Bobby Jindal – ஒரு அறிமுகம்

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

PS நரேந்திரன்


அமெரிக்க, லூசியானா மாநிலத்தின் அடுத்த கவர்னர் ஒரு இந்திய-அமெரிக்கராக இருக்கக்கூடும்.

ஆம். 32 வயதான Bobby Jindal தான் அந்த இந்திய-அமெரிக்கர்.

Bobby பேசுவதைக் கேட்பவர்களூக்கு தட தடத்துச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்தான் நினைவுக்கு வரும். அவ்வளவு வேக வேகமாகப் பேசுவார். நமது அரசியல்வாதிகளைப் போல அர்த்தமற்ற உளறல்களல்ல அவை. தீர்மானமான, உறுதியான, தீர்க்கதரிசனத்துடன் இருக்கும் அந்தப் பேச்சு. தான் லூசியானா மாநில கவர்னரானால் செய்வதற்கு வைத்திருக்கும் திட்டங்கள் என்னென்ன என்பது பற்றி மிக ஆணித்தரமாக ஆதாரங்களுடன் விளக்குவார். அவரிடம் லூசியானா மாநிலப் பொருளாதாரம் பற்றியோ அல்லது கல்வித்திட்டங்களைப் பற்றியோ அல்லது மருத்துவ உதவித் (health care) திட்டங்களைப் பற்றியோ கேட்டார்களானால், சட சடவென்று பதில் வரும். நான்கைந்து வரிகளில்; ஏறக்குறைய இயந்திரத் துப்பாக்கியால் சுடுவதைப் போல.

எல்லா இந்திய வம்சாவளியினரைப் போலவே, Bobbyயின் பெற்றோரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். பஞ்சாப் மாநிலத்தவர்கள். Bobby பிறந்து வளர்ந்தது எல்லாம் லூசியானா மாநிலத்தில்தான். இந்து மத நம்பிக்கைகளில் வளர்க்கப் பட்ட ஜிந்தால், தன்னுடைய கல்லூரி நாட்களில் கத்தோலிக்கராக மதம் மாறினார். Piyush என்று பெற்றோர்களால் இடப்பட்ட பெயரை Bobby என்று மாற்றிக் கொண்டதாகத் தெரிய வருகிறது.

வெறும் 32 வயதேயான Bobby Jindalஇன் track record மிகவும் impressive ஆனது. அவரின் கல்வித்தகுதியையும், வசித்த பதவிகளின் பட்டியலைக் கீழே கொடுத்திருக்கிறேன். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

1. Rhodes Scholar (Oxford)

2. Consultant for McKinsey (Management Consultancy)

3. Head of Lousiana State Dept. of Health and Hospitals (24 வயதில்)

4. Executive director or Breaux-Thomas Commision on Medicare reform (26 வயதில்)

5. President of University of Lousiana System (27 வயதில்)

6. Asst. Secretary of the federal Dept. of Health and Human Services (29 வயதில்)

லூசியானா மாநிலத்து health departmentஐ தலைமை தாங்கி நடத்துகையில், மிகவும் நஷ்டத்துடன் நடந்து வந்த Medicaid திட்டங்களை மிகுந்த லாபத்துடன் மாற்றிக் காட்டிய பெருமை ஜிந்தாலுக்கு உண்டு. பத்திரிகைகளும் அதைப் பாராட்டி எழுதி இருக்கின்றன. இத்தனை சிறிய வயதில் அவரிடம் காணப்படும் அறிவுக் கூர்மை மற்றும் நிர்வாகத் திறமை குறித்து பெரும்பாலான அமெரிக்கர்கள் வியப்படைகிறார்கள்.

பொதுவாக இந்தியர்கள், கருப்பர்கள் போன்றோர் Democratகளாக இருப்பார்கள். Republican கட்சியில் அதிகம் வெள்ளையர்களே இருப்பதாக ஒரு கருத்து இருக்கிறது. பணக்காரர்களின் கட்சி, immigrant களுக்கு எதிரான ஒரு கட்சி என்ற பொதுவான எண்ணம் வெள்ளையர் அல்லாதவர்களூக்கு உண்டு. அதே சமயம் ஆச்சரியப் படத்தக்கவகையில் இந்தியர்களூம், கருப்பர்களும் Republican கட்சியில் தென்படத்தான் செய்கிறார்கள். (உ-ம். Colin Powel, Condelezza Rice).

Bobby Jindalஐப் போலவே Republican கட்சியில் புகழ் பெற்ற இன்னொருவர் Dinesh D ‘souza. ரொனால்ட் ரீகனுடன் பணிபுரிந்தவர். அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது. Dinesh D ‘souza பற்றி இன்னொரு சமயத்தில் விளக்கமாக எழுதுகிறேன்.

லூசியானாவில் 30 சதவீத கருப்பர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஆதரவே Bobby Jindalக்கு உண்டு என்பது கவனிக்கப் பட வேண்டிய விஷயம். Bobbyயின் ultra concervative கொள்கைகள் கருப்பர்களை மிகவும் அச்சத்திற்குள்ளாக்கி இருக்கிறது என்றால் மிகையில்லை. ஏறக்குறைய ஒரு பழுப்புத் தோலுடைய வெள்ளை மனிதனின் சிந்தனைகள் ஜிந்தாலின் தேர்தல் பிரச்சாரத்தில் தெறித்து விழுகின்றன.

இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவது அத்தனை எளிதானதாகத் தொன்றவில்லை. வலிமையான போட்டியாளர்களை ஜிந்தால் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. Lt. Governor. Kathleen Blanco, Attorney General Ricahry Ieyoub, Randy Ewing போன்ற Democrat பெருந்தலைகளுடன், Hunt Downer போன்ற அவரின் Republican கட்சிப் போட்டியாளர்களையும் எதிர்த்து வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதில் ஒரே ஆறுதல், தற்போதைய லூசியானா கவர்னரான Mike Fosterஇன் ஆதரவுதான். அதே சமயம் ஒரு incumbent கவர்னரின் ஆதரவு எந்த அளவிற்கு Bobby Jindalக்கு உதவிகரமாக இருக்கக் கூடும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

சில நாட்களூக்கு முன் எடுக்கப் பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி ஜிந்தால் முதல் இடத்திலும், அவருக்கு அடுத்தபடியாக Lt. Governor. Kathleen Blanco (ஒரு சதவீதம் குறைவு) இருப்பதாகவும் தெரிகிறது. யார் வெல்வார்கள் என்பது நவம்பர் 15ம் தேதி தெரிந்து விடும். (இந்தக் கட்டுரை வெளியாவதற்கு முன்னாலேயே).

ஜிந்தால் தனது தேர்தல் நிதி குறித்து அதிகம் பேசுவதில்லை (இந்த ஒரு விஷயத்தில் அவர் இந்தியர்தான்!). ஏறக்குறைய $1.3 மில்லியன் டாலர்கள் வரை தேர்தல் செலவுக்கென திரட்டியிருக்கிறார் என்கிறார்கள் எதிரணியினர். பெரும்பாலான நிதி இந்திய-அமெரிக்கர்களிடமிருந்து வந்து குவிந்ததுதான். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களைப் பொருத்தவரை Bobby Jindalஇன் தேர்தல் ஒரு மிகப் பெரிய விஷயம். Dallas போன்ற இந்தியர்கள் பெருவாரியாக வாழும் நகரங்களில் தேர்தல் நிதிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பெருவாரியாக நிதி திரட்டப் பட்டது. ஏறக்குறைய 40 சதவீதத்திற்கும் மேலான நிதி இந்திய-அமெரிக்கர்களிடமிருந்து திரட்டப் பட்டதுதான். இதில் பெரும்பகுதி அமெரிக்காவின் மற்ற மாநிலங்களிலிருந்துதான் வந்தது என்பது கவனிக்கப் பட வேண்டியது. அவரின் மத மாற்றத்தையோ, பெயர் மாற்றத்தையோ, தன் பஞ்சாபி கலாச்சாரத்தைத் தூக்கி எறிந்தது பற்றியோ இந்தியர்கள் யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அவர்களைப் பொருத்தவரை Bobby Jindal ஒரு ‘Political Pioneer ‘.

பெரும்பாலான லூசியானா மாநிலத் தொழிலதிபர்கள் ஜிந்தாலைத் தேர்ந்தெடுப்பதை விரும்புகிறார்கள். அளவில்லாத புகழாரம் அவர்களிடமிருந்துதான் வந்திருக்கிறது. வரி விலக்கு பற்றி பாலிசிகளில் ஜிந்தாலின் கொடி மற்ற போட்டியாளர்களின் கொடிகளை விடவும் உயரத்தில் பறக்கிறது. அதையும் விட மிகப் பெரிய பலம், அவருக்குக் கிடைத்திருக்கும் பத்திரிகைகளின் ஆதரவுதான். லூசியானாப் பத்திரிகைகள் ஜிந்தாலைக் கண்டபடி புகழ்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று. New Orleans Times-Picayuneஇல் இருந்து,

‘Mr. Jindal possesses keen intelligence, boundless energy, a knack for winning people over and getting things done. To meet him is to be impressed ‘

நிற வேற்றுமை இன்னும் காணப்படும் அமெரிக்காவில், பழுப்புத் தோலுடைய மனிதரான ஜிந்தாலுக்கு எதிரான கருத்துக்கள் இல்லாமலில்லை. பெரும்பாலான போட்டி Republican வேட்பாளர்கள் முதலில் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. போட்டியிலிருந்து விலகியவர்களும், மற்ற Republican வேட்பாளர்களுக்குதான் ஆதரவு அளித்தார்கள். ஜிந்தாலின் இந்தியப் பின்புலம் அவர்களை முகம் சுளிக்க வைத்தது.

அதே சமயம், ஜிந்தால் தன்னுடைய இந்தியப் பின் புலத்தை ஒரு வலிமையாகத்தான் கருதுகிறார். தேர்தல் வேட்பு மனுவில், race என்ற இடத்திற்கு எதிராக எதுவும் பதிலளிக்காமல் காலியாக விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தான் நிற வேற்றுமைக்கு எதிரானவன் என்பதை அவர் விளக்க மறுத்ததில்லை.

ஜிந்தாலின் வெற்றி Republican கட்சிக்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுக்கும். தாங்கள் வெள்ளையர்களின் கட்சி மட்டுமே என்ற எண்ணத்தை இவரின் வெற்றியின் மூலம் மாற்றிவிட இயலும் என்பதும் ஒரு காரணம். ஜிந்தால் தோற்றாலும், ஜெயித்தாலும் Republican கட்சிக் கொரு Rising Star கிடைத்திருக்கிறார். அது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் President Bushக்கு உதவிகரமாக இருக்கக் கூடும்.

அமெரிக்க Constitution, அமெரிக்காவில் பிறந்த ஒருவர் மட்டுமே அந்நாட்டின் ஜனாதிபதியாக வர முடியும் என்று வரையறுத்திருக்கிறது.

Bobby Jindal அமெரிக்காவில் பிறந்தவர்.

Who Knows ?….

——————————-

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்