திரு.பிகே.சிவகுமார் கருத்தைப் படிக்கும்போது

This entry is part of 45 in the series 20071108_Issue

எஸ்.கே


அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,

திண்ணை இதழில் திரு.பிகே.சிவகுமார் மலர்மன்னன் அவர்களைத் தாக்கி எழுதியுள்ள கடிதத்தைக் கண்டேன்.

அம்மடலின் கீழ்க்கண்ட கருத்தைப் படிக்கும்போது அவர் யாரைத் தாக்க என்ணுகிறார் என்பது புரியவில்லை:

“வளவள பளபள பத்திரிகைகள் தேவைக்கு ஏற்ப எழுதச் சொன்னால் மலர்மன்னன் போன்றவர்கள் ஓடோடிப் போய் எழுத மாட்டார்களா என்ன? அப்படி யாரும் இவர்களைப் போன்றவர்களைச் சீண்டாததால்தானே திண்ணையிலும் தமிழ் சிஃபியிலும்
உட்கார்ந்து இலவச உபதேசங்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” என்று எழுதியுள்ளார்.

அக்கருத்தில் அடிநாதமாக தொனிப்பது, “அச்சுப் பத்திரிக்கைகள் எதுவும் சீண்டாத எழுத்தாளர்கள்தான் திண்ணை போன்ற இணைய இதழ்களில் எழுத வருகிறார்கள்” என்பதுதான் என்று வாசிப்பவர்களுக்குத் தோன்றுகிறது. அப்படியானால் அவருக்கு இணையப் பத்திரிக்கைகளின் தாக்கம் பற்றித் தெரியாது என்பது தெளிவாகிறது! இன்றைக்கு எல்லா அச்சு இதழ்களுமே தங்கள் இணையப்
பதிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது நாட்டு நடப்பு அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்து, விகடன், குமுதம் போன்ற இதழ்களே செய்தி சேகரிக்க இணையத்தை நாடுவது இப்போது சகஜமாகிவிட்ட நிலை. மேலும் திண்ணை இதழ் இன்று தமிழ் கூறும் நல்லுலகம் தவறாமல் காணும் வலைத் தளங்களில் ஒன்று என்பதை அத்தளத்தின் புள்ளிவிவரங்கள் சான்றுகூறித்
தெளிவாக்கும்.

மேலும் போகிறபோக்கில் வாசந்தியையும், “சீண்டாத எழுத்தாளர்கள்” லிஸ்டில் சிவகுமார் சேர்த்துவிட்டார்.

சில தனிமனிதக் காழ்ப்புணர்ச்சிகளின் மேலீட்டால் சிவகுமார் அவர்கள் மிகக் குழம்பிவிட்டார் என்று தெளிவாகத் தோன்றுகிறது!

ஆனால் அவருக்கு திண்ணை ஆசியர் குழாம் தகுந்த பதில்களை அளித்திருக்கிறார்கள். தொடர்க திண்ணையின் சிறந்த தமிழ்த் தொண்டு!

நன்றியுடன்,

எஸ்.கே


skichu@gmail.com
http://www.cyberbrahma.com/
http://blog.cyberbrahma.com/ – My English Blog
http://kichu.cyberbrahma.com/ – My Tamil Blog

Series Navigation