அப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி

This entry is part of 35 in the series 20090926_Issue

ரபியா


அப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி எவ்வாறு படு
முட்டாள்த்தனங்களுக்கு இட்டு செல்கிறது என்பதை நன்றாக விளக்கியுள்ளது.

வஹாபிகளே சூபி வழியில் அல் குரானுக்கு விளக்கம் அளிப்பதை
எதிர்க்கின்றனர். அவர்களது சிந்தனையின் நீட்சியின் வழியில் அறிவியல்
பூர்வமாக அல் குரானுக்கு விளக்கம் அளிப்பதும் தவறானதாகவே இருக்கும்.
ஆனால், எவர்கள் சூபி வழியில் அல் குரானுக்கு விளக்கம் அளிப்பதை
எதிர்க்கிறார்களோ அவர்களே, தறிகெட்டு அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில்
அல் குரானுக்கு தஃப்ஸீர் எழுதுவதை ஆதரிக்கிறார்கள். ஏன் சூபி விளக்கம்
தவறு, அறிவியல் புத்தக அடிப்படையிலான விளக்கம் சரி என்று வஹாபிகளே விளக்க
வேண்டும்.

ரபியா

Series Navigation