா இயக்கத்திற்கும், ‘ ‘இடது சாரிகள் ‘ ‘ எனக் நீங்கள் கூறுபவர்களை தாக்குவதன் மூலம் மறைமுகமாக நீங்கள் பேண முயலும், விஸ்வ இந்து பரிசத் மற்றும் ஆர் எஸ் எஸ் இக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இவர்களின் தத்துவம்தான் என்ன ? 3000 வருடங்களுக்கு முன்னரான காட்டுமிராண்டி வேதகாலத்தை மீட்பிப்பதும்,வரலாற்றை திரித்து இந்தியா என்பது இந்துக்களின் பூர்வீக பூமி எனக்கூறி ஏனைய சிறுபான்மை மக்களினை ஒடுக்குவதும்,கொன்றொழிப்பதும், தம் வர்ணாஸ்த்திர முறையை மீண்டும் இறுக்கமாக நிறுவுவதும், இந்தியாவின் பெரும் தொழிற்துறை முதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதுமாகும், ‘பின் லேடனின் தத்துவார்த்தமானது பின்நோக்கிச்செல்லும் மதவாத நோக்கத்தையும், இஸ்லாம் தொடர்பான அவரது பார்வையினை அடித்தளமாக்கொண்ட ஒரு மத்திய காலத்திற்குரிய மதவாத அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டதாகும். ‘ அவர்களுக்கு அன்றைய அமெரிக்க அரசாங்கத்தின் ஆயுத உதவிகள், பூகோள மற்றும் புறநிலை நிலைமைகள் சாதகங்களை வழங்கியதால் தங்கள் வெறியாட்டங்களை ஆடவும், இறுதியாய் தங்கள் எஜமானான அமெரிக்காவை பழிவாங்கவேண்டும் என்று திரும்பியதில் தங்கள் கோரமுகங்களை ஈன இரக்கமற்ற முறையில் அப்பாவி அமெரிக்க மக்கள் மீது காட்டினார்கள் ஆனால் வேதகாலத்தை கொண்டுவர கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் சாதகங்கள் முற்றாக திறக்கப்படவில்லை அவ்வளவுதான். கருணாநிதி ஒருதடவை குறிப்பிட்டதுபோல், ‘ ‘இவர்கள் இந்துக் கலாச்சார இயக்கம் ‘ ‘ அல்ல பாசிச இயக்கம். ஆனால் இவர்களுக்கு சாதங்கள் திறக்கப்பட்டால் அல்கட்டாவினை விட மிக கோரமானவர்களாய் இருப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே, அதற்கு சாட்சியமே பாபர் மசூதிக்குப்பின்னரான கலவரங்களும் அவர்கள் செய்த கொலைகளும், இன்றைய குஜராத்தில் ஏற்பட்ட கலவரங்களுமாகும்,கொலைகளுமாகும். கிட்டதட்ட சோவினிச வடிவத்தினை ஞாபகப்படுத்தும் பெரியாரிசத்தின்,திராவிடத்தின் காலவதியான பிற்போக்கு கருத்தியல்களின் நேர்மையற்ற சீரழிவினையும் அதை அணைத்துக்கொண்டு போலி நாத்தீகனாக நடித்துவந்த திராவிட இயக்கத்தின் முன்னணி நபரான கருணாநிதியின் கேவலமான புத்திஜீவித சீரழிவினையும் குறிப்பிடவும், கருணாநிதியினை விட அன்று நேரு எவ்வளவு நேர்மையாக இருந்தார் என்பதை குறிப்பிடவும் அனுமதியுங்கள். உண்மையில் கருணாநிதியை விட நேரு மிகப் பெரும் செல்வந்தராக இருந்துடன், உலகப்புகழ்பெற்ற புத்திஜீவியாகவும் இருந்தார். அன்று ஒரு தடவை அவர் இத்தியாலிக்கு பயணம் செய்திருந்தார் அப்போது,முஸ்சோலினை அவரை சந்திக்க விரும்பியபோது,நேரு மறுத்துவிட்டிருந்ததுடன், ஜனநாயக விரோத மற்றும் மனிதமற்ற அவரது பாசிச போக்குகளை வன்மையாக கண்டித்தார். அவரது முதலாளித்து அரசியல் கொள்களைகளுக்கும் அப்பால், இது நேருவின் புத்திஜீவித நேர்மையையும், மனிதத்தையும் துல்லியமாக காட்டுகின்றன. ஆனால்,இதோ பெரியாரின் வாரிசு, திராவிடத் தந்தை என அழைக்கப்படும் கருணாநிதி (மற்றும் இன்று உங்களைப்போன்றவர்கள்) பாசிச வடிவமான ஆஸ் எஸ எஸ் ஜ ஒரு இந்து கலாச்சார இயக்கம் என அறிவித்ததுடன்,சோவினிச விஜேபியுடன் வெட்கமற்ற முறையில் கூடினார். இவை எதை அறிவுறுத்துகின்றன. உண்மையில் நேரு அன்று ஒரு வளமான குடும்பத்தின் பிரதிநிதியாக இருந்தபோதும் அவர் புத்திஜீவித நேர்மையை இழந்துவிடாதிருந்தார், வக்கிரத்தன்மை இல்லாதிருந்தார்.

ஆனால் ஒரு ஏழ்மையான ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்து, பல கஸ்டங்களை தன் வாழ்நாளில் அனுபவித்த கருணாநிதி இறுதியில் என்ன செய்தார் ? நான் இங்கே இருவரும் எழுந்த புறநிலைமைகளை சுட்டிக்காட்டுவது அவர்கள் அணைத்துக்கொண்ட கருத்தியலின் தன்மையையும்,தனிப்பட்ட குணாதிசயங்களயும் சுட்டிக்காட்டவே. 80 களின் பின்னரான பூகோளமயமாக்கத்தின் அபிவிருத்தியின் பொருளாதார மாற்றங்களுடன் சுயபொருளாதாரம் பற்றி தம்பட்டம் அடித்த பின்தங்கிய நாடுகளெங்கும் வெளிநாட்டு முதலீடுகளை கவரும் பொருளாதார திட்டத்திற்கு பாதைதிறந்தன் பின்னர் அந்த நாடுகளில் அரசியலில் செல்வாக்கு செலுத்திய ஒரு குறிப்பிட்ட தட்டினர் , அந்த முதலீடுகளை தங்கள் மாநிலங்களுக்கு கவர்ந்ததன் ஊடாக பெரும் செல்வத்தை முடக்கிக்கொள்ளக்கூடியதாக இருந்தது, இந்த அடிப்படையில் தீடார் பணக்காரன் ஆன கருணாநிதி தன் சொந்த நலன்களுக்காக, தன் வாழ்நாள் பூரா எதை எதிர்த்து போராடினாரோ (அல்லது போலி நாடகம் ஆடினாரோ) அதை இன்று வெட்கமற்ற முறையில் கைவிட்டார். எப்படி இது சாத்தியமானது ? ஏன் ? உண்மையில் பரந்துபட்ட ஏழை மக்களின் விழிப்புணர்வையிட்டு அல்லது நகரப்புற உழைக்கும் மக்களின் அபிவிருத்தியினை இட்டு மிக நனவாக இருக்கிறார். தன் செல்வங்களின் நலன்களை இறுதியில் பாதுகாக்க போகிறவர்கள் பிற்போக்கு பாசிச சக்தியான அவரின் ‘இந்து கலாச்சார இயக்கம் ‘ தான் என்பதை பரந்துபட்ட சுரண்டப்படும் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை கண்டு பயம் கொள்ளும் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெரும் பிற்போக்கு பணக்காரர்களைப்போல் அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். பெரியாரும் கம்யூனிச கருத்துக்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தனது சொந்த வர்க்கத்தின் நலன்களைப்பேணவே இப்படியான கிளர்ச்சிகர நாத்தீகவாதம் மற்றும் குறுகிய ஜாதி எதிர்ப்பான ‘பார்பனிய எதிர்ப்பு ‘ பிரச்சாரங்களில் சமூக கேள்விக்கு விடை தேடிய அன்றைய இளம் தலைமுறையை கட்டிப்போட்டார். மேலும் இதனடிப்படையில் கருணாநிதியின் சீரழிவு அவரது காலவதியான பிற்போக்கு பழைமைவாத சிந்தைனைப்போக்கான சோவினிச வடிவத்தை ஒத்த பெரும் திராவிட ‘ ‘பார்ப்பனிய எதிர்ப்பு ‘ ‘ என்ற கருத்தியலுடன் இணைந்திருக்கின்றன. ஒரு ஜாதி அமைப்பு அல்லது வர்க்க சமூகத்தின் தோற்றத்தின் வரலாற்றினை புறநிலையாக புரிந்துகொண்டு இன்று பரந்துபட்ட மக்களை சுரண்டி, ஒடுக்கும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக சமத்துவமான சமூகத்தை சமைக்கும் வல்லமை கொண்ட சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கத்தின் தலைமயின் கீழ் நிலப்பிரபுத்து காட்டு மிராண்டித்தனங்களால் இன்னும் ஒடுக்கப்படும் அனைத்து மக்களையும் அணிதிரட்டி அனைத்து காட்டுமிராண்டித்தனங்களையும் முடிவுகட்ட போராடாமல், குறுகிய முறையில் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்களை இன,மத,ஜாதி என்ற அடிப்படையில் மனிதனின் பிறப்பை வைத்து அவனை உயர்த்தும், இழிவுபடுத்தும் பிரிக்கும் கருத்தியல் போக்குகளின் பிற்போக்குத் தன்மையையும் அது எடுத்துக்காட்டுகிறது. ஜாதி அடிப்படையை வைத்து இன்று ஒரு மனிதனை உயர்த்துவதும் இழிவுபடுத்துவதும் வெறுப்பதும் எவ்வளவு பிற்போக்குத்தனமான குறுகிய செயல். ஒரு உயர்ந்த அர்த்தத்தில் அதில் சோவினிச தன்மையும் இருக்கிறது என குறிப்பிடலாம். இன்று அனைத்து காலாவதியான பிற்போக்கு கருத்தியல் சிந்தனைகளையும் அணைத்துக்கொண்டவர்களும், காலவதியான கருத்தியல் சிந்தனைகளுக்காக அன்று போராடி இன்றைய புதிய மாற்றங்களின் ஊடாக திடார் பணக்காரர்களாக உயர்ந்தவர்களும் அதையொத்த பிற்போக்கு சக்திகளை வெளிப்படையாக ஆதரிக்கும் சீரழிவினைத்தான் அடைந்துகொண்டிருக்கிறார்கள். மீண்டும் விடயத்திற்கு வருவோம், ராஜதுரை மற்றும் ஏனைய ஸ்ராலினிஸ்ட்டுகளின் பயங்கரவாத்திற்கான ஆதரவினை கண்டிக்கும் அதே நேரம் உண்மையில் உங்களது அந்தக் கண்டனம் பரந்துபட்ட மக்களின் மீதான அக்கறையில் இருந்து எழவில்லை என்பதை உங்கள் கூற்றுகள் நிரூபிக்கவில்லையா ? ‘ ‘இந தப பத திரிக கை வரிசையில நான சேர க காத ஒரு பத திரிக கை இந துஸ தான டைம ஸ . வீர சங வி என ற அதன ஆசிரியர் எழுதிய தலையங கத தைப பாருங கள . இதையேதான நானும வழி மொழிகிறேன . ‘ ‘ என நீங்கள் குறிப்பிடும் இந்தப் பத்திரிக்கையின் ஒரு சிடுமூஞ்சித்தனமான தாக்குதலை ஞாபகப்படுத்த மட்டும் அனுமதியுங்கள், ஒரு சுயாதீன திரைப்பட இயக்குனரான தீபா மேத்தாவின் அடிப்படை கலைத்துவ மற்றும் புத்திஜீவித ஜனநாயக உரிமை வலதுசாரி இந்துத்துவ பாசிச அமைப்புகளால் தாக்கப்பட்டபோது அதை பாதுகாக்காமல் அந்த பாசிஸ்டுகளுடன் இணைந்து அவரைத் தாக்கியது மட்டுமல்ல,அந்த பிரச்சனைக்கு எண்ணை ஊற்றியதுடன், அந்த திரைப்பட இயக்குனரை இழிவுபடுத்திய ஒரு பத்திரிக்கைதான் நீங்கள் வழிமொழியும் இந்த இந துஸ தான டைம்ஸ். ஆனால் அப்போது தீபா மேத்தாவின் கலைத்து சுதந்திரம் தாக்கப்பட்டபோது அதையிட்டு எதையுமே நீங்கள் எழுதவில்லை. நீங்கள் யார் என்பதை இவைகள் அம்பலப்படுத்தவில்லையா ?

றொமிலா தர்பர்,பனிக்கர் போன்ற உலகப்புகழ் பெற்ற இந்தியாவின் முன்னணி வரலாற்றாசிரியர்கள் ‘இடது சாரிகள் ‘ என்பதற்காக பதவிகளில் இருந்து நிர்பந்தமாக அகற்றப்பட்டதுடன் அவர்களது புத்தகங்களை வெளிக்கொணருவதற்கு தடைவிதித்தனர் இந்த விஜேபியும் அதனது வேதகால வேதாளங்களும். நீங்கள் இதை அறிந்திருப்பீர்க்ள். இன்று நீங்கள் இந்துத்தவவாதிகளின் அடிப்படையில் இருந்து பேராசிரியர்களின் அனைத்து புத்திஜீவித பங்களிப்பையும் மறுத்துவிட்டு அவர்கள் ‘இடது சாரிகள் ‘ மற்றும் நேருவழி மற்றும் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர்கள் என்பதற்காக தாக்குவதன் உள்நோக்கம் உங்கள் நேர்மையற்ற வெட்கம்கெட்ட வலதுசாரித் தனத்தை அம்பலப்படுத்தவில்லையா ? நீங்கள் இவர்களை தாக்குவது ஒரு தீவிர வலதுசாரி ஜனநாயக விரோத நிலைப்பாட்டில் இருந்தாகும் என்பதை மேலும் சொல்லத் தேவையில்லை. திண்ணைபோன்ற பெரியாரிசத்தின் வாரிசுகள் என சொல்லிக்கொள்ளும் ஆசிரியர்கள் கொண்ட சஞ்சிகை இப்படியான பிற்போக்கு கருத்துக்களை ஊக்குவிப்பது அவர்களது சொந்தச் கருத்தியல் சீரழிவினையும் படம் பிடித்துக்காட்டுகிறது.

ராஜதுரை போன்றவர்களின் இன்றைய படுகேவலமான சீரழிவென்பது ஸ்ராலினிசத்தின் சீரழிவுடன் தொடர்புபட்டிருக்கின்றன. இவர்களை ‘கம்யூனிஸ்ட்டுகள்,மார்க்சிஸ்டுகள் ‘ என்ற அடைமொழியில் நீங்கள் அழைப்பது உங்கள் வரலாறு பற்றிய அறிவீனத்தை அல்ல மாறாக உங்களது புத்திஜீவித நேர்மையீனத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உண்மையில் நீங்கள் கூற வரும் கருத்தினையிட்டு அக்கறை கொண்டவராக இருந்திருந்தால்,இவர்களின் இன்றைய சீரழிவின் மூலங்களையும் வரலாற்றுரீதியாகவும், புறநிலைரீதியாகவும் சுட்டிக்காட்ட முனைந்திருப்பீர்கள். அது உங்களுக்கு அநாவசியமாக இருந்தது ஏனெனில் மனித குலத்தின் வரலாற்று நலன்களின்பால் உங்களுக்கு அக்கறையிருக்கவில்லை.

மேலும், பெரியாரின் கருத்தியலின் காலவதியான தன்மைக்கும், அரசியல் மற்றும் தன் சொந்த நலன்களை பேணுவதற்காக கலைஞர்(தென்கிழக்காசியாவின் பெரும் பணக்காரக் குடும்பங்களில் இன்று அவரின் குடும்பமும் ஒன்றாக இருக்கிறது) வலதுசாரி இந்துத்தவத்தை ஆதரித்த சீரழிவுக்கும்,கடந்தகால குட்டிமுதலாளித்துவ இடதுகள் வலதுசாரிகளாக பரிணமித்த சீரழிவுக்கும், ரஷ்சியாவின் உடைவிற்கும் தொடர்பில்லையா ? உண்டு. மட்டுப்படுத்தப்பட்ட முறையில் அன்று இடதுசாரி வார்த்தையாலங்களை அடித்தவர்களும், ரஷ்ய இலக்கியங்கள் பற்றியும்,வொறன்ஸ்கியினை பற்றியும், ட்ரொட்ஸ்கியினை பற்றியும் சாடைமாடையாக எழுதிய ராஜதுரை ஏதோவொருவித பயங்கரவாத இயக்கங்களின் பிற்போக்கு செயல்களை பாராட்டுவதும் அல்லது அதுபோன்ற பிற்போக்கு கருத்துக்களை இன்று அணைத்துக்கொண்டதும் அல்லது தீவிர வலது நோக்கிய திருப்பமும் அவருக்கு மட்டும் ஏற்பட்ட ஒரு நிகழ்வல்ல. பின்நவீனத்துவம் போன்ற மனித சமூக அபிவிருத்திக்கு எதிரான பிற்போக்கு சிந்தனைகள அணைத்துக்கொண்ட அனைவரும் இன்று ஒரே கோட்டில் தான் பயணித்துக்கொண்டுள்ளார்கள். இது உங்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியதே. இவைகளை ஆழமாக ஆராயமல் அதற்கான புறநிலை மாற்றங்களையும் குறிப்பிடாமல் ஒரு மனிதனின் சீரழிவினை விளக்கப்படுத்திவிட முடியாது. ஒரு பரந்த அர்த்தத்தில் ஒரு மனிதனின் சீரழிவுக்கும், அவன் கொண்டிருந்த கருத்தியலுக்கும்,அவன் இளமையில் கடைப்பிடித்த நேர்மையீனத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு.

ஒரு முக்கிய விடயம், ‘கம்யூனிஸ்டுகள்,மார்க்சிஸ்ட்டுகள் ‘ என நீங்கள் அழைப்பவர்கள் எப்போதும் மார்க்சிஸ்டுகளாக இருக்கவில்லை மாறாக அவர்கள் ஸ்ராலினிஸ்ட்டுகளாகவும், மாவொயிஸ்ட்டுகளாகவும் இருந்தார்கள், இருக்கிறார்கள். நீங்கள் ஒரு இந்தியர் என்ற முறையிலும், ஒரு பத்திரிக்கையில் எழுதும் ஆசிரியர் என்ற முறையிலும் நவீன இந்திய வரலாற்றினை சிறிதாவது அறிந்திருப்பீர்கள் என கருதுகிறேன். சரி அப்படியில்லாவிட்டாலும்,இருபதாம் நூற்றாண்டின் உலகின் முக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான நேருவினையாவது படித்திருப்பீர்கள் எனக்கருதுகிறேன். ஆனால் உங்கள் கூற்றுகள் கூட அவரின் எந்தப் புத்தகத்தையும் திறக்காத நபர்போலவே இருக்கிறது. அவரின் புகழ்பெற்ற ஜெயிலில் இருந்து மகளுக்கு எழுதிய கடிதங்களையாவது படிக்க முயலுங்கள், வரலாற்றை சிறிது ஞாபகப்படுத்தவாவது உதவிபுரியலாம்.

அவர் அதில் ரஷ்ய புரட்சி பற்றியும்,ஸ்டாலினிசம் பற்றியும் அவர் தெளிவாக நேர்மையுடன் குறிப்பிடுவதை படியுங்கள். அன்று ஸ்டாலினிசம் ரஷ்யப் புரட்சியை ஒரு தேசியப் புரட்சியாகவே பார்த்தது ஆனால் நேரு அதை லெனின்-ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடான ஒரு சர்வதேசப் சோசலிசப் புரட்சியின் ஒரு பாகமாகவே அது இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார். அன்றைக்கு தாராளவாத நேருவுக்கு இருந்து புத்திஜீவித நேர்மைகூட அன்றைய ஸ்ராலினிஸ்ட்டுகளுக்கே இருக்கவில்லை. இன்று அவரது வாருசுகளான வலது நோக்கி சீரழிந்த ஸ்ராலினிஸ்டுகளிடமும்,உங்களிடமும் எப்படி இருக்க முடியும் ? அவர்களின் இடது வார்த்தையாலங்கள் எல்லாம் ரஷ்ய உடைவுடன் காணமல் போய்விட்டதுடன் மற்றும் ரஷ்ய இருந்தபோது, சுய பொருளாதராத்தை கட்டி எழுப்புகிறேன் மற்றும் அணிசேரா நாடு என முதுகெலும்பு உள்ள நபராய் நடித்துக்கொண்டு திரிந்த பின்தங்கிய முதலாளித்து நாடுகளான இந்தியா மற்றும் கியூபாக்களே இன்று அவர்களின் எஜமான்களின் கால்களில் சரணாகதி அடைந்துவிட்டனர் எனும்போது, அதன் வால்களாக தொங்கிய இன்றைய குட்டிமுதலாளித்துவ தேசிய விடுதலை மற்றும் பிரிவினைவாத இயக்கங்களும், அவர்களின் அன்றைய ‘இடது சாரி ‘ ஸ்டாலினிச,மாவொயிச,பின்நவீனத்துவ மற்று பெரியாரிச ‘புத்திஜீவிகளும் ‘ எம்மாத்திரம். இவர்கள் தான் இன்று நேரடியாக ஏகாதிபத்திய முதலாளித்துவங்களின் நலன்களினை பேணும் பாதுகாவலர்களாகவும், தீவிர வலதுபக்கத்தை நோக்கி நகர்ந்துகொண்டுள்ள முக்கிய நபர்களாகவும் இருப்பதுடன், பரந்துபட்ட மக்களின் புத்திஜீவிகளின்,கலைஞர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை துடைத்துக்கட்டும் முன்னணி நபர்களாகவும் இருக்கிறார்கள். இது இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு போக்காகும். இன்று உங்களைப்போன்ற பத்திரிக்கைத் துறை நபர்களும், புத்திஜீவிகளும்,வரலாற்று ஆசிரியர்களும், இலக்கிய ஆசிரியர்களும் மனித சமூகத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்திகளுக்கு எதிரான ஜனநாயக விரோத இந்துத்துவத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும், பயங்கரவாதங்களுக்கும், பிரிவினைவாத இயக்கங்களுக்கும்,ஏகாதிபத்தியங்களின் காட்டுமிராண்டித்தனமான மறுகாலனித்துவ வெளிநாட்டு அரசியல் கொள்கைகளுக்கும் வக்காலத்து வாங்குவதை நோக்கி நகர்வது அன்று நேரு மற்றும் உலகெங்கும் இருந்த ஏனைய தாராளவாத புத்திஜீவிகளுக்கு இருந்த நேர்மையான புத்திஜீவித பாரம்பரியம் உலகெங்கும் அழிந்துகொண்டிருப்பதை பறைசாற்றுகிறது. உங்களுடைய இந்த வலது நோக்கிய மாற்றங்களையும் புரிந்துகொள்வது முக்கியமானது.

அறிவற்ற, ஆழமற்ற வலதுசாரி கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளையும் நீங்கள் பிரசுரிப்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல அல்லது நீங்கள் ஏதோ குழும்பிப்போய் இருப்பதைக் காட்டவில்லை மாறாக ஸ்ராலினிஸ்டுகளின் வலது நோக்கிய நகர்வைப்போலவே, பெரியாரிசம் மற்றும் திராவிடம், தலித்தியம்,மாவொயிசம் பேசிய உங்களின் இந்த வலது நோக்கிய நகர்வானது உண்மையில் உங்கள் மத்தியதர வர்க்க மற்றும் குட்டிமுதலாளித்துவ குறுகிய நலன்களுடனும் இன்றைக்கு புறநிலையில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களுடனும் தொடர்புபட்டிருக்கின்றன.

குறுகிய நலன்களை உடையவர்கள் எப்போதும் குறுகிய முறையிலே உலகை பார்க்கிறார்கள்,புரிந்துகொள்ள முனைகிறார்கள். தமது குறுகிய நலன்களுக்கு ஏற்பவே தமது கருத்தியலையும், சிந்தனைகளையும் வடிவமைத்துக்கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு அவர்களது மூக்குக்கு மேலே எதுவுமே தென்படுவதில்லை. எப்போதும் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் அவர்கள் தமது அறிவினை வைத்திருப்பதும், எழுதுவதும்,படிப்பதும் தங்களுக்கு இருக்கும் வெறுப்பினை தீர்த்துக்கொள்வதற்கும், தங்கள் நலன்களை அடைவதற்காகவுமே இருந்துவருகிறது. இவர்கள் எப்போதும் தங்கள் குறுகிய நலன்களுடன் திருப்திப்பட்டுக் கொள்வதுடன் அதற்குள்ளே எல்லாவற்றையும் முடக்கிக்கொள்வார்கள். தங்கள் குறுகிய நலன்களை அடிப்படையாக கொண்ட இந்த குட்டிமுதலாளித்துவ பகுதியினர் எப்போதும் வரலாற்று அபிவிருத்திக்கு எதிரான பழமைவாதத்தினை ஆதரிக்கும் நபர்களாகவே இருப்பார்கள். சக்கு இழுக்கும் மாடுகள் போலவே அவர்களது சிந்தனை, செயல்பாடு,இயக்கம், கருத்து அனைத்தும் வடிவமைந்து இருப்பதை ஒருவர் காணமுடியும். இன்று தம்மை ஏதோவொரு விதத்தில் ‘இடதுசாரி ‘ என சொல்லிக்கொண்டு இந்த இணைய சஞ்சிகை மட்டுமல்ல பல சிற்றிதழ்களும், பத்திரிக்கைகளும்,சஞ்சிகைகளும் (வரலாற்றின் முற்போக்கான கருத்துக்களையும்,நேர்மையான வரலாற்று ஆசிரியர்களின் ஆய்வுகளை எதிர்க்கும்) பழமைவாதத்தின் தத்துவங்களை வரிந்துகொண்டு இருப்பதை ஒருவர் காணமுடியும்.

பூகோளமயமாக்கம் அதைத்தொடர்ந்து உலகெங்கும் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடிகள்,பொறிவுகள் மாற்றங்கள் அன்றைக்கு வசதியாக இருந்த ஒரு மத்தியதர தட்டினை தெருவில் தூக்கியெறிந்துள்ளதுடன்,வசதிபடைத்த சிலரினை மட்டும் செல்வந்தர்களாக ஆக்கியுள்ளது. இது, என்றுமில்லாதவாறு இந்த இரு தட்டினரின் அதிவலதுநோக்கிய திருப்பத்திற்கும் பாதையை திறந்துவிட்டுள்ளது. இந்த புறநிலை மாற்றங்களின் ஒரு காரணிதான் காங்கிரசின் முடிவினையும்,வலது சாரி இந்துத்துவ பாசிச அமைப்புகள் ஆட்சியை தீர்மானிக்கும் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற்றதையும் உருவாக்கின. உண்மையில் இந்த புறநிலை மாற்றங்கள் இந்தியாவில் பாரிய நெருக்கடிகளை கட்டவிழ்த்துவிட உள்ளன, இது இந்திய துணைக்கண்டம் துண்டாடப்பட்டபோது ஏற்பட்டதைவிட மேலான பாரிய இரத்தக் களரிகளை சிருஷ்டிப்பதை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளன. இந்த எரியும் கணத்தில், என்னைப்போன்ற சிந்திக்கும் இளம் தலைமுறை உண்மையை நோக்கி நகர்வதனை அல்லது சமூக கேள்விகளுக்கு விடைதேடுவதனை தடுப்பதன் ஒரு பாகமாகவே உலகெங்கும் உங்களைப்போன்ற குறுகிய நலன்களைக் கொண்ட நேர்மையற்ற புத்திஜீவித பகுதியினரும், குட்டிமுதலாளித்துவ தட்டுக்களும் வலதுசாரி நிலைப்பாட்டில் இருந்து, ஸ்ராலினிசத்தை உண்மையான மார்க்சியததுடன் சமன்படுத்தி சர்வதேச சோசலிச புரட்சி கருத்துப்பாட்டின் மீது தாக்குதல் செய்வதுடன், வரலாற்று உண்மையை மழுங்கடிக்க முனைகிறார்கள்.

இன்று இந்தியாவைத் இன்னும் துண்டாடுவதா அல்லது ஒன்றாக வைத்திருப்பதா தமது நலன்களை பாதுகாக்க சாதகமானது என்பதை நோக்கி இந்திய வர்த்தக சமூகம் சிந்திக்க நகர்ந்துகொண்டுள்ள நிலைமையில் ஆப்கான் மீதான அமெரிக்காவின் யுத்ததமும்,மூன்றாம் உலக யுத்ததிற்கான மேகங்களும், அதன் அழுத்தங்களும் எரிந்துகொண்டிருக்கும் இந்திய துணைக்கண்டத்தில் பாரிய நெருக்கடிகளை உண்டாக்க இருக்கிறது. இந்த நெருக்கடிகள், இந்தியாவின் ஆளும் கன்னைகளின் பிற்போக்கு மூலகங்களை மதப் பிரிவினைவாத கலவரங்களை தூண்டுவதற்கு உந்துகின்றன. இவர்களின் இந்த அதிதீவிர வலதுசாரி போக்கு மேலும் பிரிவினைவாத கலவரங்களுக்கான காரணிகளாகவும், அப்பாவி மக்களை கொல்வதன் ஊற்றாகவும் இருக்கப்போகின்றன.

‘ ‘பி.ஜே.பி பாக்கிஸ்தானுக்கு எதிரான அதன் போரில் ஈடுபடும் அதன் நிலையை உக்கிரமடையச் செய்யவில்லை என்றால், தற்போதைய நெருக்கடியைத் தொடர விரும்பும் பலமான குறிகாட்டலாக, பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்கள், கோத்ராவில் இந்து செயல்வீரர்கள் மீதான தாக்குதல், பாக்கிஸ்தான் உளவுப் பிரிவினரால் முஸ்லிம் விரோத கலவரத்தைத் தூண்டிவிடவும் இந்தியாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவுமான நோக்கத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார்கள். இந்தக் கூற்று இரண்டு காரணங்களுக்காக செய்யப்பட்டது: பாக்கிஸ்தானுடனான குரோதத்தை விசிறிவிட மற்றும் குஜராத்தில் வகுப்புவாத படுகொலைக்கு பி.ஜே.பி-ன் பொறுப்பை மூடி மறைக்க ஆகும். ‘ ‘ என ஒரு சோசலிச இணைய சஞ்சிகை குறிப்பிடுகிறது.

இதைவிடுத்து, ‘பாகிஸ்தானின் உளவு நிறுவனத்தின் தூண்டுதலின் பேரில் முஸ்லீம்கள் செய்த படு கொலையால் இந்துக்கள் கோபமடைந்தனர் ‘ என அவர்களின் கூற்றுக்களை எதிரொலிப்பது வெளிப்படையாக நீங்கள் யார் என்பதை சொல்லிவிடுகிறது. ‘பெரியாரிசம், ஸ்ராலினிசம், மாவெயிசம், திராவிடம்,நேருயிசம்,காஸ ட்ரோயிசம், தலித்தியம், பின்நவீனத்துவம் மற்றும் இத்தியாதி,இத்யாதி ‘ ‘ பேசிய நபர்களின் தீவிர வலதுநோக்கிய திருப்பமும் இந்த புறநிலை மாற்றங்களுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இன்னும் சில நாட்களில் ஜனநாயக விரோத சக்திகளின் பிரதிநிதிகளாக நீங்கள் வலம் வருவதை வெளிப்படையாக மக்கள் காண்பார்கள். அன்று நீங்கள் அணைத்துக்கொண்டு பிற்போக்கு அல்லது காலாவதியான மேற்காணும் கருத்தியல்களின் தர்க்கவியல் முடிவு அதுவாகத்தான் இருக்கும்.

***

Series Navigation

லியோன்

லியோன்