ஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி

This entry is part of 41 in the series 20110102_Issue

ஸ்டீபன் ராஜ்


அன்புள்ள ஆசிரியருக்கு

இந்த கட்டுரை தொடர் கிறிஸ்துவ மதம் பற்றி பொதுவாக கருதப்பட்டு வந்திருக்கும் பல கருத்துக்களுக்கு மாறாக இருக்கிறது.

பைபிளை படிக்கும்போது இந்த கட்டுரையின் பின்னணியில் படித்தால் அதனை ஒரு பழங்குடியினரின் ஆவனமாக கருத முடியுமே தவிர ஒரு வேதப்புத்தகமாக கருத முடியாது.

முக்கியமாக ஆறாம் பகுதியில் பைபிளில் சொல்லப்படும் ஹீரோக்கள் (ஜோசுவா) செய்த படுக்கொலைகளை பைபிளை நம்பும் இந்த காலத்திய குழந்தைகள் கூட சரி என்று சொல்வது அதிர்ச்சியானதாக இருக்கிறது.

இயேசு கூறிய நல்லுபதேசங்கள் அனைத்தும் உள்குழுவுக்கு கூறப்பட்டனவே அன்றி, பொதுவானதாக கூறப்பட்டதில்லை என்று ஆதாரத்துடன் நிறுவும்போது விசுவாசம் ஆட்டம் காண்பது உண்மையே.

மொழிபெயர்ப்பு சற்று சிக்கலானதாகவே இருக்கிறது. மூல கட்டுரையின் இணைப்பை தந்தால் நன்றாக இருக்கும்

நன்றி
ஸ்டீபன் ராஜ்

Series Navigation