A Travel to Grand Canyon (ஃக்ராண்ட் கன்யானுக்குள் ஒரு பயணம்)

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

செந்தில்



எதனால் எப்படி வந்தடைந்தான் மனிதன்
இந்த காலக்கண்ணாடியில் தன் முகம் பார்க்க
நோக்குடன் காற்றில் பறக்கும்
இலவம் பஞ்சின் விதையாகவோ
நோக்கற்று காற்றில் திரிந்தலையும்
பறவையின் சிறகாகவோ
ஓ மகா மாயே! ஓ மகா மாயே!
எங்கும் உன் அழகு எதிலும் உன் எழில்
ஒவ்வொரு கணமும் ஒரு தோற்றம்
ஒவ்வொரு கோணமும் ஒரு வண்ணம்
எதற்க்காக இப்பெரும் ஓவிய கலசம்
சுற்றி சுற்றி சுற்றி வளைத்து சுருங்கி பின் பெருகி
வளைத்து வளைத்து வாரி வரித்து வாரி வளைத்து
வரித்து வரித்து நீரும் காற்றும் சேர்ந்திழைத்த
பூமித்தாயின் பெரும் உள்ளம்
ஓராயிரம் கோடி ஆண்டு கடுந்தவம் செய்து
காலமயக்குயவன் செதுக்கிய கருவூலம்!

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

செந்தில்

செந்தில்