இதழ்  • This entry is part of 42 in the series 20030615_Issue உலக நடை மாறும் ஜோதிர்லதா கிரிஜா, சென்னை. மாலை மணி ஐந்து அடித்ததும், நான் நாற்காலியை விட்டு எழுந்தேன். சந்திக்க வந் திருந்தவர்களுக்கான நேரம் அத்துடன் முடிவடைந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக நான் என் செயலர் பரந்தாமனைப் பார்த்துக் கையசைத்தேன் அந்த அசைப்பின் பொருளைப் புரிந்துகொண் டவனாக அவனும் வெளி வராந்தாவுக்குச் சென்று, என்னைப் பார்க்க வந்திருந்தவர்களை மறு நாள் வந்து சந்திப்பதற்குரிய நேரத்தையும் […]