மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

அருளடியான்


மலேஷியாவில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு, மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் அந்நாட்டு குடிமக்கள். இவர்கள் மீது மலேஷிய காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரபு நாடுகளில், அரபு கிறித்துவர்களுக்கு வழிபாட்டுரிமை உட்பட அனைத்து உரிமைகளும்
வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, மலேஷியாவில் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் மலேஷிய அரசு சம உரிமை வழங்க முன்வர
வேண்டும். இனவெறிக் கொள்கையைக் கடைபிடிக்கக்கூடாது. ஒரு காலத்தில் இன வெறியை கடைபிடித்த தென் ஆப்ரிக்கா மீது, இந்தியா பொருளாதார தடை விதித்தது. அது போல, தமிழர்கள் மீது இனவெறியுடன் செயல்படும் இலங்கை, மலேஷியா ஆகிய
நாடுகள் மீது இந்தியா ஏன் பொருளாதாரத் தடை விதிக்கக் கூடாது?

அருளடியான்


aruladiyan@gmail.com

Series Navigation

அருளடியான்

அருளடியான்